Latest Updates
-
18 மாதங்களுக்கு பின் கடக ராசிக்குள் நுழையும் கேது: இந்த 3 ராசிக்காரர்கள் ஜெயிக்கிற குதிரையா மாறப்போறாங்களாம் -
ஓணம் ஸ்பெஷல் பழ நுருக்கு - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
தினமும் காலையில் 2 கிராம்பை மென்று சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்! -
சப்பாத்தி, பூரிக்கு அட்டகாசமா இருக்கும் கோலாப்பூரி பச்சை பயறு குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் சுக்கிரன்: சகல நன்மைகளையும் பெறப்போவது இந்த 4 ராசிக்காரங்க தான்! -
பூமியில் மனிதர்கள் நுழைய தடை செய்யப்பட்டுள்ள இடங்கள் - இங்க போனா உயிரோட திரும்பி வரவே முடியாதாம் -
நீர் தோசையும், தண்ணி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 25 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு கவலைகளும், தோல்வியும் நிறைந்த நாளாக இருக்குமாம் -
ஆகஸ்ட் 25-ல் சுக்கிரன் சித்திரை நட்சத்திரத்திற்கு செல்வதால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
கேது-சூரிய சேர்க்கையால் அடுத்த 24 நாட்கள் இந்த 3 ராசிக்கு வாழ்க்கை நரகமா இருக்கும்..
30 ஆண்டுகளுக்கு பின் நிகழும் சனி சுக்கிர சேர்க்கை: 2024-ல் இந்த 3 ராசிகளின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது..
Saturn Venus Conjunction In Aquarius: இன்னும் சில வாரங்களில் 2024 ஆம் ஆண்டில் நுழையவுள்ளோம். ஜோதிட சாஸ்திரத்தின் படி, 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் சற்று சிறப்பு வாய்ந்தது. ஏனெனில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் சில கிரகங்களின் சேர்க்கை பல ஆண்டுகளுக்கு பின் நிகழவுள்ளது. இதனால் இதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஒரு சிறப்பு தாக்கத்தை ஏற்படுத்தும்.
அதாவது, 2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சனி பகவானும், சுக்கிரனும் ஒரே ராசியில் இணைந்து பயணிக்கவுள்ளன. ஏற்கனவே சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் சுக்கிரனும் கும்ப ராசிக்குள் நுழைந்து, சனி பகவானுடன் இணைந்து பயணிக்கவுள்ளார்.

30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் சனி மற்றும் சுக்கிரனின் சேர்க்கை நிகழ்வதால், சில ராசிக்காரர்கள் இந்த சேர்க்கையால் 2024-ல் அதிர்ஷ்டத்தின் ஆதரவைப் பெற்று, பல வெற்றிகளையும், பணத்தையும் குவிக்கப் போகிறார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிர சேர்க்கையானது நன்மைகளை வாரி வழங்கவுள்ளது. முக்கியமாக வருமானத்தில் எதிர்பாராத உயர்வு ஏற்படும். சிலர் புதிய வருமான ஆதாரங்களை உருவாக்கலாம். தொழிலில் அற்புதமான வளர்ச்சியையும், லாபத்தையும் காணக்கூடும்.
பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்க வாய்ப்புள்ளது. பழைய முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரியில் முதலீடு செய்தால், நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவார்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிர சேர்க்கை மங்களகரமானதாக இருக்கும். வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு இருமடங்கு லாபம் கிடைக்கும். தொழிலில் எதிர்பார்த்த வெற்றியைப் பெற வாய்ப்புள்ளது.
பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு கிடைக்கும். படித்து முடித்த மாணவர்கள் நல்ல வேலையைப் பெறலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு சனி சுக்கிர சேர்க்கையானது லாபகரமானதாக இருக்கப் போகிறது. ஏனெனில் இந்த சேர்க்கை பண வீட்டில் நிகழ்கிறது. எனவே எதிர்பாராத பணத்தைப் பெறக்கூடும். நிறைய பணத்தை சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
வழக்கத்தை விட அதிக பணத்தை சேமிக்க முடியும். இதனால் நிதி நிலைமை மேம்படும். அதே வேளையில் மகர ராசியின் அதிபதி சனி. எனவே சற்று கடினமாக உழைக்க வேண்டும். தன்னம்பிக்கை அதிகமாக இருக்கும். சில புதிய உறவுகள் உங்களுக்கு கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications