Latest Updates
-
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்! -
பூமியின் எல்லை எந்த நாட்டில் உள்ளது? இந்த இடத்தில் என்ன இருக்கு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பன்னீர் பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமான டேஸ்ட்ல இருக்கும் -
Krishna Jayanthi 2026: இன்று உங்க ராசிப்படி கிருஷ்ணருக்கு இத வாங்கி கொடுங்க.. உங்க கனவுகள் சீக்கிரம் நனவாகும்! -
1/2 கப் கொள்ளு இருந்தா.. இப்படி ஒருவாட்டி சட்னி செய்யுங்க.. இட்லி, தோசைக்கு தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 04 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்
சனி, சுக்கிரனால் உருவான நவபஞ்சம் ராஜயோகம்: ஜூலை 07 வரை இந்த 4 ராசிக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப்போகுது..
Navpancham Rajyoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அந்த வகையில் அழகு, ஆடம்பரம், காதல், செழிப்பு ஆகியவற்றின் காரணியாக கருதப்படும் சுக்கிரன் மே 30 ஆம் தேதி கடக ராசிக்குள் நுழைந்தார்.
அதே சமயம் சனியின் பார்வையும் விழுகிறது. இதனால் நவபஞ்சம் ராஜயோகம் உருவாகியுள்ளது. இந்த யோகமானது 35 நாட்களுக்கு இருக்கும். இந்த ராஜயோகத்தால் 4 ராசிக்காரர்கள் நல்ல முன்னேற்றத்தையும், சிறப்பான பலன்களையும் பெறுவார்கள்.

நவபஞ்சம் ராஜயோகம் என்பது வேத ஜோதிடத்தில் உள்ள நல்ல சேர்க்கையால் உருவாகும் மங்களகரமான யோகமாகும. இந்த யோகமானது ஐந்தாவது வீட்டு அதிபதியும் ஒன்பதாம் வீட்டு அதிபதியும் பரஸ்பர பரிமாற்றத்தில் இருக்கும் போது அல்லது ஒருவருக்கொருவர் வீடுகளை மாற்றி இருக்கும் போது ஏற்படும். இப்போது சனி சுக்கிரனால் உருவான நவபஞ்சம் ராஜயோகத்தால் ஜூலை 07 வரை அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோகமானது ஏராளமான நற்பலனை வழங்கவுள்ளது. குறிப்பாக வருமானத்தில் உயர்வு ஏற்படக்கூடும். வணிகர்களுக்கு நல்ல லாபத்தை தரும் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். கடந்த காலத்தில் ஏதேனும் முதவீடு செய்திருந்தால், இக்காலத்தில் அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். உடன்பிறந்தவர்களுக்கு இடையேயான பிணைப்பு வலுபெறும். குடும்ப உறுப்பினர்களிடைய அன்பு, பாசமும் அதிகரிக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோகம் மங்களகரமானதாக இருக்கும். அதுவும் திடீரென்று பண வரவு அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல முன்னேற்றத்தை காண்பார்கள். தொழில் முயற்சிகளில் நல்ல வெற்றி கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பதவி உயர்வு, சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோகமானது சிறப்பான பலன்களை வழங்கும். ஜூலை 07 வரை இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சிப்பவர்களுக்கு அதற்கான நல்ல வாய்ப்புக்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்களின் ஆசைகள் அனைத்தும் நிறைவேறும். சமூகத்தில் மரியாதையும், நற்பெயரும் அதிகரிக்கும். தந்தையுடனான உறவு மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு நவபஞ்சம் ராஜயோக காலமானது பல அற்புதமான பலன்களை வழங்கும். குறிப்பாக பணிபுரிபவர்கள் தங்கள் வருமானத்தில் உயர்வைக் காண்பார்கள். மேலும் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கை துணை நல்ல வளர்ச்சியையும், முன்னேற்றத்தையும் காண வாய்ப்புள்ளது. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொடர்பான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ஜூலை 07 வரை நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. முக்கியமாக இக்காலத்தில் முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் கிடைக்கும் மற்றும் நிதி நிலையிலும் வளர்ச்சி ஏற்படும் வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications