Latest Updates
-
வார ராசிபலன் (30 August - 05 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களின் பண பிரச்சனை முடிவுக்கு வரும்! -
மூட்டு வலி அதிகமா இருக்கா? அப்ப இந்த உளுந்து கஞ்சியை தினமும் காபி, டீ-க்கு பதிலா குடிங்க.. -
செப்டம்பர் மாத சுக்கிர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரங்க தொழிலில் கொடிகட்டிப் பறக்கப்போறாங்க.. -
உங்ககிட்ட இந்த 5 காலை பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. அது உடம்பில் கெட்ட கொழுப்பை அதிகரிக்கும்! -
டக்குன்னு சமையலை முடிக்கணுமா? அப்ப தயிர் இருந்தா, 10 நிமிஷத்துல இப்படி குழம்பு செய்யுங்க.. -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசிக்கு செல்லும் குருபகவான்: அக்டோபர் முதல் இந்த 3 ராசிகளின் கஷ்டங்கள் தீர போகுது! -
இன்றைய ராசிபலன் 29 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம் -
பூரிக்கு ஒருவாட்டி இந்த பக்குவத்துல உருளைக்கிழங்கு மசாலா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்! -
செப்டம்பர் 01-ல் சனி-குருவால் உருவாகும் நவபஞ்ச ராஜயோகம்: தொழிலில் அபார வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிகள்! -
சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் அக்டோபர் வரை ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
94 ஆண்டுகளுக்கு பின் உருவாகும் சமசப்தம யோகம்: அக்டோபர் 18 முதல் இந்த 3 ராசிக்கு சூப்பரா இருக்கும்...
Saturn Venus Made Samsaptak Yoga On October 2023: ஜோதிடத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றும் போது, சில சமயங்களின் கிரகங்களின் நிலைகளால் சுப அல்லது அசுப யோகங்கள் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
அந்த வகையில் அக்டோபர் 18 ஆம் தேதி இரு சமசப்தம யோகம் உருவாகவுள்ளது. அதில் சனி மற்றும் சுக்கிரன் நேருக்கு நேராகவும், குரு மற்றும் ராகு நேருக்கு நேராகவும் பயணிப்பதால், இரண்டு சமசப்தம யோகங்கள் உருவாகின்றன. இந்த யோகமானது 94 ஆண்டுகளுக்கு பின் உருவாகவுள்ளது.

இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் திடீர் பண வரவையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை சமசப்தம யோகத்தால் திடீர் பண ஆதாயம் கிடைக்கும். தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் இந்த யோகத்தால் நல்ல முன்னேற்றத்தையும், லாபத்தையும் பெறக்கூடும். நீண்ட நாட்களாக சிக்கியிருந்த பணம் இந்த யோக காலத்தில் கைக்கு வந்து சேரும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் செயல்திறன் பாராட்டப்படும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த இரட்டை சமசப்தம யோகமானது அற்புதமான பலன்களை வழங்கும். முக்கியமாக வெளிநாட்டில் இருந்து வரவேண்டிய பணம் கிடைக்கும். புத்திசாலித்தனத்தால் நிறைய பணத்தை சம்பாதிப்பீர்கள். வெளிநாடு செல்ல நீண்ட காலமாக முயற்சித்து எந்த ஒரு பலனும் கிடைக்காமல் இருந்தால், இக்காலத்தில் அம்முயற்சியில் வெற்றி கிடைக்கும். இந்த ராசியின் முதல் வீட்டில் திரிகிரக யோகம் உருவாவதால், விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே வாகனம் ஓட்டும் போது கூடுதல் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இரட்டை சமசப்தம யோகமானது சாதகமான பலன்களை வழங்கும். முக்கியமாக இந்த ராசிக்காரர்களின் தைரியம் அதிகரிக்கும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பாராத அளவில் முன்னேற்றத்தை காண்பதோடு, லாபமும் கிடைக்கும். இக்காலத்தில் எதிரிகளை அசால்ட்டாக வீழ்த்துவீர்கள். வேலை தொடர்பான பயணங்களை மேற்கொள்ள நேரிடும். குறிப்பாக இந்த பயணத்தால் நல்ல பண ஆதாயம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications