Latest Updates
-
காலிஃபிளவரை இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் பொரியல் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
இந்தியாவின் பிரதமருக்கு வழங்கப்படும் சம்பளம் எவ்வளவு தெரியுமா? ஷாக் ஆகாதீங்க -
இட்லிக்கு இப்படி தக்காளி குழம்பு செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 02 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க தொட்டதெல்லாம் பொன்னாகப் போகுதாம் -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது! -
லன்ச்பாக்ஸ்-க்கு ஏற்ற மிளகு சாதமும், உருளைக்கிழங்கு ப்ரையும் - எப்படி செய்யணும் தெரியுமா? -
இந்தியாவின் மிகப்பெரிய விமான நிலையம் எது? அது எந்த மாநிலத்தில் இருக்கு தெரியுமா? -
தினமும் வீட்டில் கற்பூரத்துடன் பிரியாணி இலை சேர்த்து எரிங்க.. அப்புறம் நடக்குறத பாருங்க.. ஆச்சரியப்படுவீங்க.. -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த நெல்லை ஸ்டைல் கொத்சை ட்ரை பண்ணுங்க - அட்டகாசமா இருக்கும் -
இந்த 4 ராசிகள் எல்லோரையும் அவங்க கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டி படைப்பவர்களாக இருப்பார்களாம்
சனி, சூரியன் உருவாக்கும் சமசப்தம ராஜயோகம்: ஆகஸ்ட் 17 முதல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது..
Saturn Sun Make Samsaptak Rajyoga: வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் இயக்கம் மனித வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுகின்றன.
அப்படி மாற்றும் போது சில சமயங்களில் கிரகங்களின் சேர்க்கை நிகழ்வதோடு, சில நேரங்களில் கிரகங்கள் நேருக்கு நேராக பயணிக்கும். இதந்நிலையில் யோகங்கள் உருவாகும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தலைவனான சூரியன் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தனது சொந்த ராசியான சிம்ம ராசிக்குள் நுழைகிறார். இதனால் சூரியனும், சனி பகவானும் நேருக்கு நேர் இருப்பார்கள். இதன் விளைவாக சமசப்தம ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். இருப்பினும் இந்த யோகத்தால் 3 ராசிக்காரர்களுக்கு நல்ல பண வரவும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கவுள்ளது. இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு சமசப்தம ராஜயோகமானது மிகவும் சிறப்பாக இருக்கும். முக்கியமாக இக்காலத்தில் இந்த ராசிக்காரர்களின் தைரியமும் வீரமும் அதிகரிக்கும். வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்லும் வாய்ப்புக்களும் தேடி வரும்.
ஏற்றுமதி இறக்குமதி செய்பவர்களுக்கு இக்காலத்தில் நல்ல நிதி ஆதாயம் கிடைக்கும். அரசியலில் இருப்பவர்களுக்கு நல்ல பதவி கிடைக்கும் வாய்ப்புள்ளது. மேலும் காவல்துறை, ராணுவம் போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கும் இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சமசப்தம ராஜயோகமானது இனிமையான பலன்களை வழங்கும். மேலும் இந்த ராஜயோகத்தின் போது புதாதித்ய ராஜயோகமும் உருவாவதால், இந்த ராசிக்காரர்களின் தூங்கிக் கொண்டிருந்த அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். திடீர் பண ஆதாயம் கிடைக்கும்.
வியாபாரம் அல்லது வணிகத்தை விரிவுபடுத்த நினைத்தால், அதற்கு இக்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும். வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்க வாய்ப்புக்கள் தேடி வரும். மாணவர்கள் இக்காலத்தில் தேர்வுகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு, நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி காண்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு சமசப்தம ராஜயோகமானது அற்புதமான பலன்களை வாரி வழங்கும். முக்கியமாக பழைய முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் புதாதித்ய ராஜயோகமும் உருவாவதால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபமும், முன்னேற்றமும் ஏற்படும் வாய்ப்புள்ளது. மேலும் இக்காலத்தில் உங்களின் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் வெற்றியும், பாராட்டுக்களும் குவியும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications