2024-ல் 3 முறை தனது நிலையை மாற்றும் சனி பகவான்: இந்த 3 ராசிக்கு அடுத்த வருஷம் சூப்பரா இருக்கப்போகுது..

Saturn Will Change Its Position Thrice In 2024: இன்னும் 10 நாட்களில் 2024 புத்தாண்டில் நுழையவுள்ளோம். இந்த ஆண்டு பல கிரகங்கள் தங்களின் ராசியை மாற்றுவதோடு, சில கிரகங்களின் நிலைகளில் மாற்றங்கள் ஏற்படவுள்ளன. இப்படி கிரகங்களின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை அளிக்கும் நீதிமான் தான் சனி பகவான். இந்த சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியான கும்ப ராசிக்குள் 2023 ஆம் ஆண்டில் நுழைந்தார்.

Saturn Will Change Its Position Thrice In 2024: These Zodiac Signs Get More Benefits In Tamil

இந்த கும்ப ராசியில் சனி பகவான் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். அதன் பின் மீன ராசிக்கு செல்வார். 2024 ஆம் ஆண்டில் சனி பகவான் ராசியை மாற்றப் போவதில்லை. மாறாக 3 முறை தனது நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தவுள்ளார்.

அதில் முதலாவதாக 2024 ஆம் ஆண்டில் சனி பகவான் பிப்ரவரி 11 ஆம் தேதி கும்ப ராசியில் அஸ்தமனமாகவுள்ளார். அதன் பின் 2024 மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார். அடுத்து ஜூன் மாதத்தில் மீண்டும் கும்ப ராசியில் வக்ரமாகவுள்ளார்.

இப்படி சனியின் நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு சனி பகவான் சிறப்பான பலன்களைத் தரவுள்ளார். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

கும்பம்

கும்ப ராசியின் அதிபதி சனி பகவான். என்ன தான் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடந்து கொண்டிருந்தாலும், தனது சொந்த ராசி என்பதால் தாக்கம் சற்று குறைவாக இருக்கும். மேலும் சனி பகவானின் ஆசீர்வாதம் எப்போதும் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கும். எவ்வளவு சோதனைகளைக் கொடுத்தாலும், அதைத் தாங்கி மீண்டு வரும் தைரியத்தை சனி பகவான் அளிப்பார். மேலும் சமூகத்தில் மரியாதையை அதிகரிக்கச் செய்வார். கடினமாக உழைக்க வைத்தாலும், அதற்கேற்ற பலனைப் பெற வைப்பார்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி பகவான் 2024 ஆம் ஆண்டில் தனது ஆசிகளை வழங்கவுள்ளார். குறிப்பாக பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சம்பள உயர்வைப் பெறுவார்கள். மேலும் நீண்ட நாட்களால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். மொத்தத்தில் சனி பகவானின் அருளால் 2024 ஆம் ஆண்டில் வாழ்க்கை பிரகாசமாக இருக்கும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024 ஆம் ஆண்டில் சனி பகவானின் பரிபூர்ண ஆசி கிடைக்கும். இதுவரை நீங்கள் ஏராளமான ஆரோக்கிய பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், 2024 ஆம் ஆண்டில் உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் மற்றும் வியாபாரத்தில் பிரச்சனைகளை சந்தித்து வந்திருந்தால், இந்த புத்தாண்டில் அப்பிரச்சனைகள் நீங்கி, வேலைகள் சுமூகமாக நடக்கும் மற்றும் அதிர்ஷ்டத்தின் ஆதரவால் பல வெற்றிகளைக் குவிப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, December 20, 2023, 9:55 [IST]
Desktop Bottom Promotion