Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
Shani Jayanti 2024: சனி பகவானின் அருளால் இந்த 5 ராசிக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
Shani Jayanti 2024: ஒருவரது கர்மங்களுக்கு ஏற்ற பலன்களை அளிப்பவரான சனி பகவானின் பிறந்த நாள் தான் சனி ஜெயந்தி. இந்து மதத்தில் சனி ஜெயந்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. சனி பகவானால் பிரச்சனைகளை சந்திப்பவர்கள் அல்லது சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்கள், இந்த சனி ஜெயந்தி நாளில் சனி பகவானை மகிழ்விக்கும் வகையில் அவருக்கு பிடித்ததைப் படைத்து வழிபட்டு பூஜைகளை செய்து வணங்கி வந்தால், அவரின் ஆசியைப் பெறலாம்.
சனி பகவான் வைகாசி மாதம் அமாவாசை நாளில் பிறந்தார். பஞ்சாங்கத்தின் படி, வைகாசி மாத அமாவாசை திதியானது ஜூன் 05 ஆம் தேதி இரவு 7.53 மணிக்கு தொடங்கி, ஜூன் 6 ஆம் தேதி மாலை 6.06 மணிக்கு முடிவடைகிறது. இதனால் இந்த ஆண்டின் சனி ஜெயந்தி நாளானது 2024 ஜூன் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இந்த ஆண்டு சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் இருக்கிறார். இதனால் வருகிற சனி ஜெயந்தி நாளில் சில ராசிக்காரர்களுக்கு சனியின் அருள் கிடைத்து, செல்வம், மகிழ்ச்சி போன்றவற்றை பெறுவார்கள். மேலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். இப்போது சனி ஜெயந்தி நாளில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனியின் அருளால் தொழிலில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சிலருக்கு பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். வருமானத்தில் உயர்வு ஏற்படலாம். மேலும் இவர்களின் சமூக இணைப்புக்கள் வளரும். யாரிடமும் மோசமாக பேசாமல் அமைதியைக் கடைப்பிடித்தால், நல்ல பலனைப் பெறலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளானது நன்றாக இருக்கும். ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக மற்றும் நிதி ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் நல்ல உயர்வை காண்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்கள் புதிய வருமான ஆதாரங்களைப் பெறவும் வாய்ப்புள்ளது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களே! வருகிற சனி ஜெயந்தி நாளில் உங்களின் மனதில் இருந்த பல கேள்விகளுக்கான விடை கிடைக்கும். எந்த வேலையையும் அவரசப்பட்டு செய்யாமல் இருப்பது நல்லது. இந்நாளில் எந்த தவறையும் செய்யதீர்கள். நிதி ரீதியாக நன்றாக இருக்கும். வியாபாரிகள் நல்ல லாபத்தை பெறுவார்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் நல்ல நிதி நன்மைகளைப் பெறுவார்கள். வங்கி இருப்பு அதிகரிக்கும். சொத்துக்களை வாங்குவதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் இக்காலத்தில் நல்ல செய்தியைப் பெறக்கூடும். ஆனால் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் மகிழ்ச்சியாகவும் செழிப்பாகவும் இருப்பார்கள். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் சந்தித்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவார்கள். வியாபாரிகளுக்கு நன்றாக இருக்கும். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். மொத்தத்தில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications