Latest Updates
-
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
200 ஆண்டுகளுக்கு பின் பூரட்டாதி நட்சத்திரம் செல்லும் சனி: இந்த 3 ராசிக்கு ராஜயோக காலமா இருக்கும்...
Saturn Transit 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை இருப்பார். தற்போது சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிப்பதால், அவரது நிலைகளில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்விலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.
இந்நிலையில் சனி பகவான் பூரட்டாதி நட்சத்திரத்தில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கமானது அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் அதிர்ஷ்டமாக இருக்கும். முக்கியமாக வணிகத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைப்பதோடு, முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். இப்போது பூரட்டாதி நட்சத்திரத்திற்கு செல்லும் சனி பகவானால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

மேஷம்
சனியின் நட்சத்திர மாற்றத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். முக்கியமாக எதிர்பாராத நிதி ஆதாயங்கள் கிடைக்கும். வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். தொழிலில் நல்ல லாபத்துடன், முன்னேற்றமும் ஏற்படும். இதுவரை வேலையில் இருந்த பிரச்சனைகள் பிரச்சனைகள் அனைத்தும் தீரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தொழிலதிபர்கள் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
கும்பம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியானது கும்ப ராசிக்காரர்களுக்கு நற்பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக ஆளுமையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சரியான முடிவுகளை எடுப்பீர்கள். திருமணமானவர்களின் வாழ்க்கை இனிமையாக இருக்கும். இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் வாழ்க்கைத் துணையும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். கூட்டு வணிகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும்.
துலாம்
சனியின் நட்சத்திர பெயர்ச்சியால் துலாம் ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். தந்தையுடனான உறவு வலுவடையும். குழந்தைகளிடம் இருந்து நல்ல செய்திகளைப் பெறுவீர்கள். சில சமயங்களில் எதிர்பாராத பண ஆதாயங்களைப் பெறக்கூடும். வணிகர்களுக்கு நல்ல வளர்ச்சியுடன், லாபமும் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு முன்னேற்றத்திற்கான புதிய வாய்ப்புக்கள் கிடைக்கும். புதிதாக திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications