Latest Updates
-
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா? -
கறிவேப்பிலை சட்னி அரைக்கும் போது இந்த ஒரு பொருளை சேர்த்து அரைங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா?
வருகிற சனி ஜெயந்தி இந்த 3 ராசிக்காரர்களின் வாழ்வில் பிரச்சனையை அதிகரிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா?
Shani Jayanti 2024: சனி ஜெயந்தி என்பது சனி பகவான் பிறந்தநாளாகும். நீதிமான் சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்தார். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டில் சனி ஜெயந்தியானது ஜூன் 06 ஆம் தேதி வருகிறது. சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும்.
ஏனெனில் சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை தவறாமல் அனுபவிக்க வைப்பார். ஆனால் உண்மையில் சனி பகவானைக் கண்டு எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. தவறு செய்தால் தான் பயம் கொள்ள வேண்டும். மற்றபடி சனிபகவானைக் கண்டு பயப்பட தேவையில்லை. உண்மையில் சனி பகவான் ஒருவரை நல்வழிப்படுத்தி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழச் செய்வார்.

ஜோதிடத்தின் படி, கிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம். இந்த சனி ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருக்கும். இந்த ஆண்டின் சனி ஜெயந்தி நாளில் சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருவார். இதனால் சில ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பான அருளைப் பெறுவார்கள்.
அதே சமயம் சனியும், ராகுவும் வக்ர நிலையில் ஒரே வேளையில் பயணிக்கவுள்ளனர். அதோடு செவ்வாய் சொந்த ராசியிலும் இருப்பார். இப்படியான கிரகங்களின் நிலைகளால் வருகிற சனி ஜெயந்தியால் சில ராசிக்காரர்கள் தங்கள் வாழ்வில் பல பிரச்சனைகளை சந்திக்கவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எந்த ஒரு வேலையை செய்வதாக இருந்தாலும் கவனமாக இருக்க வேண்டும். எவ்வித முடிவை எடுப்பதாக இருந்தாலும், ஒன்றிற்கு பலமுறை யோசிக்க வேண்டும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் நல்ல பலன்களைப் பெற முடியாது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளானது அவ்வளவு சிறப்பாக இருக்காது. வேலையில் எவ்வித நற்பலன்களையும் பெற முடியாது. சிலருக்கு நிதி இழப்புக்கள் ஏற்படலாம். அதிக வாக்குவாதங்களில் ஈடுபட நேரிடும். இதனால் உங்களின் பல வேலைகள் தடைபடும். இந்நாளில் எதிரிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்காது. முதலீடு செய்யும் திட்டம் இருந்தால், அதை சில காலம் தள்ளிப் போட அறிவுறுத்தப்படுகிறது. குடும்ப உறுப்பினர்களுடன் பிரச்சனைகள் வரலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இந்த பிரச்சனைகளை கண்டு கொள்ளாமல் அலட்சியமாக விட்டால், பின் அதுவே பெரிய பிரச்சனையைக் கொண்டு வந்துவிடும். முக்கியமாக பண பிரச்சனைகள் அல்லது நிதி இழப்புக்களை சந்திக்க நேரிடும். நீதிமன்ற வழக்குகளில் முடிவுகள் சாதகமாக வராமல் போகும். எனவே சற்று கவனமாக இருங்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications