Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
காதுக்குள்ள இவருக்கு எவ்ளோ அழுக்கு சேர்ந்திருச்சு தெரியுமா? கேட்டு ஷாக் ஆகிடாதீங்க...
காதுக்குள் சுத்தம் செய்யப் போகிறேன் என்று சொல்லி மருத்துவரிடம் சென்றவர் காதில் நீளமாக அழுக்கு படர்ந்திருந்தது பற்றி இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கிறோம்.
சுத்தம் சுகம் தரும், சுத்தம் சோறிடும் என்பார்கள். நமது உடல் பாகங்களை சுத்தமாக வைத்துக் கொள்வது நம் கடமையும் கூட. சுத்தமாக இருந்தால் நம்மை அண்டி வரும் நோய்களை விரட்டியடிக்க முடியும்.

அப்படி பார்க்கையில் காதுகளில் உள்ள அழுக்குகளை தினமும் சுத்தப்படுத்துவது மிகவும் முக்கியம். ஏர்பட்ஸ், குச்சி, ஊக்கு இவற்றையெல்லாம் கொண்டு காதுகளை குடைவது ஆபத்தாகாத்தான் முடியும்.
அப்படித்தான் இங்கே ஒருவருக்கு அழுக்குகள் சேர்ந்து சேர்ந்து ஒட்டுமொத்த காதையே அடைக்கும் அளவுக்கு பெரிதாக தேங்கியுள்ளது.

பெரிய அளவு ஏர் வேக்ஸ்
இந்த பெரிய அளவு ஏர் வேக்ஸ்யை ரிமூவ் செய்த ஆடியோலாஜிஸ்ட் அதன் படத்தை பகிர்ந்துள்ளார்.
இங்கிலாந்தின் லீசெஸ்டரைச் சேர்ந்த ஆடியோலஜிஸ்ட் நீல் ரைதாதா, நோயாளியின் காதில் இருந்து இந்த பெரியளவு மெழுகுப் பகுதியை அகற்றியபோது திகைத்துப் போனார்.
வீடியோவில் இது குறித்து அவர்கள் கூறியிருப்பதாவது இந்த மெழுகின் நீளம் 2.5 செமீ நீளம் இருக்கும். இது ஒரு சராசரி காதின் நீளத்திற்கு சமமாக இருந்தது ஆச்சர்யத்தை வரவழைத்து உள்ளது.

காதில் வலி
அந்த நோயாளி ஒரு நாள் விமானத்தில் பயணம் செய்யும் போது காதில் தேங்கியிருந்த மெழுகால் அழுத்தத்தில் வலி ஏற்பட்டுள்ளது. இதனால் பயந்து போய் அவர் உடனே மருத்துவரை அணுகி வந்துள்ளார்.

எண்டோஸ்கோபி சிகிச்சை
இந்த வீடியோவை பார்த்தால் தெரியும் மருத்துவர்கள் காதிலினுள் வரை க்ளீன் செய்துள்ளனர். அதுமட்டுமல்லாமல் கப் சக்சன் முறைகளை பயன்படுத்தி அழுக்குகளை ரிமூவ் செய்துள்ளனர். இதை எண்டோஸ்கோபி முறையைக் கொண்டு மருத்துவர்கள் கையாண்டுள்ளனர்.
இந்த நடைமுறை சிகிச்சை வீடியோவை டாக்டர் ரைதா யூடியூப்பில் போட்டு "வேக்ஸ் விஸ்பரர்" என்ற பெயரில் 43,000 மக்களின் எதிர்ப்பார்ப்பை பெற்றுள்ளது என்றே கூறலாம்.



Click it and Unblock the Notifications