Latest Updates
-
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா?
சூரியனின் அருளால் தமிழ் புத்தாண்டின் முதல் மாதம் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது...
Sobakiruthu Tamil New Year 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் நிலைகள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதே வேளையில், நவகிரகங்களின் தலைவனாக கருதப்படும் சூரியனின் ராசி மாற்றத்தின் போது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் 12 மாதங்கள் கழித்து சூரியன் மேஷ ராசிக்குள் நுழையவுள்ளார். சூரியன் மேஷ ராசியில் நுழையும் போது தான் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது.
இந்நிலையில் 2023 ஆம் ஆண்டின் ஏப்ரல் 14 ஆம் தேதி சூரியன் மேஷ ராசிக்கு செல்கிறார். இதனால் தமிழ் ஆண்டான சோபகிருது வருடத்தின் சித்திரை மாதம் தொடங்குகிறது. சூரியனின் இந்த ராசி மாற்றத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் இந்த தமிழ் புத்தாண்டின் சித்திரை மாதத்தில் நல்ல பண வரவையும், முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
மேஷ ராசியின் முதல் வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மேஷ ராசிக்காரர்கள் தங்களின் வேலையில் நல்ல பலனைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் அலுவலகத்தில் செயல்திறனால் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு குருப்பெயர்ச்சியால் நல்ல லாபம் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல திருமண வரன் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசியின் 2 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். மேலும் சூரிய பெயர்ச்சியைத் தொடர்ந்து குருப்பெயர்ச்சியும் நிகழ்வதால், மீன ராசிக்காரர்கள் திடீர் பண வரவைப் பெறக்கூடும். இக்காலத்தில் முதலீடு செய்தால், அதில் நல்ல லாபம் கிடைககும். பேச்சு தொடர்பான துறையில் இருப்பவர்கள், அற்புதமான பலனைப் பெறுவார்கள். முக்கியமாக பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறும் வாய்ப்புள்ளது. ஏழரை சனி நடப்பதால், எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் யோசித்து எடுக்க வேண்டும். ஆரோக்கியத்தில் சிறு பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசியின் 11 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படக்கூடும். புதிய வருமான ஆதாரங்களைப் பெற வாய்ப்புள்ளது. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு இக்காலத்தில் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வணிகத்தைத் தொடங்க நினைத்தால், அதற்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications