Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
செப்டம்பர் மாதம் குரு பகவானின் அருளால் இந்த ராசிக்காரங்க கையில் பணம் அதிகம் சேரப் போகுது..
September 2023 Money/Financial Horoscope In Tamil: ஒவ்வொரு மாதமும் கிரகங்களின் நிலைகளால் ஒருவரது தொழில் வாழ்க்கை, நிதி வாழ்க்கை, காதல் மற்றும் திருமண வாழ்க்கையில் மாற்றங்கள் ஏற்படும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் நுழைந்துவிட்டோம்.
இந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாகிறார் மற்றும் அதே நாளில் சுக்கிரன் வக்ர நிவர்த்தி அடைகிறார். அதைத் தொடர்ந்து சூரியன், புதன், செவ்வாய் ஆகியவற்றின் நிலைகளிலும் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்களால், செப்டம்பர் மாதத்தில் பல ராசிக்காரர்களுக்கு நிதி ரீதியாக நல்ல பலன்கன் கிடைக்கப் போகிறது. அதே சமயம் சில ராசிக்காரர்களுக்கு செலவுகள் கைமீறி போகும், இதனால் மிகுந்த பண பிரச்சனையை சந்திக்க நேரிடலாம். இப்போது செப்டம்பர் மாதத்தில் 12 ராசிக்காரர்களுக்கும் நிதி ரீதியாக எப்படி இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக சிறப்பாக இருக்கும். திடீரென்று பணத்தைப் பெறலாம். இதனால் நிதி நிலைமை வலுவாக வாய்ப்புள்ளது. வணிகர்களுக்கு வருமானத்தை அதிகரிக்கும் பெரிய வாய்ப்பு கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நிதி ரீதியாக கலவையாக இருக்கும். செலவுகள் அதிகமாக இருக்கும். அரசாங்கத்திடம் இருந்து பணத்தை பெறுவதற்கான வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி சிக்கல்கள் நிறைந்ததாக இருக்கும். எதிர்பாராத செலவுகளை அதிகம் சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் வருமானம் நன்றாக இருந்தாலும், செலவுகள் அதிகமாக இருப்பதால், பணத்தை சேமிக்க முடியாது.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக கலவையாக இருக்கும். இம்மாதத்தில் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து நிதி உதவி கிடைக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். ஆனால் செலவுகள் அதிகமாக இருக்கும். ஆடம்பரமாக செலவழிப்பதைத் தவிர்த்து, பணத்தை சேமிக்க முயற்சிப்பது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக சாதகமாக இருக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானம் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு சிறப்பாக இருக்கும். தனிப்பட்ட முயற்சிகள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றத்தைத் தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் செலவுகள் அதிகமாக இருக்கும். சில தவறான முடிவால் வியாபாரத்தில் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். இம்மாதத்தில் நிதி தொடர்பான எந்த ஒரு முடிவையும் அவசரப்பட்டு எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது. மேலும் முதலீடு செய்வதையும் தவிர்க்க வேண்டும். முக்கியமாக செலவுகளைக் கட்டுப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக கலவையான பலன்களைத தரும். இம்மாதத்தில் வியாபாரிகள் மற்றும் பணிபுரிபவர்களுக்கு நல்ல பண பலன்கள் கிடைக்கவுள்ளது. இருப்பினும் மாதத்தின் முதல் பாதியில் செலவுகள் அதிகமாக இருக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதிக செலவுகளால் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். வெளிநாட்டுடன் தொடர்புடைய நிறுவனங்களில் வேலை செய்பவர்களுக்கு இம்மாதம் சிறப்பாக இருக்கும். வணிகர்களுக்கு நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு, வருமானமும் அதிகரிக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு இம்மாதம் சாதகமாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு இம்மாதத்தில் நிறைய லாபம் கிடைக்கும். பண விஷயத்தில் இம்மாதத்தில் யாரையும் அதிகம் நம்ப வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக நன்றாக இருக்கும். போதுமான வருமானம் கிடைக்கும். செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். வங்கி இருப்பு சிறப்பாக இருக்கும். சொத்துக்களில் முதலீடு செய்ய நினைத்தால் அதற்கு இம்மாதம் சாதகமாக இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதத்தில் நிதி நிலை வலுவாக இருக்கும். வணிகர்களுக்கு எதிர்பாராத லாபம் கிடைக்கும். வழக்கத்தை விட நிதி நிலைமை சிறப்பாக இருக்கும். பரம்பரை சொத்துக்களால் ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது. வருமானம் அதிகரிக்கும். குறைந்த முயற்சியில் நிறைய லாபத்தை வியாபாரிகள் பெறுவார்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் மாதமானது நிதி ரீதியாக கலவையாக இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். இப்படி செலவுகள் அதிகரிப்பதால் கடன் வாங்க வாய்ப்புள்ளது. ஆனால் இம்மாதத்தில் பரம்பரை சொத்துக்களால் நல்ல ஆதாயம் கிடைக்க வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications