Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
சனி நட்சத்திர பெயர்ச்சியால் ஏப்ரல் முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Shani Nakshatra Peyarchi 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ப பலன்களை அளிக்கும் நீதிமானாக கருதப்படுகிறார். இந்த சனி பகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும். அதே சமயம் இவர் நட்சத்திரத்தை மாற்ற 400 நாட்கள் ஆகும். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சியானது ஏப்ரல் மாதத்தின் தொடக்கத்தில் நடக்கவுள்ளது. இந்த நட்சத்திர பெயர்ச்சியின் போது சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லவுள்ளார். பூரட்டாதி நட்சத்திரமானது குரு பகவானுக்கு உரியது. குரு பகவானின் நட்சத்திரத்திற்கு சனி பகவான் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்த பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. அதோடு நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படவுள்ளது. இப்போது சனி நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியானது நற்பலன்களை வழங்கவுள்ளது. குறிப்பாக வியாபாரிகள் நல்ல வெற்றியையும் லாபத்தையும் பெறுவார்கள். வேலையில்லாதவர்களுக்கு நல்ல வேலை தேடி வரும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வுடன், சம்பள உயர்வையும் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். தந்தையுடனான உறவு மேம்படும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி நட்சத்திர பெயர்ச்சியால் பண வரவு சிறப்பாக இருக்கும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் கைக்கு வந்து சேரும். சமூகத்தில் மதிப்பும் மரியாதையும் உயரும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும். பேச்சால் பல காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். மேலும் உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். நீண்ட நாள் ஆசைகள் இக்காலத்தில் நிறைவேறும் வாய்ப்புள்ளது. சிலருக்கு புதிய வாகனம் அல்லது சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும்.
மேஷம்
சனி நட்சத்திர பெயர்ச்சியானது மேஷ ராசிக்காரர்களுக்கு பல நல்ல பலன்களை வழங்கும். முக்கியமாக வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். நிறைய பணத்தை சேமிக்க முடியும். குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். பல வழிகளில் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications