Latest Updates
-
கோதுமை ரவா தோசையும்.. புதினா சட்னியும்..- 10 நிமிடத்தில் எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 11 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஉளைச்சலான நாளாக இருக்குமாம்...! -
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்...
கும்ப ராசியில் 38 நாட்கள் அஸ்தமனமாகும் சனி: பிப்ரவரியில் இருந்து இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..
Saturn Sets In Aquarius On February 2024: ஜோதிடத்தில் சனி பகவான் நீதிமானாக கருதப்படுகிறார். கிரகங்களிலேயே சனி மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகமாகும். சனி ஒரு ராசியில் சுமார் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
2024 ஆம் ஆண்டில் சனி பகவான் ராசியை மாற்றப் போவதில்லை. ஏனெனில் இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிக்கவுள்ளார். ஆனால் 2024-ல் அவரது நிலையில் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் சனி பகவான் 2024 ஆம் ஆண்டின் பிப்ரவரி மாதம் 11 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார். இந்த நிலையில் 38 நாட்கள் வரை இருந்து, மார்ச் மாதத்தில் உதயமாகவுள்ளார்.

சனி பகவான் அஸ்தனமாவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்கள் இக்காலத்தில் கவனமாக இருப்பதோடு, இன்னும் சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் ஆதரவையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவைப் பெறுவார்கள். சிலர் நீண்ட தூர பயணங்களை மேற்கொள்ள நேரிடும். வெளிநாட்டு தொடர்பான வணிகத்தை செய்து வந்தால், இக்காலத்தில் நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். முதலீடு செய்ய நினைத்தால், இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் லாபத்தைப் பெறுவார்கள். சனி பகவானின் ஆசியால் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலையை மாற்ற நினைத்தால், அதை இக்காலத்தில் செய்தால் புதிய வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும்.
பணியிடத்தில் உங்களின் வேலை பாராட்டைப் பெறும். எதிர்பாராத அளவில் நிதி ஆதாயங்களைப் பெறுவதற்கான வாய்ப்புள்ளது. வியாபாரிகள் நிறைய லாபத்தைப் பெறுவார்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தால், நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் போதுமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நண்பர்களால் நல்ல பலன்களைப் பெறுவார்கள் மற்றும் அவர்களுடன் நல்ல நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் ரீதியாக, உங்கள் வேலையில் திருப்தியடைவீர்கள். வேலை தொடர்பான பயணங்களை செய்ய வேண்டியிருக்கும். வணிகர்கள் இந்த காலகட்டத்தில் ஒரு பெரிய நிதி நன்மைகளைத் தரும் ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வாழ்க்கைத் துணையுடனான பிணைப்பு அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











