Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
விருச்சிக ராசிக்கு 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகுது-ன்னு தெரியுமா?
Scorpio Yearly Horoscope 2024 in Tamil: நீங்க விருச்சிக ராசியா? வருகிற 2024 ஆம் ஆண்டு எப்படி இருக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளீர்களா? வருகிற 2024 ஆம் ஆண்டின் கிரக நிலைகளைப் பொறுத்தவரை, சில ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. அதே சமயம் சில நேரங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
நீங்கள் 2024 ஆம் ஆண்டில் உங்கள் தொழில் வாழ்க்கை, காதல் வாழ்க்கை, திருமண வாழ்க்கை, ஆரோக்கியம், நிதி நிலை, கல்வி போன்றவை எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புகிறீர்களா? அப்படியானால் இக்கட்டுரையை தொடர்ந்து படியுங்கள். ஏனெனில் கீழே 2024 ஆம் ஆண்டு வாழ்க்கையின் ஒவ்வொரு பகுதியும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து கொடுக்கப்பட்டுள்ளன.

2024-ல் தொழில் வாழ்க்கை
விருச்சிக ராசிக்காரர்கள் 2024 ஆம் ஆண்டில் தொழிலில் வெற்றியைக் காண கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். வேலையை மாற்றுவதற்கான எண்ணம் மனதில் தோன்றும். சிலர் வேலையை மாற்ற முடிவு செய்யலாம். ஆண்டின் நடுப்பகுதியில், வேலை தொடர்பான பல பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
உங்கள் செயல்திறனில் பெரிய முன்னேற்றம் ஏற்படும். வேலை தற்காலிகமாக இருந்தால், அது நிரந்தரமாக மாறுவதற்கான வலுவான வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். ஆண்டின் இறுதியில் சிலர் பதவி உயர்வைப் பெறலாம். சிலருக்கு சம்பள உயர்வும் கிடைக்கும் வாய்ப்புள்ளது. அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கும் வெற்றி கிடைக்கும்.
2024-ல் வணிகம்
வியாபாரம் செய்யும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டு பிஸியாக இருக்கும். தொழிலில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். இருப்பினும், எந்த ஒரு ஆபத்தான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். கல்வித் துறையுடன் தொடர்புடையவர்களுக்கு இந்த ஆண்டு மிகவும் முக்கியமானதாக இருக்கும்.
மார்ச் முதல் மே வரையிலான காலம் உங்களுக்கு ஏற்ற தாழ்வுகள் நிறைந்ததாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்களின் முக்கியமான பணிகள் தடைபடலாம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் கவலை மிகவும் அதிகரிக்கும். ஆனால் அதற்கு பின் புதிய வாய்ப்புகள் நிறைந்ததாக இருக்கும். உங்கள் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வேலையிலும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
2024-ல் குடும்ப வாழ்க்கை
விருச்சிக ராசிக்காரர்களின் குடும்ப வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டின் ஆரம்பம் சிறப்பாக இருக்காது. குடும்ப உறுப்பினர்களுடனான உங்கள் ஒருங்கிணைப்பு மோசமடையக்கூடும். அவர்களின் கசப்பான வார்த்தைகள் உங்கள் உணர்வுகளைப் புண்படுத்தலாம். உணர்வு ரீதியாக மிகவும் பலவீனமாக உணர்வீர்கள். மார்ச் மாதத்திற்குப் பிறகு நன்றாக இருக்கும்.
உடன்பிறந்தவர்களுடனான உறவு வலுப்பெறும். ஆகஸ்ட் மாதத்தில், தந்தையின் உடல்நிலையில் திடீர் குறைவால் மிகவும் கவலையடைவீர்கள். ஆண்டின் இறுதியில், உங்கள் குடும்ப வாழ்க்கையில் மீண்டும் மகிழ்ச்சி அதிகரிக்கும். உங்கள் குடும்ப உறுப்பினர்களின் தேவைகளையும் மகிழ்ச்சியையும் முழுமையாக கவனித்துக் கொள்வீர்கள்.
2024-ல் திருமண வாழ்க்கை
விருச்சிக ராசிக்காரர்களின் திருமண வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டின் ஆரம்பம் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில் உங்கள் வாழ்க்கைத் துணையுடனான அன்பும் காதலும் அதிகரிக்கும். ஒருவருக்கொருவர் போதுமான நேரத்தை செலவிடுவீர்கள்.
வாழ்க்கைத் துணையின் நடத்தையில் சில ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இப்படிப்பட்ட சூழ்நிலையில், சின்னச் சின்ன விஷயங்களுக்காகவும் உங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்டதாக உணருவீர்கள். இந்த ஆண்டு, உங்கள் வாழ்க்கைத் துணையின் உடல்நிலை மோசமடைவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. இந்நிலையில் உடனே மருத்துவரை அணுக வேண்டும். திருமணமாகாதவராக இருந்தால், இந்த ஆண்டில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
2024-ல் காதல் வாழ்க்கை
காதல் வாழ்க்கையைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டில் காதல் திருமணம் செய்து கொள்ள நினைத்தால், அந்த ஆசை நிறைவேறும். உங்களுக்கு இடையேயான காதல் இன்னும் ஆழமாகும். மிகவும் அதிர்ஷ்டசாலியாக உணருவீர்கள்.
ஆனால் எந்த வாக்குறுதியையும் வழங்குவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலம் உங்களுக்கு மிகவும் கடினமாக இருக்கும். உங்கள் காதல் துணையின் ஆரோக்கியத்தில் கடுமையான சரிவு ஏற்படும். அத்தகைய சூழ்நிலையில், காதல் முறியலாம். இந்த காலகட்டத்தில் நீங்கள் வாக்குவாதங்களை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது.
2024-ல் நிதி நிலை
விருச்சிக ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் நிதியைப் பொறுத்தவரை, மிகவும் சாதகமாக இருக்கும். வருமானத்தை அதிகரிக்க எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். அவ்வப்போது சில பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டாலும் பணத்தால் உங்களின் எந்த வேலையும் நின்றுவிடாது. ஒவ்வொரு சூழ்நிலையையும் கையாள்வதில் நீங்கள் வெற்றி பெறுவீர்கள். ஆனால் நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் போது அவசரப்பட வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.
2024-ல் கல்வி
விருச்சிக ராசியை சேர்ந்த மாணவர்களுக்கு 2024 ஆம் ஆண்டு சிறப்பானதாக இருக்கப் போகிறது. உங்களின் புத்திசாலித்தனம் மற்றும் நினைவாற்றல் அதிகரிக்கும். கடினமான விஷயங்களைக் கூட எளிதில் புரிந்து கொள்ள முடியும். இருப்பினும் ஆண்டின் இடைப்பட்ட காலத்தில் நிகழும் கிரக மாற்றங்களால் படிப்பில் உங்கள் கவனம் சிதறலாம்.
விரும்பினாலும் படிப்பில் கவனம் செலுத்த முடியாது. ஆண்டின் நடுப்பகுதி உங்களுக்கு சவாலானதாக இருக்கும். ஆனால் நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை மற்றும் கடின உழைப்பால் நல்ல வெற்றியைப் பெற முடியும். நீங்கள் வெளிநாடு சென்று படிக்க விரும்பினால் ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்கள் உங்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கும்.
2024-ல் ஆரோக்கியம்
விருச்சிக ராசிக்காரர்களின் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, 2024 ஆம் ஆண்டில் உடல்நலம் சுமாராக இருக்கும். உணவுப் பழக்கவழக்கங்களில் சிறப்பு கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறது. குறிப்பாக உங்களுக்கு வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்தால், இந்த வருடம் உங்கள் பிரச்சனை அதிகரிக்கலாம். இது தவிர, உங்களுக்கு உயர் இரத்த அழுத்தம் பிரச்சனை இருந்தால், கோபம் மற்றும் மன அழுத்தத்தைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. யோகா மற்றும் தியானத்தை உங்கள் தினசரி வழக்கத்தில் சேர்க்க வேண்டும். தேவையற்ற கவலைகள் மற்றும் எதிர்மறை எண்ணங்களிலிருந்துவிலகி இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications