Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
இந்த 10 அறிகுறிகளில் ஒன்னு உங்க போனில் இருந்தாலும் உங்க போன் ஹேக் செய்யப்பட்டிருக்குனு அர்த்தமாம்...ஜாக்கிரதை!
திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியாவின் எதிர்கட்சிகளின் பல தலைவர்கள் தங்கள் ஐபோன்களில் "அரசு ஆதரவுடன் தாக்குதல் நடத்துபவர்கள் உங்கள் ஐபோனை இலக்காகக் கொண்டிருக்கலாம்" என்ற அறிவிப்பைப் பெற்றதாகக் கூறினர்.
எதிர்க்கட்சித் தலைவர்களை அரசாங்கம் பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்ப்பதாக அவர்கள் குற்றம் சாட்டி, சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பையும் விவாதத்தையும் ஏற்படுத்தினர்.

இது குறித்து ஆப்பிள் நிறுவனம் ஏற்கனவே அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. உளவு பார்ப்பது உங்கள் தொலைபேசிகளில் தங்களை மறைத்துக் கொள்ளும் அதிநவீன ஆப்களால் செய்யப்படுகிறது. ஆனால் உங்கள் போன் ஹேக் செய்யப்பட்டதா என்பதை அறிய சில அறிகுறிகள் உள்ளன.
பேட்டரி வழக்கத்தை விட வேகமாக குறைவது
உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்பட்டுள்ளதா என்பதைச் சரிபார்க்க முதல் மற்றும் எளிதான வழிகளில் ஒன்று பேட்டரியின் செயல்பாட்டைப் பார்ப்பதாகும். நீங்கள் அடிக்கடி உங்கள் மொபைலை சார்ஜ் செய்ய ஆரம்பித்திருந்தாலோ அல்லது மொபைலின் பேட்டரி வழக்கத்தை விட வேகமாக தீர்ந்துவிட்டாலோ, சில ஆபத்தான ஆப்கள் அல்லது மோசடியான ஆப்கள், பேட்டரியின் சக்தியைக் குறைக்கும்.
பின்னணியில் அதிக எண்ணிக்கையிலான ஆப்ஸ் இயங்கவில்லை என்பதை நீங்கள் முதலில் உறுதி செய்ய வேண்டும், ஏனெனில் பின்னணியில் இயங்கும் பல பயன்பாடுகள் பேட்டரியைக் குறைக்கின்றன.
போன் சூடாவது
கேமிங் அல்லது திரைப்படங்களைப் பார்ப்பது போன்ற நீண்ட நேர பயன்பாட்டின் போது தொலைபேசிகள் வெப்பமடைவது இயற்கையானது. இருப்பினும், நீங்கள் எதுவும் செய்யாமல் உங்கள் ஃபோன் வெப்பமடைந்தால், ஹேக்கர்கள் உங்கள் ஃபோனைக் கட்டுப்படுத்தும் வாய்ப்புகள் அதிகம்.
பதிவுசெய்யப்பட்ட அக்கவுண்டில் வழக்கத்திற்கு மாறான செயல்பாடு
பயனர்கள் தங்கள் தொலைபேசிகளில் Facebook, Instagram மற்றும் பிற போன்ற பல அக்கவுண்ட்டைக் கொண்டுள்ளனர். நீங்கள் செய்ததாக நினைவில் இல்லாத உங்கள் கணக்கின் போஸ்ட்டைப் பார்த்தால், அது உங்கள் மொபைல் ஹேக் செய்யப்பட்டதற்கான அறிகுறியாக இருக்கலாம். உங்கள் ஃபோனிலிருந்து மின்னஞ்சல்களை அனுப்ப/பெற முடியாவிட்டால், ஹேக்கர்கள் உங்கள் சாதனத்தை ஹேக் செய்திருக்கலாம்.
மெதுவாக வேலை செய்வது
உங்கள் ஸ்மார்ட்போன் திடீரென மெதுவாக செயல்படத் தொடங்கினால் அது முக்கிய எச்சரிக்கை அறிகுறியாக இருக்கலாம். இதனால் போன் மந்தமாக செயல்படுகிறது மற்றும் அதிக பேட்டரி ஆற்றலைப் பயன்படுத்துகிறது. இதற்கு பின்னணியில் உங்களை ஏமாற்றும் ஆப்கள் இருக்கலாம்.
தொலைபேசி விசித்திரமாக செயல்படுவது
உங்கள் ஃபோன் வித்தியாசமான முறையில் திடீரென செயல்படத் தொடங்கலாம். உதாரணமாக, ஆப்கள் அடிக்கடி செயலிழக்கின்றன அல்லது ஓப்பன் ஆகாமல் போகலாம். நீங்கள் எதுவும் செய்யாமலே போன் திடீரென ஆன் மற்றும் ஆஃப் ஆகலாம். திரையை ஒளிரச் செய்வது பொதுவாக பின்னணியில் இயங்கும் ஆப்களைக் குறிக்கிறது. இது மோசமான ஆப்களால் ஏற்படலாம்.
வினோதமான பாப்-அப்கள்
போலி வைரஸ் எச்சரிக்கைகள் மற்றும் பிற அச்சுறுத்தும் செய்திகளுக்கான புஷ் அறிவிப்புகளை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால், உங்கள் மொபைல் போன் ஆட்வேர் மூலம் பாதிக்கப்பட்டிருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம், அதன் பணிகளை முடிக்க உங்களின் உள்ளீடு தேவைப்படலாம். அத்தகைய பாப்-அப்கள் அல்லது செய்திகளை க்ளிக் செய்ய வேண்டாம்.
உங்கள் மொபைலில் ஆப்ஸ் பட்டியலைச் சரிபார்க்கவும்
பொதுவாக மக்கள் என்னென்ன ஆப்ஸைப் பயன்படுத்துகிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். உங்கள் ஸ்மார்ட்போனின் ஆப்ஸ் பட்டியலைச் சரிபார்த்து, ஸ்பைவேராக இருக்கலாம் என்று நீங்கள் நினைப்பதை உடனடியாக நீக்கவும். ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து எப்பொழுதும் ஆப்ஸைப் பதிவிறக்கம் செய்யும் போது, எழுத்துப்பிழை, டெவலப்பர் தகவல் மற்றும் பயன்பாட்டின் விளக்கத்தைச் சரிபார்க்கவும்.
மொபைல் டேட்டா வேகமாக தீருவது
உங்கள் மொபைல் டேட்டா ஆப் திடீரென அதிகரித்துள்ளதா மற்றும் வழக்கத்தை விட அதிகமாக உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். தீங்கிழைக்கும் ஆப்கள் அல்லது மென்பொருள் பின்னணியில் உங்கள் மொபைல் டேட்டாவைப் பயன்படுத்தலாம்.
உங்கள் கேலரியில் அடையாளம் தெரியாத புகைப்படங்கள் இருப்பது
உங்கள் தொலைபேசியிலிருந்து பழைய, பயன்படுத்த முடியாத புகைப்படங்களை அகற்றுவது ஒரு நல்ல பழக்கமாகும். ஆனால், உங்கள் கேலரியில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை நீங்கள் எடுத்ததாக நினைவில் இல்லாத பட்சத்தில், உங்கள் கேமராவின் மீது யாரோ ஒருவர் கட்டுப்பாட்டை வைத்திருப்பதற்கான அறிகுறியாக இருக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருங்கள். அதேபோல், உங்கள் மொபைலின் ஃபிளாஷ் திடீரென ஆன் செய்யப்பட்டிருந்தால், உங்கள் சாதனத்தை யாரோ ரிமோட் மூலம் கட்டுப்படுத்த வாய்ப்புள்ளது.
தெரியாத எண்களிடமிருந்து மெசேஜ் அல்லது கால் வந்தால் கவனமாக இருக்கவும்
உங்களிடம் விசித்திரமான சின்னங்கள் மற்றும் எழுத்து சேர்க்கைகள் அல்லது நீங்கள் செய்யாத அழைப்புகள் உள்ள செய்திகள் இருப்பதை நீங்கள் கவனித்தால், உங்கள் ஃபோன் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.



Click it and Unblock the Notifications
