செப்டம்பர் மாசம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கப் போகுது..

September 2023 Career Horoscope In Tamil: ஒவ்வொரு மாதமும் கிரகங்கள் தங்கள் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும். அப்படி கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் நுழையவுள்ளோம்.

ஒரு புதிய மாதத்தில் நுழையும் போது, ஒவ்வொருவருமே இந்த புதிய மாதத்தில் நமது தொழில் வாழ்க்கை சிறப்பாக இருக்க வேண்டுமென விரும்புவோம். ஒருவரது தொழில் வாழ்க்கை சிறப்பாக அல்லது மோசமாக இருப்பதெல்லாம் கிரகங்களின் நிலைகளில் தான் உள்ளன.

September 2023 Career Horoscope In Tamil

இந்த செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலேயே குரு பகவான் மேஷ ராசியில் வக்ரமாகிறார். அதைத் தொடர்ந்து சுக்கிரன் உதயமாகிறார். அதோடு சிம்ம ராசியில் வக்ரமாக இருக்கும் புதன் வக்ர நிவர்த்தி அடைகிறார். முக்கியமாக கிரகங்களின் தலைவனாக சூரியன் கன்னி ராசிக்குள் நுழைகிறார். இறுதியாக செவ்வாய் கன்னி ராசியில் அஸ்தமனமாகிறார்.

இப்படி கிரகங்கள் தங்களின் நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்துவதால், சில ராசிக்காரர்கள் தொழிலில் அபரிமிதமான வெற்றிகளையும், முன்னேற்றத்தையும் காண்பதோடு, இன்னும் சில ராசிக்காரர்களுக்கு மோசமாக இருக்கலாம். இப்போது செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். எந்த ஒரு வேலையை செய்ய முயற்சி எடுத்தாலும், அதில் நிச்சயம் வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. குடும்பத்தின் ஆதரவுடன், ஒரு பெரிய வேலையை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் நீங்கள் உங்கள் தொழிலில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தொழில் வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இம்மாதத்தில் நீங்கள் எடுக்கும் ஒரு முடிவு அலுவலகத்தில் உங்களின் கடின உழைப்பை அழித்துவிடும். இம்மாதத்தில் எதிர்மறை எண்ணங்கள் மனதில் சூழ்ந்திருக்க செய்யாமல் இருங்கள்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் உங்கள் தொழிலைப் பற்றி நீங்கள் அதிகம் கவலைப்படலாம். உங்கள் திறமைக்கு ஏற்றவாறு உங்களால் உங்கள் வேலையை திட்டமிட முடியாமல் போகும். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாவீர்கள். தொழில் ரீதியாக, இந்த மாதம் சற்று சிரமமாகவே இருக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது தொழில் ரீதியாக மிகவும் கடினமாக இருக்கும். தொழிலில் வெற்றி காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். மிகுந்த பண பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் முக்கியமான வேலைகள் பாதியுடன் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது தொழில் ரீதியாக ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். இந்த மாதத்தில் சில பிரச்சனைகளால், உங்களின் வேலை தொடர்பாக ஒரு முக்கியமான முடிவை எடுக்க வேண்டியிருக்கும். இந்த முடிவு உங்கள் தொழிலில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது தொழில் ரீதியாக நன்மைகளை வழங்குவதாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு நன்றாக இருக்கும். உங்கள் நடத்தையால் உயர் அதிகாரிகள் மகிழ்ச்சி அடைவார்கள். மொத்தத்தில் தொழிலில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.

துலாம்

துலாம் ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது தொழில் ரீதியாக ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு இம்மாதம் ஒரே போராட்டமாக இருக்கும். உயர் அதிகாரிகள் உங்களுக்கு எதிராக இருப்பார்கள். இதனால் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதம் தொழில் ரீதியாக அற்புதமாக இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள் தங்களுக்கு பிடித்த வேலையைப் பெறுவார்கள். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் உயர் அதிகாரியின் மனதில் இடம் பிடிப்பார்கள். பதவி உயர்வு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் நீங்கள் தொழிலில் பல பிரச்சனைகளை சந்திப்பீர்கள். வியாபாரிகள் இம்மாதத்தில் பெரிய நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது. அரசு வேலைக்காக தேர்வுகளுக்குத் தயாராகிக் கொண்டிருப்பவர்களுக்கு வெற்றி கிடைப்பதில் தாமதம் ஏற்படும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதமானது தொழில் ரீதியாக உங்களுக்கு பரபரப்பாக இருக்கும். வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் நற்பலனைப் பெறலாம். முக்கியமாக கடினமாக உழைப்பதை நிறுத்தாதீர்கள். அப்படி நிறுத்தாமல் கடினமாக உழைத்தால், ஒரு பெரிய வெற்றியை விரைவில் காணலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. வேலை தொடர்பான பயணம் மேற்கொள்ள வாய்ப்புள்ளது. இம்மாதத்தில் உங்களுக்கு ஏற்ற தொழிலை தேர்ந்தெடுப்பதில் எந்த பிரச்சனையும் இருக்காது. வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே! செப்டம்பர் மாதத்தில் கடின உழைப்புக்கான முழு பலன் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Thursday, August 31, 2023, 16:55 [IST]
Desktop Bottom Promotion