Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
178 ஆண்டுகளுக்கு பின் மகாளய அமாவாசை அன்று நிகழும் சூரிய கிரகணம்: அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்!
Solar Eclipse 2023 And Mahalaya Amavasya: 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் அக்டோபர் மாதத்தில் நிகழவுள்ளது. இதுவும் இந்த சூரிய கிரகணமானது மகாளய அமாவாசை நாளில் நிகழவுள்ளது. இப்படி மகாளய அமாவாசை நாளில் சூரிய கிரகணம் நிகழ்வது மிகவும் அரிதான ஒன்றாக கூறப்படுகிறது. அதுவும் இம்மாதிரியான நிகழ்வு சுமார் 178 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்வதாக கூறப்படுகிறது.
2023 ஆம் ஆண்டின் மகாளய அமாவாசை அக்டோபர் 14 ஆம் தேதி வருகிறது. இந்த அமாவாசை நாளில் தான் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணம் நிகழ்கிறது. அதோடு இந்த கிரகண காலத்தில் சூரியனும், புதனும், புதனின் சொந்த ராசியான கன்னி ராசியில் பயணிப்பதோடு, புதாதித்ய ராஜயோகத்தை உருவாக்கியிருப்பதால், இந்த கிரகணம் இன்னும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இம்மாதிரியான கிரகணம் 1845 ஆம் ஆண்டில் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. அதோடு, இந்த அமாவாசை சனிக்கிழமையில் வருவதால், சனி அமாவாசையாகவும் இருப்பதால், இன்னும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. இப்போது ஜோதிடத்தின் படி, இந்த அற்புதமான நிகழ்வால் எந்த ராசிக்காரர்கள் நற்பலனைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
மிதுனம்
2023 ஆம் ஆண்டின் இரண்டாவது சூரிய கிரகணமானது 4 ஆவது வீட்டில் நிகழ்வதால், இந்த ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். சிக்கிய பணம் கைக்கு கிடைக்கும். பல வகையான மகிழ்ச்சியை அனுபவிப்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் வேலை பாராட்டைப் பெறும். சிலருக்கு பதவி உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. குடும்பத்தினருடன் நல்ல தரமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 10 ஆவது வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவு இருக்கும். குடும்பத்தினருடன் நல்ல நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக தொடங்கப்படும். இதுவரை சந்தித்த பண பிரச்சனைகள் நீங்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 12 ஆவது வீட்டில் கிரகணம் நிகழ்கிறது. இதனால் இந்த ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்துடன் வெற்றியையும் காண்பார்கள். பணப் பிரச்சனையில் இருந்து விடுபடுவீர்கள். புதிய வருமான ஆதாரங்களால் உங்களின் சேமிப்பு அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











