Latest Updates
-
1/2 கப் ஜவ்வரிசி இருந்தா.. இப்படி தோசை சுட்டு சாப்பிடுங்க.. டேஸ்ட் வேற லெவல்-ல இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 31 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு இழப்புகள் நிறைந்த நாளாக இருக்குமாம் -
உங்க பிறந்த தேதியை சொல்லுங்க - செப்டம்பர் மாதம் உங்களுக்கு எப்படி இருக்கப்போகுதுனு நாங்க சொல்றோம் -
ராஜஸ்தானி பஞ்சரத்ன பருப்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
2050-ல் உலகம் சந்திக்கப்போகும் பேரழிவு - இந்தியாவிற்கு என்னென்ன பாதிப்புகள் வரப்போகுது தெரியுமா? -
செப்டம்பர் 01-ல் உருவாகும் லாப திருஷ்டி யோகம்: இந்த 3 ராசிகளுக்கு செல்வத்தை அள்ளிக் கொடுக்கப்போகிறது -
மெட்ராஸ் சிக்கன் தொக்கு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சாதம், டிபனுக்கு அட்டகாசமாக இருக்கும் -
என்னது ஒரு பசுவின் விலை 35 கோடியா? அப்படி என்ன ஸ்பெஷல் இந்த பசு மாட்டில்? ஷாக் ஆகாதீங்க -
பஞ்சாபி சிக்கன் கிரேவி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
இன்றைய ராசிபலன் 30 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு சவால்கள் துரத்தும் நாளாக இருக்குமாம்
சச ராஜயோகம்: சனி பகவான் இந்த 4 ராசிக்கு பணத்தை அள்ளித் தரப்போகிறார்.. உங்க ராசியும் இதுல இருக்கா?
Shash Rajyoga 2023: வேத ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிக்கக்கூடியவர். மேலும் கிரகங்களிலேயே சனி பகவான் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இரண்ரை ஆண்டுகள் இருப்பார்.
தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். அதன் பின் மீன ராசிக்கு செல்வார். சனி பகவான் கும்ப ராசியில் நுழைந்திருப்பதால், சச ராஜயோகம் உருவாகியுள்ளது.

ஜோதிடத்தில் சச ராஜயோகமானது பஞ்சமகா யோகங்களில் ஒன்றாகும். இது மிகவும் மங்களகரமான யோகம். இந்த யோகம் சனி பகவானுடன் தொடர்புடையது. ஒருவரது ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து கேந்திரத்தில் சனி இருக்கும் போது, அல்லது சந்திரன் அல்லது சனி துலாம், மகரம் மற்றும் கும்ப ராசியில் 1, 4, 7 மற்றும் 10 ஆவது வீடுகளில் இருக்கும் போது சச ராஜயோகம் உருவாகும்.
இந்த ராஜயோகமானது நல்ல நிதி முன்னேற்றம், மகிழ்ச்சி மற்றும் செழிப்பு ஆகியவற்றை வழங்கும். மேலும் இந்த யோகமானது ஏழரை சனி அல்லது அர்த்தம அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தைக் குறைத்து, மோசமான விளைவுகளைக் குறைக்கும். தற்போது சனி வக்ர நிலையில் உள்ளார். இதனால் சச ராஜயோகத்தின் பலன் சற்று குறைவாகவே இருக்கும்.
ஆனால் நவம்பர் மாதம் சனி வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிக்கவுள்ளார். ஆகவே நவம்பர் முதன் சச யோகத்தின் முழு பலனைப் பெறக்கூடும். இப்போது சனி உருவாக்கிய சச ராஜயோகத்தால் எந்த ராசிக்காரர்கள் ஏராளமான பணத்தைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சச ராஜயோகத்தால் நிறைய பணத்தைப் பெறுவார்கள். இந்த யோக காலத்தில் சனி பகவானின் அருளால் நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்களுக்கு நவம்பர் முதல் நல்ல லாபம் கிடைக்கும். நவம்பர் முதல் ரிஷப ராசிக்காரர்களுக்கு அனைத்து வேலைகளிலும் முடிவுகள் சாதகமாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் சச ராஜயோகத்தால் நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள். புதிய சொத்துக்கள் மற்றும் வாகனங்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். நீதிமன்ற வழக்குகளில் தீர்ப்புகள் சாதகமாக கிட்டும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம். முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். திருமண வாழ்க்கை நன்றாக இருக்கும். பரம்பரை சொத்துக்களில் இருந்து நல்ல நன்மைகள் கிடைக்கும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சனியின் சச ராஜயோகத்தால் ஏராளமான நற்பலனைப் பெறவுள்ளார்கள். பல வழிகளில் இருந்து நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு போன்றவை கிடைக்க வாய்ப்புள்ளது. தாயாரின் முழு ஆதரவு கிடைக்கும். திடீரென்று நிதி நிலையில் உயர்வு ஏற்படும்.
கும்பம்
சச ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்கள் சனியில் முழு ஆசியைப் பெற்று, பல நற்பலனைப் பெறுவார்கள். அதுவும் தொழில் ரீதியாக மிகவும் சிறப்பாகவும், நல்ல நிதி நன்மைகளும் கிடைக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் பரம்பரை தொழிலை செய்து வருபவர்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். இக்காலத்தில் மேற்கொள்ளும் பயணங்களால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணை தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications