Latest Updates
-
ஜூலை 02-ல் நடக்கும் சனி நட்சத்திர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்கு பண வரவு அதிகரிக்கும்.. -
மழைக்காலத்தில் சரும நிறத்தை அதிகரிக்கணுமா? இந்த ஃபேஸ் பேக்கை போடுங்க... -
1 கப் ரவையும், 1/2 கப் கோதுமை மாவும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும்
சனியின் மூன்றாம் பார்வையால் இந்த 5 ராசிக்காரங்க நிறைய கஷ்டங்களை சந்திப்பாங்க..
Saturn Third Sight: ஜோதிடத்தில், சனி பகவானின் ராசி மாற்றம் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏனெனில் நவகிரகங்களில் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர் சனி பகவான். இவர் ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும்.
இதனால் சனியின் தாக்கம் ஒருவரது வாழ்வில் நீண்ட காலம் இருக்கும். அந்த வகையில் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் சனி பகவான் மகர ராசியில் இருந்து தனது அசல் முக்கோண ரசியான கும்ப ராசிக்குள் நுழைந்தார்.

இதனால் ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனியின் தாக்கத்தில் இருந்து சிலர் விடுபட்டாலும், சிலருக்கு அது ஆரம்பமானது. மேலும் சனி இருக்கும் இடத்தை விட, சனியின் பார்வைக்கு சக்தி அதிகம். அதுவும் சனியின் பார்வை பட்டாலே பிரச்சனை வரும் என்று கூறுவார்கள்.
இந்நிலையில் சனி 3, 7, 10 ஆகிய பார்வை மூலம் மற்ற ராசியை பார்ப்பார். இதில் 7 மற்றும் 10 ஆம் பார்வையால் 75 சதவீத நற்பலன்கள் கிடைக்கும். ஆனால் 3 ஆம் பார்வை அதிக சிரமத்தைக் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சனியின் மூன்றாம் பார்வையால் சில ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் மீது சனியின் மூன்றாம் பார்வை விழுதுகிறது. இதனால் மேஷ ராசிக்காரர்கள் தங்கள் ஆரோக்கியத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நிறைய மன அழுத்தத்திற்கு ஆளாக வாய்ப்புள்ளது. பணியிடத்தில் உங்கள் வேலை மோசமடைய வாய்ப்புள்ளது. நிதி இழப்பை சந்திக்க நேரிடும். பணப் பிரச்சனையை சரிசெய்ய மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் சனியின் மூன்றாம் பார்வையால் பல பிரச்சனைகளை சந்திக்கலாம். அதுவும் தொழில் மற்றும் வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் ஏற்படக்கூடும். இக்காலத்தில் எதிலும் முதலீடு செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்பை சந்திக்க நேரிடும். குடும்பத்தில் சண்டைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் தங்கள் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்க விரும்பினால் கோபத்தைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் மூன்றாம் பார்வை மோசமான பலன்களைத் தரும். தொழில் ரீதியாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். யாரேனும் சண்டை போட்டுக் கொண்டிருந்தால, அதை விலக்க முயற்சிக்காதீர்கள். இல்லாவிட்டால், நீங்களும் அந்த சண்டையில் சிக்கிக் கொள்வீர்கள். தேவையில்லாத செலவுகள் அதிகரிக்கும். இதனால் மன அழுத்தம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மகரம்
சனியின் பார்வையால் மகர ராசிக்காரர்களுக்கு சற்று மோசமாக இருக்கும். சிறு வேலையில் வெற்றி காணவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். பணிபுரிபவர்கள் சில சிக்கல்களை சந்திக்கலாம். குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். தொழிலதிபர்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். இல்லாவிட்டால் ஏமாற்றமடைய நேரிடும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு சனியின் மூன்றாம் பார்வையானது கெடு பலன்களை அளிக்கும். பணம் சம்பாதிக்க நினைத்தால், அதில் மிகுந்த சிரமங்களை சந்திக்க நேரிடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் பிரச்சனைகளை சந்திக்கலாம். பண இழப்பிற்கான வாய்ப்புள்ளதால், பண விஷயத்தில் கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications