Latest Updates
-
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்..
சூரிய பெயர்ச்சியால் தமிழ் புத்தாண்டின் முதல் மாசம் இந்த 4 ராசிக்கு கஷ்ட காலமா இருக்கப்போகுது...
நவகிரகங்களில் சூரியன் ஒவ்வொரு மாதமும் ராசியை மாற்றுவார். சூரியனின் ராசி மாற்றங்களின் போது தான் தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. ஜோதிடத்தில் நவகிரகங்களின் தலைவராக கருதப்படுபவர் சூரியன். இந்த சூரியன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல வலுவான நிலையில் இருந்தால், அவர் தொழிலில் நல்ல உயர் பதவியில் இருப்பதோடு, சிறந்த தலைமை பண்புகளையும் கொண்டிருப்பார்.
அந்த வகையில் சூரியன் 12 மாதங்களுக்கு பின் மேஷ ராசிக்கு 2023 ஏப்ரல் 14 ஆம் தேதி நுழைகிறார். மேஷ ராசியில் சூரியன் நுழையும் போது புதிய தமிழ் வருடமான சோபகிருது வருடம் பிறக்கிறது. அத்துடன் தமிழ் மாதங்களின் முதல் மாதமான சித்திரை மாதமும் பிறக்கிறது.

மேஷ ராசிக்கு சூரியன் நுழைவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 4 ராசிக்காரர்கள் இந்த சோபகிருது வருடத்தின் முதல் மாதமான சித்திரை மாதத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 12 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த சூரிய பெயர்ச்சி காலமானது வேதனை தரும் காலமாக இருக்கும். இக்காலத்தில் பல முக்கிய காரியங்களில் தடைகளை சந்திக்க நேரிடும். நிதி ரீதியாக, அதிக செலவுகளை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் பல பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
கன்னி
கன்னி ராசியின் 8 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் கன்னி ராசிக்காரர்கள் பணியிடத்தில் சற்று அதிக வேலைப்பளுவை சந்திக்க நேரிடும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலில் லாபம், நஷ்டம் என இரண்டையும் பெறக்கூடும். நிதி ரீதியாக, அதிக செலவு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண பிரச்சனையில் சிக்கி அவதிப்பட வேண்டியிருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 7 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் துலாம் ராசிக்காரர்கள் இந்த சூரிய பெயர்ச்சியால் தொழிலில் சில ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். சிலர் பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்படும். ஆனால் அந்த பயணத்தால் எவ்வித பலனும் கிடைக்காது. வியாபாரம் செய்பவர்கள், இக்காலத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதாக இருந்தால், கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டத்தை பெறக்கூடும். முக்கியமாக இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணத்தால் பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 4 ஆவது வீட்டிற்கு சூரியன் செல்கிறார். இதனால் மகர ராசிக்காரர்கள் இந்த சித்திரை மாதத்தில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். வியாபாரம் செய்பவர்கள் நஷ்டத்தை காண வாய்ப்புள்ளது. நிதி நிலையைப் பொறுத்தவரை, செலவுகள் அதிகரிக்கும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடன் பரஸ்பர புரிதல் இல்லாததால், பெரிய சண்டை ஏற்பட வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications