2024-ல் சனி பகவானின் பார்வை எந்த ராசிக்காரர்களின் மேல் இருக்கப் போகுது? யார் கவனமா இருக்கணும்?

2024 ஆம் ஆண்டில் நுழைய இன்னும் சில நாட்களே உள்ளன. ஒரு புதிய ஆண்டில் நுழையும் போது அந்த ஆண்டு எப்படி இருக்கும் என்ற ஒரு ஆவல் பலருக்கும் இருக்கும். இப்படி ஒருவரது எதிர்காலத்தில் நடக்கவிருக்கும் விஷயங்களை கணிக்க ஜோதிடத்தில் உள்ள கிரகங்கள் உதவி புரிகின்றன.

நவகிரகங்களில் சனி பகவான் என்றாலே அனைவருக்கும் ஒருவித பயம் இருக்கும். ஏனெனில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். ஒருவேளை தெரியாமல் ஒருவருக்கு கெடுதலை செய்தாலும், அதற்கான பலனை நிச்சயம் அனுபவிக்க வைப்பார்.

Shani Devs Vision Will Be On These Zodiac Signs In New Year 2024

இப்படிப்பட்ட சனி பகவான் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை சனி பகவான் இருக்கவுள்ளார்.

முக்கியமாக வருகிற 2024 ஆம் ஆண்டு முழுவதும் சனி பகவான் கும்ப ராசியில் தான் இருக்கப் போகிறார். அதுவும் சனி பகவானின் பார்வை இந்த புத்தாண்டில் சில ராசிக்காரர்களின் மேல் விழப் போகிறது. இதனால் இந்த ஆண்டில் சில ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதை காண்போம்.

2024-ல் சனிப் பெயர்ச்சி உண்டா?

சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். அப்படிப்பட்ட சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் தான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் நுழைந்தார். சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைந்துள்ளார். இதனால் வருகிற 2024 ஆம் ஆண்டில் சனிப் பெயர்ச்சி எதுவும் இல்லை. அடுத்து 2025 ஆம் ஆண்டு தான் சனி பகவான் கும்ப ராசியில் இருந்து மீன ராசிக்கு செல்கிறார்.

ஏழரை சனி

2023 ஆம் ஆண்டில் கும்ப ராசியில் சனி பகவான் நுழைந்ததால், மகர ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் மூன்றாவது கட்டம் நடக்கியது. கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியில் இரண்டாவது கட்டம் நடக்கிறது. மீன ராசிக்காரர்களுக்கு முதல் கட்டம் நடக்கிறது. இதில் 2024 ஆம் ஆண்டில் கும்ப ராசிக்காரர்கள் அதிக பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்பதால் ஒவ்வொரு விஷயத்திலும் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.

கடகம்

2024 ஆம் ஆண்டில் கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி இருப்பதல், இந்த ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி நடக்கிறது. அஷ்டம சனி நடப்பதால், இந்த ஆண்டில் கடக ராசிக்காரர்கள் கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். சனி பகவான் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைத்து, வாழ்க்கையை புரிய வைப்பார். நிறைய இழப்புக்களை சந்திக்க அதிக வாய்ப்புள்ளது. எனவே இந்த ஆண்டில் கடக ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

விருச்சிகம்

2024 ஆம் ஆண்டில் சனி பகவான் 4 ஆவது வீட்டில் இருப்பதால், இந்த ராசிக்காரர்களுக்கு அர்த்தாஷ்டம சனி நடக்கிறது. இதன் காரணமாக இந்த ராசிக்காரர்கள் சனி பகவானால் அதிக கஷ்டப்படுவார்கள். நிறைய ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Saturday, December 9, 2023, 18:26 [IST]
Desktop Bottom Promotion