Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
10 ஆண்டுகளுக்கு பின் நிகழும் அரிய 'ஹைப்ரிட்' சூரிய கிரகணம்: லைவ்-ல பாக்கணுமா? அப்ப இதுல பாருங்க..
Solar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி, அதாவது இன்று நிகழவுள்ளது. இதில் சூரிய கிரகணமானது சூரியன், சந்திரன், பூமி ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது, சந்திரனின் நிழல் சூரியனை மறைக்கும் போது நிகழும். அதுவே பூமியின் நிழல் சந்திரனை மறைத்தால் அது சந்திர கிரகணம். ஒரு ஆண்டில் 4 கிரகணங்கள் நிகழும். அதில் இரண்டு சூரிய கிரகணமும், 2 சந்திர கிரகணமும் நிகழும்.
அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழவுள்ளது. அதுவும் இந்த சூரிய கிரகணமானது ஹைப்ரிட் அல்லது கலப்பின சூரிய கிரகணம் (Hybrid Solar Eclipse) என்று வானியலாளர்கள் தெரிவிக்கின்றனர். சரி, ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன, கிரகண நேரம் என்ன, இந்தியாவில் இது தெரியுமா, இதை எப்படி நேரலையில் காண்பது என்பன போன்றவற்றை இப்போது விரிவாக காண்போம்.

ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்றால் என்ன?
ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது முழு சூரிய கிரகணம் மற்றும் நெருப்பு வளைய சூரிய கிரகணத்தின் கலவையாகும். இதில் சந்திரனின் நிழல் பூமியில் முழுவதுமாக விழுந்து, நகர்ந்து பின் மாறும். இந்த சூரிய கிரகணத்தின் போது சூரியன் சில நொடிகள் நெருப்பு வளையம் போன்று காட்சியளிக்கும். இந்த ஹைப்ரிட் சூரிய கிரகணத்தை நிங்கலூ கிரகணம் என்றும் அழைப்பார்கள். ஏனெனில் இந்த சூரிய கிரகணமானது ஆஸ்திரேலியாவில் உள்ள நிங்கலூ கடற்கைரையின் பெயரில் இருந்து வந்தது.
சூரிய கிரகணம் 2023: தேதி மற்றும் நேரம்
2023 ஆம் ஆண்டின் முதல் கலப்பின சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி நிகழ்கிறது. இந்த கிரகணமானது காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 வரை நீடித்திருக்கும். இந்த ஹைப்ரிட் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியாது.
ஆனால் அறிக்கைகளின் படி, இந்த கிரகணம் மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசியாவில் ஏப்ரல் 19 ஆம் தேதி 21:36 EDT இல் தொடங்கி அதிகாலை 2:59 மணி வரை தெரியும்.
2023 ஹைப்ரிட் சூரிய கிரகணத்தை எங்கெல்லாம் காணலாம்?
ஹைப்ரிட் சூரிய கிரகணம் ஆஸ்திரேலியா, கிழக்கு மற்றும் தெற்கு ஆசியா, பசிபிக் பெருங்கள், அண்டார்டிக்கா மற்றும் இந்தி பெருங்கடல் பகுதிகளில் வசிப்பவர்கள் காணலாம். ஆனால் இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது.
இதில் நெருப்பு வளையத்தில் கிரகணம் நிகழும் போது, அது பிசிபிக் மற்றும் இந்திய பெருங்கடல் பகுதிகளில் சில நொடிகள் தெரியும். முழு கிரகணமானது மேற்கு ஆஸ்திரேலியா, கிழக்கு திமோர் மற்றும் கிழக்கு இந்தோனேசியா பகுதிகளில் மட்டுமே தெரியும்.
2023 ஹைப்ரிட் சூரிய கிரகணத்தை நேரலையில் பார்ப்பது எப்படி?
சூரிய கிரகணத்தை வெறும் கண்ணில் பார்க்கக்கூடாது. அப்படி வெறும் கண்ணில் பார்த்தால் அதிலிருந்து வெளிவரும் கதிர்களால் பார்வையை இழக்க நேரிடும். எனவே எப்போதுமே சூரிய கிரகணத்தை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தான் காண வேண்டும். அதுவும் 14-ஷேடட் வெல்டிங் கிளாஸ், ப்ளாக் பாலிமர் அல்லது அலுமினிஸ்டு மைலார் போன்றவற்றை பயன்படுத்த என்று நாசா பரிந்துரைக்கிறது. இன்னும் சிறப்பான வழி தொலைநோக்கி மூலம் காணலாம்.
ஒருவேளை உங்களால் இந்த கிரகணத்தை உங்கள் பகுதியில் காண முடியாவிட்டால், சூரிய கிரகணத்தை நேரலையில் ஒளிபரப்பும் தளங்களில் காணலாம். உங்களின் வசதிக்காக, அந்த நேரலையில் காட்டும் அந்த இணைப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதில் கூட நீங்கள் கண்டுகளிக்கலாம்.
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் எப்போது?
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி நிகழவுள்ளது. மேலும் சந்திர கிரகணங்கள் மே 5-6 மற்றும் அக்டோபர் 28-29 நாட்களில் நிகழவுள்ளன.
அடுத்த ஹைப்ரிட் சூரிய கிரகணம் எப்போது தெரியும்?
கடைசியாக ஹைப்ரிட் சூரிய கிரகணம் 2013 ஆம் ஆண்டு நிகழ்ந்தது. 10 ஆண்டுகளுக்கு பின் 2023 ஏப்ரல் 20 ஆம் தேதி ஹைப்ரிட் கிரகணம் தெரியவுள்ளது. இதனை அடுத்து 2031 ஆம் தேதி ஹைப்ரிட் சூரிய கிரகணம் நிகழும்.



Click it and Unblock the Notifications













