September Horoscope 2023: செப்டம்பர் மாசம் இந்த ராசிக்காரர்களுக்கு பெரிய ஜாக்பாட் அடிக்கப் போகுது...

September 2023 Monthly Horoscope: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளைப் பொறுத்து பலன்கள் வேறுபடும். அந்த வகையில் செப்டம்பர் மாதம் 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் ஒருசில மாற்றங்களைக் கொண்டு வரப் போகிறது. உங்களுக்கு 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதம் எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளதா?

கீழே 12 ராசிக்காரர்களும் செப்டம்பர் மாதத்தில் எந்த மாதிரியான பலன்களைப் பெறப் போகிறார்கள் என செப்டம்பர் மாத ராசிப்பலன்கள் கொடுக்கப்பட்டுள்ளன. உங்கள் ராசிக்கு 2023 செப்டம்பர் மாதம் எப்படி இருக்கும் என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

September 2023 Monthly Horoscope In Tamil

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது பணத்தைப் பொறுத்தவரை மிகவும் கடினமாக இருக்கும். இம்மாதத்தில் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடலாம். பணம் தொடர்பான பெரிய வேலைகளை செய்வதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் இழப்புக்களை சந்திக்க நேரிடும். தொழிலதிபர்களுக்கு இம்மாதத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்காது.

பல சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். பணிபுரிபவர்களுக்கு இந்த மாதம் பரபரப்பாக இருக்கும். வீட்டின் சூழ்நிலை சாதாரணமாக இருக்கும். நீங்கள் திருமணமாகாதவராகவும், காதல் திருமணம் செய்து கொள்ள விரும்புபவர்களாகவும் இருந்தால், முக்கியமான முடிவுகளை எடுக்க இம்மாதம் சிறந்ததாக இருக்காது. ஆரோக்கியம் சற்று சுமாராக இருக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தனிப்பட்ட வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க வாய்ப்புள்ளது. வீட்டில் வாக்குவாதம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மனதளவில் மிகவும் வருத்தப்படுவீர்கள். மேலும் இது உங்கள் வேலையிலும் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

வியாபாரிகள் அதிக லாபம் ஈட்டுவதற்காக அவசரப்பட்டு எந்த முடிவையும் எடுக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கடின உழைப்பு மற்றும் தன்னம்பிக்கையின் வலிமையால் நீங்கள் நல்ல வெற்றியைப் பெறலாம். நிதி நிலை நன்றாக இருக்கும். அதிகமாக செலவு செய்யாதீர்கள். சேமிப்பில் அதிக கவனம் செலுத்துவது நல்லது. ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் காதல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும். திருமணம் தொடர்பான எந்த முடிவையும் எடுத்தால், எதிர்பார்த்த பலன்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். வாழ்க்கைத்துணையிடமிருந்து உணர்ச்சிபூர்வமான ஆதரவு கிடைக்கும்.

நிதி நிலை வலுவாக இருக்கும். இம்மாதத்தில் முதலீடு செய்தால், அதன் மூலம் இரட்டிப்பு பலன் கிடைக்கும். இந்த மாதத்தில் சில நல்ல செய்திகளைப் பெறலாம். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை நன்றாக இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது வேலை செய்பவர்களுக்கு நன்றாக இருக்கும். பதவி உயர்வு அல்லது வெளிநாடு செல்ல வேண்டுமென்ற கனவு நனவாகும். வியாபாரிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்யும் திட்டம் இருந்தால், அதில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

செலவுகள் சற்று அதிகமாக இருந்தாலும், பெரிய பிரச்சனை எதுவும் இருக்காது. மாதக் கடைசியில் திடீர் பணவரவு கிடைக்கும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். அன்புக்குரியவர்களின் ஆதரவு கிடைக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை அலட்சியப்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உங்களின் நிதி நிலை படுமோசமாக இருக்கும். பண இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. தேவையற்ற செலவுகளை அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அன்றாடச் செலவுகளைச் செய்வதிலும் பல சிரமங்களைச் சந்திக்க நேரிடும். திருமணமானவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். வாழ்க்கைத் துணையுடனான புரிதல் மேம்படும்.

வாழ்க்கைத் துணைவரிடம் இருந்து சில நல்ல செய்திகளைப் பெறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பணிபுரிபவர்கள் சில ஏமாற்றங்களை சந்திப்பார்கள். பதவி உயர்வுக்காக நீண்ட காலமாக காத்திருந்தால், இன்னும் சிறிது காலம் காத்திருக்க வேண்டும். இருப்பினும் கடின உழைப்பை தொடர அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரிகளுக்கு கலவையான லாபம் கிடைக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, இந்த மாதத்தில் உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை வரலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உங்களின் கடுமையான பேச்சு மற்றும் மோசமான நடத்தை காரணமாக பல விமர்சனங்களைச் சந்திக்க நேரிடும். அத்தகைய சூழ்நிலையில் வாக்குவாதத்தில் ஈடுபடக்கூடும். வீடு அல்லது பணியிடம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். அலுவலகத்தில் சற்று அலட்சியம் காட்டினால் பெரிய பிரச்சனையை சந்திக்க நேரிடும்.

வியாபாரிகள் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். பணப்பற்றாக்குறையால் உங்களின் சில முக்கியமான திட்டங்கள் தடைபடலாம். மாதக் கடைசியில் திடீர் உடல்நலக் குறைவால் அதிகப் பணம் செலவாகும். செலவுகள் அதிகரிப்பதால் பணப்பற்றாக்குறையை சந்திக்க நேரிடும். மொத்தத்தில் இந்த மாதம் சவால் நிறைந்ததாக இருக்கும்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது வியாபாரிகளுக்கு முக்கியமானதாக இருக்கும். கடின உழைப்பால் பெரிய வெற்றியை அடைவீர்கள். வியாபாரம் அதிகரிக்கும். பொறுப்புகளின் சுமை உங்கள் மீது அதிகமாக இருக்கும். வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இந்த பயணம் பயனுள்ளதாக இருக்கும்.

இம்மாதத்தில் யாருக்கும் எந்த வாக்குறுதியும் கொடுக்காமல் இருந்தால் நல்லது. மிகவும் புத்திசாலித்தனமாக செயல்பட வேண்டும். தேவையற்ற செலவுகளை தவிர்த்து பணத்தை புத்திசாலித்தனமாக கையாளவும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, தலைவலியால் சிரமப்படுவீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் காதல் வாழ்க்கை மோசமாக இருக்கும். திருமணமானவர்களுக்கு இந்த மாதம் சிறப்பானதாக இருக்காது. சிறு சிறு விஷயங்களில் உங்களுக்குள் வாக்குவாதம் ஏற்படலாம். வேலையாக இருந்தாலும் சரி, வியாபாரமாக இருந்தாலும் சரி, இந்த மாதம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.

உங்களின் கடின உழைப்புக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். ஆன்லைன் வர்த்தகம் செய்தால் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் பெறலாம். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். நிதி ரீதியாக இம்மாதம் சிறப்பாக இருக்கும். நிறைய பணத்தை சேமிக்க முடியும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் வேலையில்லாமல் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகளுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். நல்ல நிதி ஆதாயங்களை பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு நன்றாக இருக்கும். முக்கிய முடிவுகளில் உங்கள் அன்புக்குரியவரின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.

குழந்தை தொடர்பான கவலைகள் நீங்கும். நிதி நிலை நன்றாக இருக்கும். இருப்பினும், பணம் தொடர்பான பரிவர்த்தனைகளைச் செய்யும்போது மிகவும் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, காது தொடர்பான பிரச்சனைகளை சந்திக்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் எந்த ஒரு முக்கிய முடிவுகளையும் எடுக்க வேண்டாம். இல்லாவிட்டால் சிக்கலில் சிக்கக்கூடும். நீண்ட தூரம் பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும். கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு இந்த மாதம் கடினமாக இருக்கும். ஒரு சிறந்த வாய்ப்பு உங்கள் கையை விட்டு நழுவக்கூடும். வாழ்க்கைத் துணையுடனான ஒருங்கிணைப்பு மோசமடைய வாய்ப்புள்ளது.

மாத இறுதியில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். பணிபுரிபவர்களுக்கு திடீர் வேலை அழுத்தம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் கோபம் உங்களை தொந்தரவு செய்யும். பொருளாதார நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும். புத்திசாலித்தனமாக செலவு செய்தால் பெரிய பிரச்சனை இருக்காது. வாழ்க்கைத் துணையுடன் நல்ல நடத்தையை வைத்துக்கொள்ள முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியம் சற்று பலவீனமாக இருக்கும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழிலதிபர்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். எதிர்பார்த்த முடிவுகளைப் பெற முடியாவிட்டால், உங்கள் திட்டங்களை மாற்ற வேண்டியிருக்கும். இம்மாதத்தில் இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணியிடத்தில் வேலையில் கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது.

உயர் அதிகாரிகளுடன் தேவையற்ற மோதல்களைத் தவிர்க்கவும். பரம்பரை சொத்துக்களைப் பெற வாய்ப்புள்ளது. குடும்பத்தில் உள்ள கருத்து வேறுபாடுகள் நீங்கும். வீட்டுச் சூழலில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடனான உறவு இன்னும் வலுவாக இருக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் காதல் விஷயத்தில் மோசமாக இருக்கும். காதலருடனான ஒருங்கிணைப்பு மோசமடையும். மனம் ஒருவித குழப்பத்துடனேயே இருக்கும். கோபத்தையும் அவசரத்தையும் தவிர்க்கவும். திருமணமான தம்பதிகளுக்கு இந்த மாதம் சிறப்பாக இருக்கும். வேலையில் பிஸியாக இருப்பதால், ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிட முடியாது.

பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் மங்களகரமானதாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது மற்றும் வருமானமும் அதிகரிக்கும். வணிகர்கள் பல சிறிய நன்மைகளைப் பெறலாம். நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். நிதி நிலை வலுவாக இருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை சுமாராக இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Desktop Bottom Promotion