Latest Updates
-
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம்
உங்கள் வருமானம் அதிகரிக்கனுமா? அப்போ வீட்டின் பூஜை அறையில் இதை கண்டிப்பாக வையுங்கள்..!
ஜோதிடம் மற்றும் அறிவியல் ரீதியில் வாஸ்து சாஸ்த்திரம் மிக முக்கியமாக கடைபிடிக்கப்படும் விஷயங்களில் ஒன்று. வாஸ்து விதிகளின்படி வீட்டின் பூஜை அறையை சரியான திசையில் வைத்தால் மகிழ்ச்சியும், செழிப்பும் நிலைத்திருக்கும் என்பது ஐதீகம். மேலும், சில சிறப்பு பொருட்களை பூஜை அறையில் வைக்க வேண்டும். இதனால் வீட்டின் மகிழ்ச்சியும் செழிப்பும் நிலைத்திருக்கும் என்கிறது வாஸ்து சாஸ்த்திரம்...
அதில் மிக முக்கியமான ஒரு பொருள் வெள்ளி நாணயம். வீட்டு பூஜை அறையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்தால் வீட்டில் செழிப்பு ஏற்படும் என்பது நம்பிக்கை. இருப்பினும், பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பதன் முக்கியத்துவம் தனிநபரின் நம்பிக்கைகள் மற்றும் பொருளாதார நிலையை பொறுத்து மாறுபடும். ஆனால் நாம் வாஸ்துவை நம்பினால், இதை செய்வதன் மூலம் உங்கள் வீட்டில் வாஸ்து தோஷம் இருக்காது, லட்சுமி தேவியின் அருள் எப்போதும் இருந்துகொண்டு வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் என பல நன்மைகள் கிடைக்கும். வாஸ்து நிபுணர்கள் இது குறித்து என்ன சொல்லுகிரார்கள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

வெள்ளி நாணயம் லட்சுமி தேவியின் அருளை வழங்கும்
வெள்ளி எப்போதும் செல்வம் மற்றும் செழிப்பின் தெய்வமான லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. வீட்டின் பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது எப்போதும் லட்சுமி தேவியின் ஆசீர்வாதத்தைத் தருவதாகவும், வீட்டிற்கு பொருளாதார செழிப்பைக் கொண்டு வருவதாகவும் நம்பப்படுகிறது.
மேலும், வெள்ளிநாணயம் நேர்மறையான ஆற்றலை வெளியிடுகிறது. இது பணத்தை ஈர்ப்பதால், நிதி நிலைமை முன்பை விட சிறப்பாக இருக்கும். உண்மையில், வெள்ளி என்பது தூய்மை, செல்வம் மற்றும் செழிப்பு ஆகியவற்றுடன் தொடர்புடைய ஒரு உலோகமாகக் கருதப்படுகிறது. பூஜை அறையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருப்பதன் மூலம், மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பலனும் கிடைக்கும்.
பூஜை அறையில் வெள்ளி நாணயம் வைப்பது ஒரு வழிபாட்டு முறை. இது தெய்வங்களுக்கு மரியாதை காட்டுவதற்கும் அவர்களின் ஆசிகளைப் பெறுவதற்கும் ஒரு சிறந்த வழியாகும். வீட்டின் பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை சரியான இடத்தில் வைத்திருந்தால், தெய்வங்களின் ஆசீர்வாதம் உங்களுக்கு முழுமையாக கிடைக்கும்.
மேலும், ஜோதிட சாஸ்திரத்தில் வெள்ளி என்பது வீனஸ் கிரகத்துடன் தொடர்புடையது. வீனஸ் செல்வம், அன்பு மற்றும் அழகு ஆகியவற்றின் கடவுளாகக் கருதப்பட்டு வணங்கப்படுகிறார். பூஜை அறையில் வெள்ளி நாணயம் வைத்திருந்தால் சுக்கிரன் சாந்தம் அடையலாம்.
வெள்ளி நாணயத்தை வைக்க வேண்டிய இடம்
வீட்டு பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை வைக்க விரும்பினால், அதை வாஸ்துப்படி வைக்க வேண்டியது அவசியம். வாஸ்து விதிகளின்படி, வெள்ளி நாணயத்தை பூஜை அறையின் வடகிழக்கு மூலையில் வைத்தால் நல்லது. ஏனென்றால், இந்த திசை செல்வம் மற்றும் செழிப்புக்கான திசையாக கருதப்படுகிறது.
வெள்ளி பணத்தை ஈர்ப்பதால், நாணயத்தை மேல்நோக்கி வைக்க வேண்டும். வெள்ளிக் கிழமையன்று புதிய வெள்ளி நாணயத்தை வீட்டிற்கு கொண்டு வருவது நல்லது. ஏனெனில், இந்த நாள் லட்சுமி தேவியின் நாளாகக் கருதப்படுகிறது. அவ்வாறு, செய்வதன் மூலம் லட்சுமி தேவி உங்கள் வீட்டிற்கு வருவாள் என்பது நம்பிக்கை. கோயிலில் நாணயத்தை வைப்பதற்கு முன், அதை தண்ணீரில் நன்கு சுத்தம் செய்வது அவசியம்.
வெள்ளி ஒரு விலை உயர்ந்த உலோகம். அதே போல, செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் சக்திவாய்ந்த காந்தமாக வெள்ளி கருதப்படுகிறது. உங்கள் பணப்பை, பெட்டகம் அல்லது வீட்டு பூஜை அறையில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது உங்கள் நிதி நிலையை அதிகரிக்கும் என்று வாஸ்து சாஸ்த்திரம் கூறுகிறது.
வெள்ளி நல்ல ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. வெள்ளி உலோகமும் பாதுகாப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. உங்கள் வீடு அல்லது பணியிடத்தில் வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலில் இருந்து உங்களைப் பாதுகாக்கும் என்று கூறப்படுகிறது.
உங்கள் வீட்டின் வடகிழக்கு மூலையில் ஒரு வெள்ளி நாணயத்தை வைத்திருப்பது ஆற்றல் ஓட்டத்தை மேம்படுத்துகிறது மற்றும் மிகவும் சாதகமான சூழ்நிலையை உருவாக்குகிறது என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications