Latest Updates
-
அரிசி மாவு ரொட்டியும், கார சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 03 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஆரோக்கிய பிரச்சினை ஏற்பட வாய்ப்பிருக்காம் -
புதன் கன்னி ராசியில் உதயமாவதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் பூரி பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
ரோட்டுக்கடை முட்டை சேர்வா ரெசிபி - இந்த மாதிரி குழம்பு வைச்சு பாருங்க - எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
இந்திய ராணுவத்தில் எவ்வளவு பெண்கள் உள்ளார்கள்? எந்த நாட்டு இராணுவத்தில் அதிக பெண்கள் இருக்கிறார்கள் தெரியுமா? -
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம்
சனி-சுக்கிரனால் உருவாகும் கப்பார் யோகம்: அடுத்த 1 மாதம் இந்த 3 ராசிக்காரங்க ரொம்பவும் கவனமா இருக்கணும்...
Saturn, Venus Make Khappar Yoga: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களின் இயக்கங்கள் சில சமயங்களில் சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாக்கும் யோகங்களின் தாக்கமானது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் காணப்படும்.
அந்த வகையில் புதன், சுக்கிரன், சூரியன் ஆகிய மூன்று கிரகங்களால் ஜூலை மாதத்தில் லட்சுமி நாராயண யோகமும், புதாதித்ய யோகமும் உருவாகியுள்ளது. இவ்விரு யோகங்களும் மங்களகரமான சுப யோகங்களாகும்.

இந்நிலையில் சனி மற்றும் சுக்கிரனின் வக்ர நிலையால், கப்பார் யோகம் என்னும் தீங்கு விளைவிக்கக்கூடிய அசுப யோகம் உருவாகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிக்காரர்களிடம் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் அடுத்த 30 நாட்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்த கப்பார் யோகம் பல மோசமான பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். இப்போது எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காணபோம்.
கடகம்
கப்பார் யோகத்தால் கடக ராசிக்காரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் சில பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். இக்காலத்தில் செலவுகளை கட்டுப்பாட்டில் வைத்திருக்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் கடன் வாங்க வேண்டிய சூழல் ஏற்பட்டு, அந்த கடனை திருப்பி தர முடியாத நிலை ஏற்படும்.
மேலும் பணிபுரிபவர்கள் இக்காலத்தில் உடன் வேலை செய்வோருடன் பிரச்சனைகளை சந்திக்கலம். ஆரோக்கியத்திலும் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். குடும்ப உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கும் திட்டம் இருந்தால், அதை தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் அது தோல்வியையே தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு கப்பார் யோகம் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும். திருமணமானவர்கள் வாழ்க்கை துணையுடன் பிரச்சனைகளை சந்திக்கலாம். தேவையற்ற செலவுகளையும் சந்திக்க நேரிடும். இதனால் உங்களின் பட்ஜெட் பாழாகும்.
பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோருடன் கருத்து வேறுபாடுகளை சந்திக்கலாம். இக்காலத்தில் பேசும் போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். ஏனெனில் பேச்சு தான் இக்காலத்தில் உங்களின் பல பிரச்சனைகளுக்கு முக்கிய காரணமாக இருக்கும். சொத்து தொடர்பான பிரச்சனைகளை இக்காலத்தில் சந்திக்க வேண்டியிருக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் கப்பார் யோக காலத்தில் பல மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும். கிரகங்கள் இக்காலத்தில் சாதகமாக இல்லாததால் எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். நீதிமன்ற வழக்குகளுக்கு முடிவை எதிர்பார்த்தால், அது இக்காலத்தில் கிடைக்காது. இ
க்காலகட்டத்தில் பணத்தை சேமிக்க முடியாமல் போகும். விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். ஏற்கனவே ஏழரை சனி ஆரம்பித்துள்ளதால், ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications