Latest Updates
-
கும்ப ராசியில் உதயமாகும் புதன்: மார்ச் 14 முதல் இந்த 4 ராசிக்கு தொழிலில் நல்ல வளர்ச்சி ஏற்படும்... -
எவ்வளவு வயசானாலும் இளமையா காட்சியளிக்கணுமா? அப்ப இந்த ஃபேஸ் பேக்கை அடிக்கடி போடுங்க.. -
காலிஃப்ளவரும், பட்டாணியும் இருந்தா.. இந்த மாதிரி கிரேவி செய்யுங்க.. சப்பாத்தி வேற லெவல்-ல இருக்கும்.. -
குரு பகவான் வக்ர நிவர்த்தி அடைவதால் மார்ச் 11 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
ஆட்டு ஈரலை இப்படி வறுவல் செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட போட்டி போட்டு காலி பண்ணுவாங்க... -
பெண்களே! தொப்பை குறையணுமா? அப்ப இந்த ஃபிட்னஸ் கோச் சொல்ற 5 உடற்பயிற்சியை வீட்லயே செய்யுங்க.. -
சுக்கிர பெயர்ச்சியால் இந்த 5 ராசிக்கு சுக்கிர திசை ஆரம்பிக்குது.. இனி கையில் பணம் குவியப்போகுது.. -
சிக்கன வாங்குனா இந்த 4 பொருட்களை சேர்த்து கேரளா ஸ்டைல் சிக்கன் 65 செய்யுங்க... டேஸ்ட் பட்டாசா இருக்கும்...! -
இந்த வாரம் மட்டன் வாங்குனா.. இந்த சுக்கா கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்குமே செமயா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 08 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் சில அற்புதங்கள் நடக்குமாம்...!
கும்ப ராசியில் உதயமாகும் சனி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் முன்னேற்றம் ஏற்படப்போகுது..
Saturn Rise In Aquairus 2024: வேத ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது கர்மத்திற்கு ஏற்ப பலன்களைத் தருவார். சனி பகவான் ஒரு ராசியில் 2 1/2 ஆண்டுகள் வரை பயணிப்பார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இதுவரை கும்ப ராசியில் சனி பகவான் அஸ்தமன நிலையில் இருந்தார். இந்நிலையில் மார்ச் 18 ஆம் தேதி, அதாவது இன்று சனி பகவான் உதயமாகியுள்ளார். கும்ப ராசியில் சனி உதயமாகியுள்ளதால், இதுவரை சனி பகவானால் கிடைக்கவிருந்த நற்பலன்களில் உள்ள தடைகள் நீங்கி, அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது.

முக்கியமாக தொழிலில் இதுவரை சந்தித்த பிரச்சனைகள் நீங்கி, நல்ல முன்னேற்றமும் பண வரவும் ஏற்படவுள்ளது. இப்போது கும்ப ராசியில் சனி உதயமாகியுள்ளதால், தொழில் ரீதியாக நல்ல பலனைப் பெறப்போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். ஆளுமையும் மேம்படும். நிதி நிலைமை வழக்கத்தை விட வலுவடையும். செல்வம் இருமடங்கு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும் மற்றும் அவர்களுடனான உறவு மேம்படும். தொழிலில் நல்ல பலன்கள் கிடைக்கும். சிலருக்கு அலுவலகத்தில் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் வாழ்க்கைத் துணையின் ஆதரவைப் பெறுவார்கள்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் குழந்தைகளால் நல்ல செய்திகளைப் பெறுவார்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. புதிய வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும். சிலர் எதிர்பாராத பணத்தை அவ்வப்போது பெறுவார்கள். காதலைப் பொறுத்தவரை மிகவும் மகிழ்ச்சியாகவும், இனிமையாகவும் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி உதயமாகியுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மேலும் நிறைய பணத்தை சேமிக்கவும் முடியும். நீண்ட காலமாக வேலையைத் தேடிக் கொண்டிருந்தால், மார்ச் 18 முதல் இந்த ராசிக்காரர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் தேடி வரும். தொழிலதிபராக இருந்தால் நிறைய லாபத்தைப் பெற வாய்ப்புள்ளது. பணம் சம்பாதிப்பதற்கான பல வாய்ப்புகள் கிடைக்கும். தந்தையுடனான உறவு நன்றாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











