Latest Updates
-
May 2026 Lucky Zodiac Signs: மே மாதம் இந்த 4 ராசிக்காரர்களுக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது.. -
சனிபகவான் வக்ர பெயர்ச்சியை தொடங்கப் போவதால் கோடீஸ்வரராகப் போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வாஸ்துப்படி, வீட்டில் மண்பானையை இந்த இடத்துல வையுங்க.. பணப்பிரச்சனையே வராது! -
அட்டகாசமான ஆந்திரா ஸ்டைல் வெள்ளரிக்காய் பப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
பண்டைய ராஜாக்களும், ராணிகளும் கூந்தலை பராமரிக்க பயன்படுத்திய பொருட்கள் என்னென்ன தெரியுமா? -
1 பாக்கெட் சேமியாவும், 3 முட்டையும் இருந்தா.. இப்படி செய்யுங்க.. குழந்தைங்க விரும்பி சாப்பிடுவாங்க.. -
வாஸ்து படி உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களை செய்தால் சீக்கிரம் கோடீஸ்வரராகி விடலாம் - ட்ரை பண்ணுங்க -
கோடையில் முகம் எப்பவும் புத்துணர்ச்சியா இருக்கணுமா? அப்ப இந்த தர்பூசணி ஃபேஸ் பேக்கை போடுங்க.. -
சாம்பார் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள்: சாம்பாரில் இவ்வளவு நன்மைகள் இருக்கா? -
மேஷ ராசியில் அஸ்தமனமாகும் புதன்: மே மாதம் இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் அபார வளர்ச்சியை காண்பாங்க..
Solar Eclipse 2023: சூரிய கிரகணத்தின் போது மறந்தும் இந்த விஷயங்களை செஞ்சுடாதீங்க...
Solar Eclipse 2023: இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் ஏப்ரல் 20 ஆம் தேதி, அதாவது இன்று காலை 07.04 மணிக்கு தொடங்கி, மதியம் 12.29 வரை நடக்கும். சூரிய கிரகணம் என்பது சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது சந்திரனின் நிழல் பூமியில் விழும் நிகழ்வு ஆகும். இந்த ஆண்டின் சூரிய கிரகணம் மிகவும் சிறப்பானது என்றே கூறலாம். ஏனென்றால் இந்த ஆண்டு ஹைப்ரிட் சூரிய கிரகணம் நிகழ்கிறது.
ஹைப்ரிட் சூரிய கிரகணம் என்பது நெருப்பு வளைய கிரகணம் மற்றும் முழு சூரிய கிரகணத்தின் கலவையாகும். இந்த சூரிய கிரகணத்தை நிங்கலூ கிரகணம் என்றும் அழைப்பர். கிரகண நிகழ்வு ஒரு அற்புதமான வானியல் நிகழ்வாக இருந்தாலும், ஜோதிடத்தில் இது மங்களகரமானதாக கருதப்படுவதில்லை. இந்து மத நம்பிக்கைகளின் படி, சூரிய கிரகணம் நிகழும் போது ஒருசில விஷயங்களை பின்பற்ற வேண்டும்.

என்ன தான் இந்த ஹைப்ரிட் சூரிய கிரகணம் இந்தியாவில் தெரியவிட்டாலும், ஒருசில நடவடிக்கைகளை நாம் தவறாது பின்பற்றினால், எவ்வித கெடுதலும் ஏற்படாது அல்லவா? கீழே சூரிய கிரகணத்தின் போது செய்ய வேண்டிய மற்றும் செய்யக்கூடாத சில விஷயங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
1. சூரிய கிரகணம் நடந்து கொண்டிருக்கும் போது, வயதானவர்கள் மற்றும் உடல்நிலை சரியில்லாதவர்களைத் தவிர, மற்றவர்கள் தூங்குவதைத் தவிர்க்க வேண்டும். ஜோதிடத்தின் படி, அவ்வாறு செய்யும் போது, அது ஒருவரின் ஆரோக்கியத்தை மோசமாக பாதிக்கும்.
2. சூரிய கிரகணத்தின் போது ஒருவர் சமைப்பதையோ அல்லது உணவு உண்பதையோ தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் அதுவும் ஆரோக்கியத்திற்கு கேடு விளைவிக்கும்.
3. சூரிய கிரகணம் நடக்கும் போது வழிபாடுகளை அல்லது கடவுள்களின் சிலைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் கிரகணம் முடிந்த பின், பூஜை அறையில் உள்ள அனைத்தையும் சுத்தம் செய்த பின்னரே வழிபாடுகளை செய்ய வேண்டும்.
4. கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சூரிய கிரகணத்தை பார்க்கக்கூடாது. மேலும் கர்ப்பிணிகள் வெளியே செல்வதை அறவே தவிர்க்க வேண்டும்.
5. வேதங்களின் படி, சூரிய கிரகணம் முடிந்த பின், ஒருவர் குளிக்க வேண்டும் மற்றும் வீட்டை துடைத்து சுத்தம் செய்ய வேண்டும்.
6. நம்பிக்கைகளின் படி, சூரிய கிரகணம் தொடங்கும் முன், குடிக்கும் நீர், சமைத்த உணவுகளில் துளசி இலைகளை போட வேண்டும்.
7. சூரிய கிரகணத்தின் போது, சூரியனை நேரடியாக காணக்கூடாது. இல்லாவிட்டால் அது பார்வையை இழக்கச் செய்துவிடும்.
8. கிரகண காலத்தில் எந்த ஒரு முக்கியமான வேலையையும் செய்யக்கூடாது.
9. முக்கியமாக சூரிய கிரகணம் நடக்கும் போது கூர்மையான பொருட்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











