Latest Updates
-
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா? -
ஏசி ஓடினாலும் கரண்ட் பில் கம்மியா வரணுமா? ஏசியை இந்த மாதிரி யூஸ் பண்ணுங்க -
வீட்டிலேயே மாம்பழ ஐஸ்க்ரீம்மை ஈஸியாக செய்வது எப்படி-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் இந்த உணவுகளில் ஒன்றை தினமும் சாப்பிடணுமாம் - அதான் நல்லது -
May Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. மே மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்...
30 வருடங்களுக்கு பின் கும்பத்தில் நிகழும் சனி உதயம்: மார்ச்-ல் இந்த 3 ராசியின் அதிர்ஷ்டம் பிரகாசிக்க போகுது!
Saturn Rise In Aquarius On March 2024: வேத ஜோதிடத்தில் சனி பகவானின் நிலை மற்றும் இயக்கம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. கிரகங்களில் சனி பகவான் ஒருவரது கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை அளிக்கக்கூடியவர். இவர் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். மேலும் இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
இந்த சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை பயணிக்கவுள்ளார். இந்த சனி பகவான் பிப்ரவரி மாதத்தில் கும்ப ராசியில் அஸ்தமனமானார். இந்நிலையில் மார்ச் மாதத்தில் சனி பகவான் உதயமாகவுள்ளார்.

சனியின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது ஒருவரது வாழ்க்கையில் ஏதாவது ஒரு வகையில் பாதிப்பை ஏற்படுத்தும். அதுவும் அஸ்தமன நிலையில் சனியின் தாக்கம் அல்லது சனியால் பெறவுள்ள நற்பலன்கள் சற்று குறைவாக இருக்கும். ஆனால் மார்ச் மாதத்தில் சனி உதயமாவதால் 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கவுள்ளது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் நீண்ட நாட்களாக சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரப்போகிறது. மேலும் பணியிடத்தில் மறைமுகமாக இருந்து உங்களை வேலையில் இருந்து தூக்க நினைத்தவர்கள், உங்களுக்கு முன் வருவார். தொழிலில் இருந்த பிரச்சனைகளும் முடிவுக்கு வரவுள்ளது. கடின உழைப்பிற்கான பலனைப் பெறவுள்ளீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவுள்ளது.
பணிபுரிபவர்கள் வெளிநாடு செல்லும் கனவைக் கொண்டிருந்தால், அதற்கான வாய்ப்புக்கள் இக்காலத்தில் கிடைக்கும். வேலை தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்கள், மார்ச் மாதம் முதலாக பல நல்ல வேலை வாய்ப்புக்களைப் பெறுவார்கள். தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருப்பவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் இதுவரை வாழ்வில் பலவிதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தால், மார்ச் மாதம் முதலாக அப்பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.
நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் மார்ச் மாதம் முதல் வெற்றிகரமாக முடிவடையும். பணிபுரிபவர்கள் விரும்பிய இடமாற்றத்தைப் பெறலாம். வேலையை மாற்ற நினைத்தால், மார்ச் மாதத்திற்கு பின் செய்தால் நல்ல பலனைப் பெறலாம். வணிகர்கள் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறுவார்கள். உடன் பிறந்தவர்களுடனான உறவு மேம்படும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மார்ச் மாதம் முதலாக தங்கள் வியாபாரம் மற்றும் வேலையில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். வியாபாரத்தை விரிவுப்படுத்த முயற்சித்தால், அதில் நல்ல பலனைப் பெறக்கூடும்.
சனி பகவானின் ஆசியால் மார்ச் மாதம் முதலாக முன்னேற்றத்திற்கான வலுவான வாய்ப்புக்கள் உள்ளன. கூட்டு தொழில் செய்து வந்தால், அதில் நல்ல லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையின் முழு ஆதரவும் கிடைக்கும். இதனால் உங்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications