Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சூரிய கிரகணத்தன்று உங்க ராசிப்படி பொருட்களை தானம் செய்யுங்க.. உங்க அதிர்ஷ்டம் சூரியனைப் போல் பிரகாசிக்கும்..
Solar Eclipse 2023: அக்டோபர் மாதமானது மிகவும் சிறப்பான மாதம் என்றே சொல்லலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் சூரிய கிரகணம், மகாளய அமாவாசை, நவராத்திரி, சந்திர கிரகணம் என்று பல வருகின்றன. அதில் முதலாவதாக 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் 14 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நாளில் தான் மகாளய அமாவாசையும் வருகிறது. இதனால் இந்த சூரிய கிரகணத்திற்கு சிறப்பு முக்கியத்துவம் உண்டு.
அதுவும் இந்த கிரகணத்தின் போது சூரியன் கன்னி ராசியில் இருப்பார். இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. இதனால் சூதக் காலமும் இல்லை. இருந்தாலும், இது ஒரு வானியல் நிகழ்வு. ஜோதிடத்தின் படி, கிரகணத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.

குறிப்பாக கிரகணத்தின் தீய விளைவுகளைத் தடுக்க ஒருசில பொருட்களை கிரகண நாளில் தானம் செய்வது நல்லது. இப்போது சூரிய கிரகணத்தன்று எதை தானம் செய்தால் நல்ல பலனைப் பெற முடியும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசிக்காரர்கள் அனுமனை வழிபடுவது நல்லது. மேலும் கிரகணத்தின் மோசமான தாக்கத்தைத் தடுக்க, இந்த ராசிக்காரர்கள் வெல்லம், சிவப்பு நிற ஆடைகளை தானம் செய்யலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் தீய விளைவுகளைத் தவிர்க்க, பால், தயிர், சர்க்கரை, வெள்ளை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும். இப்படி செய்வதன் மூலம் லட்சுமி தேவி மகிழ்ச்சி அடைவார்.
மிதுனம்
மிதுன ராசியின் அதிபதி புதன். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகணம் முடிந்த பின் பசுவிற்கு தீவனம் கொடுக்க வேண்டும். இது தவிர கிரகண நாளில் பச்சை பயறு, பச்சை நிற ஆடைகள், பச்சை காய்கறிகள் போன்றவறறை தானம் செய்யலாம்.
கடகம்
கடக ராசியின் அதிபதி சந்திரன். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் பால், தயிர், வெள்ளை நிற ஆடைகள், சர்க்கரை, முத்துக்கள் போன்ற வெள்ளை நிற பொருட்களை தானம் செய்வது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியின் அதிபதி சூரியன். இந்த சிம்ம ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தின் மோசமான தாக்கத்தைத் தவிர்க்க, வெல்லம், கோதுமை, செம்பு பாத்திரங்கள், சிவப்பு அல்லது ஆரஞ்சு நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் அதிபதி புதன். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் பச்சை பயறு, பச்சை காய்கறிகள், பச்சை நிற ஆடைகள், வெண்கல பாத்திரங்கள் போன்றவற்றை கிரகண நாளில் தானம் செய்தால், தீய பலனைக் குறைக்கலாம்.
துலாம்
துலாம் ராசியின் அதிபதி சுக்கிரன். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகணத்தால் சந்திக்கும் பிரச்சனைகளைத் தவிர்க்க, பால், தயிர், சர்க்கரை, வெள்ளை நிற ஆடைகள் போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் அதிபதி செவ்வாய். இந்த ராசியை சேர்ந்தவர்கள் சூரிய கிரகண நாளில் வெல்லம், சிவப்பு நிற ஆடைகள், பழங்கள் போன்றவற்றை தானம் செய்தால், நல்ல பலனைப் பெறலாம்.
தனுசு
தனுசு ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் மஞ்சள் நிற பழங்கள், கடலை பருப்பு, மஞ்சள் நிற ஆடைகள், கடலை மாவு, மஞ்சள் தூள் போன்ற மஞ்சள் நிற பொருட்களை தானம் செய்ய வேண்டும்.
மகரம்
மகர ராசியின் அதிபதி சனி பகவான். இந்த ராசியைச் சேர்ந்தவர்கள் சூரிய கிரகண நாளில் சனி பகவானுடன் தொடர்புடைய எள்ளு விதைகள், கருப்பு நிற ஆடைகள், சீப்பு, கடுகு எண்ணெய், இரும்பு பாத்திரங்கள் போன்றவற்றை தானம் செய்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியும் சனி பகவான் என்பதால், இந்த ராசிக்காரர்களும் மகர ராசிக்காரர்களுக்கு குறிப்பிட்டுள்ளதைப் போன்றே எள்ளு விதைகள், கருப்பு நிற ஆடைகள், சீப்பு, கடுகு எண்ணெய், இரும்பு பாத்திரங்களை தானம் செய்ய வேண்டும்.
மீனம்
மீன ராசியின் அதிபதி குரு பகவான். இந்த ராசிக்காரர்கள் சூரிய கிரகண நாளில் குரு பகவானுடன் தொடர்புடைய மஞ்சள் நிற ஆடைகள், கடலை பருப்பு, மஞ்சள் நிற பழங்கள், மஞ்சள் தூள், கடலை மாவு போன்றவற்றை தானம் செய்ய வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications