Latest Updates
-
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா? -
தொடர்ந்து 10 நாட்கள் கிராம்பு நீரை குடித்தால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
ஆந்திரா பீர்க்கங்காய் பச்சடி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவையாவும், ஆரோக்கியமாவும் இருக்கும் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்! -
விமானத்தில் ஏர் ஹோஸ்டஸாக எப்போதும் ஏன் பெண்கள் மட்டுமே இருக்கிறார்கள் தெரியுமா? இதுல இவ்ளோ விஷயம் இருக்கா? -
கோதுமை இட்லியும், தேங்காய் இல்லாத தண்ணி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
August 2026: ஆகஸ்ட் மாத கிரக மாற்றங்களால் இந்த 5 ராசிக்கு ரொம்பவும் அதிர்ஷ்டமா இருக்கப்போகுது! -
நூக்கல் வாங்குனா இந்த மாதிரி குருமா செய்யுங்க.. எல்லாவிதமான டிபனுக்கும் அட்டகாசமா இருக்கும்!
அமாவாசை நாளில் இந்த பொருட்களை எக்காரணம் கொண்டும் வாங்காதீங்க.. இல்ல ரொம்ப கஷ்டப்படுவீங்க..
Shani Amavasya 2023: ஒவ்வொரு மாதமும் அமாவாசை வரும். அமாவாசை என்பது சூரியனும், சந்திரனும் ஒரே நேர்க்கோட்டில் வரும் போது நிகழ்வதாகும். இந்நாளில் சூரியனின் எதிர்கள் பூமியில் படாமல் சந்திரனின் பிற்பகுதியில் முழுமையாக பதியும். ஒரு மாதத்தில் அமாவாசை மட்டுமின்றி, பௌர்ணமியும் வரக்கூடும்.
சந்திரனின் இவ்விரு கட்டங்களும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. அதுவும் அமாவாசை நாளானது பித்ருக்களை வழிபட ஏற்ற நாளாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்நாளில் ஒருசிலவற்றை நாம் கடைபிடிக்க வேண்டுமென இந்து நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

அதுவும் இன்று மகாளய அமாவாசை மட்டுமின்றி, சனி அமாவாசையும் கூட. இதனால் இந்த அமாவாசை இன்னமும் சிறப்பு வாய்ந்ததாகும். ஆனால் இந்த அமாவாசை நாளில் நாம் ஒருசில பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், அது வீட்டில் ஒரு பெரிய அசம்பாவிதத்தை ஏற்படுத்திவிடும். இப்போது அமாவாசை நாளில் எந்த பொருட்களை வாங்கக்கூடாது என்பதைக் காண்போம்.
துடைப்பம்
அமாவாசை நாளானது பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட நாளாகும். இப்படிப்பட்ட நாளில் துடைப்பத்தை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். சாஸ்திரங்களின் படி, துடைப்பம் லட்சுமி தேவியுடன் தொடர்புடையது. அமாவாசை நாளில் துடைப்பத்தை வாங்குவது லட்சுமி தேவிக்கு கோபத்தை ஏற்படுத்தி, வருமானத்தில் தடையை ஏற்படுத்தும். அதோடு, இது வீட்டில் எதிர்மறை ஆற்றலை நிரம்பி, ஆரோக்கிய பிரச்சனைகளை அதிகரிக்கும். எனவே அமாவாசை நாளில் துடைப்பத்தை வாங்காதீர்கள்.
ஆல்கஹால்
அமாவாசை நாளானது பித்ருக்களுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளதால், இந்நாளில் ஆல்கஹாலை வாங்குவதையும், குடிப்பதையும் தவிர்க்குமாறு சாஸ்திரங்கள் கூறுகின்றன. அதே வேளையில் அமாவாசை நாளானது சனி பகவானுடன் தொடர்புடையது. எனவே இந்நாளில் மதுவை அருந்தினால், அது வீட்டில் எதிர்மறை ஆற்றலை கொண்டு வந்து, பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும்.
இறைச்சிகள்
ஆல்கஹாலைப் போன்றே, அமாவாசை நாளில் இறைச்சியை வாங்குவதையோ, உட்கொள்வதையோ தவிர்க்க வேண்டும். அமாவாசை தினத்தில் எந்த ஒரு அசைவ உணவுகளை சாப்பிட்டாலும், அது ஜாதகத்தில் எதிர்மறையான விளைவை உண்டாக்குவதாக கூறப்படுகிறது. அதுமட்டுமன்றி, அமாவாசை நாளில் இறைச்சியை உட்கொள்வது சனியால் ஏற்படும் பிரச்சனைகளை இன்னும் அதிகரிக்கும்.
கோதுமை மாவு
அமாவாசை நாளில் கோதுமை மற்றும் கோதுமை மாவை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். அதுவும் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசையில் வாங்குவதை அறவே தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்படி வாங்கி சமைத்து சாப்பிட்டால், அது அசுபமாக கருதப்படுகிறது.
தலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்க்கவும்
அமாவாசை நாளில் தலையில் எண்ணெய் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். மாறாக இந்நாளில் எண்ணெயை தானம் செய்வது நல்லதாக கருதப்படுகிறது. அதுவும் இப்படி தானம் செய்யும் போது, அது சனி தோஷத்தில் இருந்து விடுபட உதவும்.
பூஜை பொருட்கள்
அமாவாசை நாளானது பித்ருக்களை வழிபட ஏற்ற நாளாகும். இந்நாளில் பத்தி, கற்பூரம், சாம்பிராணி, பூக்கள், சாமி சிலைகளுக்கு உரிய துணி போன்ற பூஜை பொருட்களை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும். மாறாக, இந்நாளில் ஏழை எளியோருக்கு தானங்களை செய்தால், அதனால் புண்ணியம் சேர்வதோடு, வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications