Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
சனி நட்சத்திர பெயர்ச்சியால் அக்டோபர் 15 முதல் இந்த ராசிகளுக்கு தொழிலில் நல்ல லாபம் கிடைக்கப்போகுது..
Shani Nakshatra Transit 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவதைத் தவிர, நட்சத்திரங்களையும் மாற்றும். அப்படி மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலுமே தெரியும்.
அதுவும் நீதிமான் சனி பகவானின் இயக்கத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது, அது மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் தற்போது ராகுவின் சதய நட்சத்திரத்தில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி அக்டோபர் 15 ஆம் தேதி நிகழவுள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி செவ்வாய்.
சனி பகவான் அவிட்டம் நட்சத்திரத்திற்கு செல்வதால், சில ராசிக்காரர்கள் திடீர் பண ஆதாயத்துடன் நல்ல முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமான பலன்களை வாரி வழங்கவுள்ளது. முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்களை உருவாக்க முடியும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலையை மாற்ற நினைப்பவர்களுக்கு, விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும்.
மிதுனம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது மிதுன ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை வாரி வழங்கவுள்ளது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் சிலர் பயணங்களை மேற்கொள்ளலாம். அந்த பயணங்களால் நல்ல பண ஆதாயமும் கிடைக்கும். மாணவர்கள் சனி பகவானின் அருளால் படிப்பில் சிறந்து விளங்குவார்கள். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சொத்துக்களில் முதலீடு செய்தால் நன்மை கிடைக்கும்.
விருச்சிகம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது விருச்சிக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை வழங்கவுள்ளது. அதுவும் புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும். குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது. சனி பகவானின் அருளால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சமூகத்தில் மரிப்பும், மரியாதையும் அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications