Latest Updates
-
இன்றைய ராசிபலன் 19 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தமான நாளாக இருக்குமாம் -
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா?
Shani Jayanti 2024: சனி ஜெயந்தி நாளானது 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கப்போகுது தெரியுமா?
Shani Jayanti 2024: வேத ஜோதிடத்தில் சனி கிரகத்தின் அதிபதியாக கருதப்படுபவர் தான் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ற பலன்களை வழங்குவார். இதனால் இவரை நீதிமான் என்றும் அழைப்பர். இந்து மதத்தில் இந்த சனி பகவானின் பிறந்த நாள் சனி ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. சனி பகவான் வைகாசி மாதத்தில் வரும் அமாவாசை நாளில் பிறந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த ஆண்டு சனி ஜெயந்தியானது ஜூன் 06 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.
பொதுவாக ஒரு சிறப்பான நாட்கள், பண்டிகைகள் போன்றவை ஒவ்வொரு ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் நீதிமான் சனி பகவானின் பிறந்த நாளான சனி ஜெயந்தி நாளும் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீதிமான் சனி பகவானின் ஆசியைப் பெறவும், அவரால் வாழ்வில் சந்திக்கும் பிரச்சனைகளைக் குறைக்கவும் வழிபட உகந்த நாள் தான் சனி ஜெயந்தி.

இந்த ஆண்டின் சனி ஜெயந்தி சற்று சிறப்பானது என்றே கூறலாம். ஏனெனில் சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இப்போது 2024 ஆம் ஆண்டின் சனி ஜெயந்தி நாளானது 12 ராசிக்காரர்களின் வாழ்விலும் எம்மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் சனியின் தாக்கத்தால் சிரமங்களை சந்திக்க நேரிடும். தொழில் ரீதியாக மற்றும் நிதி ரீதியாக சிக்கல்களை சந்திக்க நேரிடும். அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். மொத்தத்தில் மிகவும் கவனமாக எந்த வேலையையும் செய்ய அறிவுறுத்தப்படுகிறது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்கலாம். ஒருவேளை ஏற்கனவே ஆரோக்கிய பிரச்சனையால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இந்நாளில் நிலைமை இன்னும் மோசமாகலாம் என்பதால் ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் உறவுகளில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இந்நாளில் பேச்சால் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளதால், மற்றவர்களுடன் பேசும் போது வெளிப்படையாகவும் சற்று கவனமாகவும் பேச அறிவுறுத்தப்படுகிறது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளில் வருமானம் மற்றும் செலவுகளைக் கட்டுப்படுத்துவது என்பது சற்று சவாலாக இருக்கும். எவ்வளவு முயற்சித்தாலும், சனியின் செல்வாக்கினால் நிதி பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதைத் தவிர்க்க தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சனி ஜெயந்தி நாளில் தொழில் ரீதியாக கடினமான நாளாக இருக்கலாம். உங்களின் வேலைக்கேற்ப சரியான அங்கீகாரம் கிடைக்காமல் போகலாம். அதற்காக மனம் தளர்ந்துவிடாமல், தொடர்ந்து வேலையில் உங்களின் சிறந்ததைக் கொடுக்க முயற்சி செய்யுங்கள். இதனால் போகபோக நல்ல பலனைப் பெறலாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் கல்லீரல், இதயம், சிறுநீரகம் போன்றவற்றில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. இருப்பினும், அது அவ்வளவு தீவிரமாக இருக்காது. இருந்தாலும், ஆரோக்கியத்தில் கூடுதல் கவனத்தை செலுத்த வேண்டும். மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டவர்கள் இந்நாளில கூடுதல் கவலையடையக்கூடும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் காதல் மற்றும் தொழிலில் எதிர்பார்த்த பலன்களைப் பெற முடியாது. இந்நாளில் உங்களின் வேலைகளில் பல தடைகளை சந்திக்க நேரிடும். மேலும் நீங்கள் மற்றவர்களால் தவறாக புரிந்து கொள்ளப்படலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் சொத்து தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம். இந்த சொத்து பிரச்சனையில் குடும்ப உறுப்பினர்களும் சம்பந்தப்பட்டிருப்பதால் இப்பிரச்சனையை கையாள்வது கடினமாக இருக்கும். இந்நாளில் மிகப்பெரிய அளவில் நிதி இழப்பை சந்திக்க நேரிடும் என்பதால், நிதி விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் தொழில் ரீதியாக பல சவால்களை சந்திக்கலாம். புதிதாக வேலையில் சேர்ந்தவர்கள் அலுவலகத்தில் அதிக வேலைப்பளுவால் சிரமப்பட நேரிடும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும். அதுவும் சர்க்கரை நோய், கல்லீரல் பிரச்சனை உள்ளவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். மருந்து மாத்திரைகளை தவறாமல் எடுக்காவிட்டால், ஆரோக்கிய பிரச்சனை மோசமாக வாய்ப்புள்ளது.
கும்பம்
சனி ஜெயந்தி நாளில் கும்ப ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கை மோசமாக இருக்கலாம். தம்பதிகள் தங்களுக்கு இடையேயுள்ள பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்கும் போது இருவரும் மற்றவர்களின் கூற்றை காது கொடுத்து கேட்டு பின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால், பிரச்சனை தீர வாய்ப்புள்ளது.
மீனம்
மீன ராசிக்காரர்கள் சனி ஜெயந்தி நாளில் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து எவ்வித லாபத்தையும் பெற முடியாது. உங்களின் திட்டங்கள் இந்நாளில் தோல்வி அடையலாம். இருப்பினும் அதற்காக கவலைப்பட வேண்டாம். சனி பகவானின் ஆசியால் விரைவில் முன்னேற்றத்திற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும்.



Click it and Unblock the Notifications