Latest Updates
-
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க
சனி சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகம்: 2024-ல் இந்த 3 ராசிக்காரர்களின் வருமானம் உயரப் போகுது...
Saturn Venus Make Kendra Yoga: ஜோதிட சாஸ்திரத்தின் படி, வருகின்றன 2024 ஆம் ஆண்டு மிகவும் அற்புதமாக இருக்கும். ஏனெனில் இந்த புத்தாண்டின் தொடக்கத்திலேயே பல சிறப்பான யோகங்கள் உருவாகின்றன. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் இறுதியில் சனியும், சுக்கிரனும் இணைந்து கேந்திர யோகத்தை உருவாக்குகிறார்கள்.
அப்படி உருவாகும் யோகத்தால் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. ஏனெனில் சனியும், சுக்கிரனும் கேந்திர வீட்டில் இருக்கின்றனர். இதனால் சில ராசிக்காரர்களுக்கு சனியும், சுக்கிரனும் புத்தாண்டின் தொடக்கத்தில் நல்ல பலன்களை வழங்குவார்கள்.

குறிப்பாக நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, அலுவலகத்தில் பதவி உயர்வும் கிடைக்கலாம். இப்போது சனி சுக்கிரனால் உருவாகும் கேந்திர யோகத்தால் 2024 ம் ஆண்டின் தொடக்கத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
கேந்திர யோகத்தால் 2024-ல் ரிஷப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறுவார்கள். அதுவும் பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் சிறப்பான செயல்திறனால் பாராட்டைப் பெறுவார்கள். சிலர் பதவி உயர்வைப் பெறவும் வாய்ப்புள்ளது. அதோடு வாழ்க்கைத் துணையுடனான உறவு இனிமையாகவும் இருக்கும். பரம்பரை தொழிலில் ஈடுபட்டிருந்தால், நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஒருவேளை புதிய தொழிலை தொடங்க நினைத்தால், இந்த யோக காலத்தில் தொடங்கலாம். இதனால் நல்ல பலனைப் பெறக்கூடும். முக்கியமாக சனி பகவானின் அருளால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகமானது புத்தாண்டில் நல்ல பலன்களை வழங்கும். நம்பிக்கை அதிகரிக்கும். எதிரியை வீழ்த்துவீர்கள். வணிகர்கள் அபரிமிதமான லாபத்தைப் பெறுவார்கள். படிக்கும் மாணவர்கள் உயர்கல்விக்காக வெளியூர் செல்லும் வாய்ப்புக்களைப் பெறலாம். குடும்ப வாழ்க்கை அமைதியாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். புதிய சொத்து, வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புகள் கிடைக்கும். நண்பர்களுடன் நல்ல தரமான நேரத்தை செலவிடுவீர்கள். சிலர் குடும்பத்தினருடன் சுற்றுலாக்களை மேற்கொள்ளலாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் வருகின்ற புத்தாண்டு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெறலாம். சிலர் சமூகத்தில் உயர் நிலையில் உள்ளவர்களுடன் நட்புறவைப் பெறலாம். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வணிகர்கள் புதிய ஒப்பந்தத்தைப் பெறக்கூடும். சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications