Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செப்டம்பர் மாத கிரக பெயர்ச்சிகளால் இந்த 4 ராசிக்கு ஜாக்பாட் அடிக்கப் போகுது... உங்க ராசி என்ன?
September Horoscope 2023: ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி கிரக நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் ஒவ்வொரு மாதமும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.
அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஒன்பதாவது மாதமான செப்டம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம். இந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்தில், அதாவது செப்டம்பர் 04 ஆம் தேதி மேஷ ராசியில் பயணித்து வரும் குரு பகவான் வக்ரமாகிறார்.

அதே சமயம் செப்டம்பர் 04 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியில் உதயமாகவுள்ளார். அதன் பின் செப்டம்பர் 16 ஆம் தேதி புதன் சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் செப்டம்பர் 17 ஆம் தேதி சூரியன் கன்னி ராசிக்கு செல்கிறார். இறுதியாக செவ்வாய் கன்னி ராசிக்கு செல்கிறார். இப்படி பல கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படுவதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
குறிப்பாக 4 ராசிக்காரர்கள் இந்த மாதத்தில் தொழில் மற்றும் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பதோடு, இந்த ராசிக்காரர்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறப் போகிறது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது சிறப்பாக இருக்கும். முக்கியமாக இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்களின் மரியாதை அதிகரிக்கும். காதலிப்பவர்களின் காதல் வெற்றியடைந்து, திருமணம் வரை செல்லும். திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆனால் இம்மாததில் கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும் மற்றும் வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது சாதகமாக இருக்கும். இந்த மாதத்தில் தடைபட்ட வேலைகள் வெற்றிகரமாக நடக்கும். சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். உங்களின் திட்டங்கள் வெற்றியடைந்து, நல்ல லாபம் கிடைக்கும். நிதி நிலையில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். புதிய வேலைகளால் நிறைய பணம் சம்பாதிக்க முடியும். வாகனம், சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் கிடைக்கும். குழந்தைகளால் நற்செய்திகளைப் பெறுவீர்கள்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நல்ல மாதமாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு நிறைய சம்பளத்துடனான புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இம்மாதத்தில் வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல பண ஆதாயத்தைத் தருவதாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது பலவழிகளில் நன்மை தருவதாக இருக்கும். நிறைய நற்செய்திகளைப் பெற வேண்டியிருக்கும். இம்மாதத்தில் மிகுந்த நம்பிக்கையுடன் இருப்பீர்கள். இம்மாதத்தில் உங்களின் வசதிகள் அதிகரிக்கும். நல்ல செழிப்பான வாழ்க்கையை வாழ்வீர்கள். வியாபாரிகளுக்கும், பணிபுரிபவர்களுக்கும் இம்மாதம் நல்ல லாபத்தை தருவதாக இருக்கும். இந்த மாதத்தில் உங்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications