சனி அஸ்தமனமாவதால் பிப்ரவரி 11 முதல் இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா?

Saturn Sets In Aquarius On 11 February 2024: வேத ஜோதிடத்தின் படி, கிரகங்களில் நீதியின் கடவுளாக கருதப்படுபவர் சனி பகவான். இந்த சனி கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவதால், இவர் கொடூர கிரகமாக கருதப்படுகிறார்.

ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் நல்ல நிலையில் இருந்தால், அவர் ஆண்டியையும் அரசனாக்குவார். அதுவே மோசமான நிலையில் இருந்தால், வாழ்க்கையில் பலவிதமான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

Saturn Sets In Aquarius On 11 February 2024: These Zodiac Signs Should Be Careful

சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியில் பயணித்து வரும் சனி பகவான், 2025 வரை இந்த ராசியில் தான் பயணிக்கவுள்ளார். ஆனால் 2024-ல் சனி பகவான் அஸ்தமனமாகவுள்ளார். அதுவும் பிப்ரவரி 11 ஆம் தேதி அஸ்தமனமாகவுள்ளார்.

இப்படி அஸ்தமனமாவதால் சில ராசிக்காரர்களுக்கு நன்றாக இருந்தாலும், சிலர் கவனமாக இருக்க வேண்டும். இப்போது சனி அஸ்தமனமாவதால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.

தனுசு

தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் சிரமங்கள் அதிகரிக்கப் போகிறது. வசதிகளில் குறைவு ஏற்படலாம். தன்னம்பிக்கையில் குறைவு ஏற்படும். ஒவ்வொரு வேலையிலும் தடைகளை சந்திக்க நேரிடும். முக்கியமாக பயணம் மேற்கொள்ளும் போது கவனமாக இருக்க வேண்டும். இக்காலத்தில் உங்கள் வேலையில் திருப்தி அடையமாட்டீர்கள். சிலர் வேலையை மாற்ற நினைக்கலாம்.

துலாம்

துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் தங்கள் குழந்தைகளால் பிரச்சனைகளை சந்திப்பார்கள். அவர்களுடைய ஆரோக்கியம் மற்றும் படிப்பு குறித்த கவலை சற்று அதிகரிக்கும். தொழில் ரீதியாக, ஏமாற்றமடைய வாய்ப்புள்ளதால், சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணிபுரிவர்கள் வேலையில் மாற்றங்களைக் காண வாய்ப்புள்ளது. வியாபாரிகள் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் நஷ்டத்தை சந்திக்க வாய்ப்புள்ளது.

கன்னி

கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி அஸ்தமனமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் சற்று கவனமாக இருக்க வேண்டும். தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. வியாபாரத்தில் எடுக்கும் எந்த ஒரு முயற்சிகளிலும் வெற்றி பெற சற்று தாமதமாகும். எனவே மனம் தளர்ந்து முயற்சிகளை எடுப்பதைக் கைவிடாதீர்கள்.

நிதி ரீதியாக, சற்று கவனமாக இருக்க வேண்டும். கடன் வாங்க வாய்ப்புள்ளதால், செலவுகளைக் கட்டுப்படுத்த வேண்டும். தன்னம்பிக்கை குறைய வாய்ப்புளளது. பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் அதிக அழுத்தத்தை உணரக்கூடும். இதன் விளைவாக பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாமல் அனைவரையும் நம்பாதீர்கள். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திப்பீர்கள்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Monday, February 5, 2024, 10:40 [IST]
Desktop Bottom Promotion