Latest Updates
-
4 வெங்காயம் இருந்தா.. இட்லிக்கு இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 06 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப மோசமான நாளாக இருக்குமாம்...! -
கேதுவின் நட்சத்திர மாற்றத்தால் இந்த 3 ராசிக்காரர்கள் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம்... உங்க ராசி என்ன? -
ஹோட்டல் ஸ்டைல் ராயல் தேங்காய் சட்னி ரெசிபி... இந்த பொருளை சேர்த்து அரைச்சு பாருங்க... செமையா இருக்கும்...! -
புடலங்காய் வாங்குனா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க...எல்லாத்துக்கும் செம சைடிஷா இருக்கும்! -
ஆரோக்கியமான விந்தணுவின் அறிகுறிகள்... உங்ககிட்ட இந்த அறிகுறிகள் இருக்கா? செக் பண்ணிக்கோங்க...! -
இந்த 4 ராசிக்காரங்க சாத்தானின் செல்ல குழந்தைகளாம்... தீய குணங்கள்தான் இவங்ககிட்ட அதிகமா இருக்குமாம்,,,! -
கொங்குநாடு தக்காளி குருமா ரெசிபி... இதை ஒருதடவை செஞ்சு பாருங்க...இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும்...! -
2K கிட்ஸ் அதிகம் விரும்பும் Slow Dating என்றால் என்ன? இளைஞர்கள் ஏன் டேட்டிங்கை விரும்புகிறார்கள் தெரியுமா? -
சனிபகவான்-சுக்கிரனின் அரிய இணைப்பால் இந்த 3 ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புத மாற்றங்கள் நிகழப்போகுதாம்...!
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் உதயமாகும் சனி: மார்ச் முதல் இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்!
Saturn Rise In Aquarius 2024: ஜோதிடத்தில் சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். இதனால் இவரை நீதிமான் என்று அழைப்பார்கள். நவகிரகங்களில் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றக்கூடியவர். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் 30 ஆண்டுகளுக்கு பின் தனது சொந்த ராசியில் பயணித்து வரும் சனி பகவான், அஸ்தமன நிலையில் பயணித்து வருகிறார். இதனால் சனி பகவானால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் சற்று தடைகள் இருக்கும்.

ஆனால் வருகிற மார்ச் மாதம் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. சொல்லப்போனால் நல்ல காலம் தொடங்குகிறது என்றே சொல்லலாம். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு மார்ச் மாதம் முதலாக மிகவும் சிறப்பாக இருக்கப் போகிறது. முக்கியமாக சனி பகவானின் பரிபூர்ண அருள் கிடைப்பதால், நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு மார்ச் முதலாக சிறப்பாக இருக்கும். வியாபாரிகள் எதிர்பாராத அளவில் நல்ல லாபத்தைப் பெறுவார்கள். சனி பகவான் சச ராஜயோகத்தை உருவாக்கியுள்ளதால், வருமானத்தில் உயர்வு ஏற்படும் மற்றும் நிறைய பணத்தை சேமிக்க முடியும்.
சிம்மம்
சனி உதயமாவதால் சிம்ம ராசிக்காரர்களும் மார்ச் மாதம் முதலாக வாழ்க்கையில் நல்ல மாற்றத்தைக் காண்பார்கள். சனி பகவான் 7 ஆவது வீட்டில் உதயமாவதால், நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். எதிரிகளை வெற்றிகரமாக வீழ்த்துவீர்கள். நீண்ட காலமாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். வருமானத்தில் உயர்வு ஏற்படும். வழக்கத்தை விட நிதி நிலை வலுவடையும்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி பகவான் உதயமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படப் போகிறது. புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். நிதி நிலை மிகவும் சிறப்பாக இருக்கும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் உடன் வேலை செய்வோரின் முழு ஆதரவைப் பெறுவார்கள். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்தால், அதிலிருந்து நல்ல பண வரவைப் பெறலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











