Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
வக்ர நிவர்த்தி அடையும் சனி: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசித்து பண மழை கொட்டப் போகுது...
Shani Margi Saturn Direct In Aquarius 2023: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மேலும் கிரகங்கள் எப்போதும் நேர்பாதையில் மட்டும் பயணிப்பதில்லை, அவ்வப்போது வக்ர நிலையில் பின்னோக்கியும் பயணிக்கும். அப்படி பின்னோக்கி பயணிக்கும் போது, சுப கிரகங்களாக இருந்தால், நற்பலனையும், அசுப கிரகங்களாக இருந்தால், கெடுபலனையும் பெறக்கூடும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசிக்குள் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் நுழைந்தார். நுழைந்த பின் ஜூன் மாதத்தில் சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்கத் தொடங்கினார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் மாதம் வரை இருந்து, நவம்பர் 04 ஆம் தேதி வக்ர நிவர்த்தி அடைந்து, நேர்பாதையில் பயணிக்கவுள்ளார்.

சனி வக்ர நிவர்த்தி அடைவதால், வாழ்வில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்த பல ராசிக்காரர்கள் அந்த பிரச்சனைகளில் இருந்து விடுதலை பெறப் போகிறார்கள். மேலும் சில ராசிக்காரர்களின் சனி பகவானின் சிறப்பான அருளைப் பெற்று, திடீர் பண வரவையும், தொழில் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் காணப் போகிறார்கள். அதோடு அவர்களின் நீண்ட நாள் விருப்பங்களும் நிறைவேறவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதனால் இதுவரை தொழிலில் பல பிரச்சனைகளை சந்தித்து வந்தவர்கள், அப்பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு, சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். கூட்டு தொழில் செய்தால் நல்ல பலன்களைப் பெறலாம்.
வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்துடன் வெற்றியையும் பெறுவார்கள். நீண்ட நாட்களாக இழுத்துக் கொண்டிருக்கும் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். கடன் தொல்லையால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தால், அதிலிருந்து விடுதலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நவம்பர் மாதம் முதலாக நல்ல பண வரவைப் பெறுகூர்கள். குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறக்கூடும். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமைந்து திருமணம் நடக்கலாம்.
புதிய சொத்துகள் அல்லது வாகனத்தை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். நீண்ட நாள் விருப்பங்கள் நிறைவேறும் வாய்ப்புள்ளது. சனி பகவானின் அருளால் தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான முன்னேற்றத்தையும், லாபத்தையும் காணக்கூடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் வக்ர நிவர்த்தி அடையப் போகிறார். இதனால் இதுவரை தோல்வியை சந்தித்து வந்த மிதுன ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெற்று வெற்றி மேல் வெற்றி காணப் போகிறார்கள்.
நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். வேலை தொடர்பாக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றிகரமாக இருக்கும் மற்றும் நல்ல பண ஆதாயமும் கிடைக்கும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவு நனவாக வாய்ப்புள்ளது. ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்கள் நவம்பர் மாதத்திற்கு பின் நல்ல வெற்றியைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications