Latest Updates
-
இன்றைய ராசிபலன் 09 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு வெற்றிகள் குவியும் நாளாக இருக்குமாம்...! -
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்..
கும்ப ராசியில் உதயமாகும் சனி: மார்ச் 18 முதல் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்..
Saturn Rise In Aquarius On 18 March 2024: ஜோதிட சாஸ்திரத்தின் படி, கிரகங்கள் அவ்வப்போது ராசியை மாற்றுவது மட்டுமின்றி, அஸ்தமனமாகி உதயமாகவும் செய்கின்றன. அப்படி கிரகங்களின் இயக்கங்களில் ஏற்படும் சிறு சிறு மாற்றங்களும் ஒருவரது வாழ்க்கையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன.
அதில் நீதிமான் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் இவர் பிப்ரவரி 11 ஆம் தேதி முதலாக கும்ப ராசியில் அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி கும்ப ராசியில் உதயமாகவுள்ளார்.

சனி உதயமாகவுள்ளதால், அதன் தாக்கம் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலுமே காணப்படும். குறிப்பாக சில ராசிக்காரர்கள் சனி உதயமாவதால் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் பல சவால்களையும், பிரச்சனைகளையும் சந்திக்க நேரிடும். இப்போது கும்ப ராசியில் உதயமாகும் சனியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். அதிகமாக உணர்ச்சிவசப்படுவீர்கள். இப்படி உணர்ச்சிவசப்படுவதால் ஆரோக்கியம் சற்று பாதிக்கப்படும். செலவுகள் கையை மீறி போகும். இப்படி அதிகப்படியான செலவுகள் ஏற்படுவதால் அதிகம் கவலைப்படக்கூடும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தி நிறைய சவால்களை சந்திப்பார்கள். முக்கியமாக கோபத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். இல்லாவிட்டால் பெரிய இழப்பை சந்திக்க நேரிடும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் மார்ச் 18 முதல் யாரையும் கண்மூடித்தனமாக நம்புவதைத் தவிர்க்க வேண்டும். சுப காரியங்களை செய்ய நினைத்தால் அதைத் தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கும். இதகால் குடும்ப வாழ்க்கை சற்று மோசமாக இருக்கும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே சிறுசிறு பிரச்சனைகள் அவ்வப்போது எழும். ஆரோக்கிய பிரச்சனைகளால் அவதிப்பட நேரிடும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வியாபாரத்தில் பல தடைகளை சந்திக்க நேரிடும். நிதி இழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளன. உறவுகளைப் பொறுத்தவரை, மோதல்கள் அதிகரிக்கும். தொழில் ரீதியாக சிரமங்கள் அதிகரிக்கும். முக்கியமாக பணம் தொடர்பான எந்த ஒரு முடிவுகளை எடுப்பதாக இருந்தாலும், கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி உதயமாகவுள்ளார். இதனால் அந்த ராசிக்காரர்களின் செலவுகள் அதிகரிக்கும். நிறைய பணப் பிரச்சனைகளை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்ப உறுப்பினர்களிடையே மனக்கசப்புகள் அதிகரிக்கும். மன உளைச்சலால் அவதிப்படுவீர்கள். மனம் ஒருவித பயத்துடனேயே இருக்கும். இதனால் எந்த காரியத்தையும் செய்ய முடியாமல் சிரமப்படுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











