Latest Updates
-
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா?
30 ஆண்டுகளுக்கு பின் கும்பத்தில் வக்ரமாகும் சனி: இந்த 3 ராசிக்கு தொழிலில் அபார வெற்றி கிடைக்கப்போகுது!
Saturn Retrograde In Aquarius On June 2023: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். இந்த சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை அளிப்பார்.
ஜோதிடத்தின் படி, கிரகங்கள் ஒவ்வொன்றும் குறிப்பிட்ட இடைவெளியில் ராசியை மாற்றும். அப்படி மாற்றும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். கிரகங்களிலேயே சனி பகவானின் தாக்கம் மனித வாழ்க்கையில் சற்று அதிகமாக இருக்கும்.

தற்போது சனி பகவான் கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமாகிறார். 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் சனி பகவான் வக்ரமாகிறார்.
அதுவும் இந்த வக்ர நிலையில் நவம்பர் வரை இருந்து பின் வக்ர நிவர்த்தி அடைவார். இந்த சனி வக்ர காலத்தில் 3 ராசிக்காரர்கள் தங்களின் தொழிலில் அபார வெற்றியையும், முன்னேற்றத்தையும் காணவுள்ளார்கள். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் திருமணமானவர்களின் திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்கும். கூட்டு தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவு கிடைக்கும் மற்றும் குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். முக்கியமாக சனி பகவாக்க சச ராஜயோகத்தை உருவாக்கியிருப்பதால், நல்ல நிதி பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலம் மகர ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கும். நல்ல நிதி பலன்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இதனால் நிதி நிலை நன்கு வலுவாக இருக்கும். பணியிடத்தில் உங்களின் மரியாதை அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கை உங்களுக்கு அதிகரிக்கும். சமூகத்தில் நல்ல நிலையில் இருப்பவர்களுடனான உறவு சிறப்பாக இருக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள மாணவர்களுக்கு இக்லம் சிறப்பாகவும், வெறறிகரமானதாகவும் இருக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வேலையை சரியான நேரத்தில் செய்து முடிப்பீர்கள். உங்கள் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். இக்கால கட்டத்தில், சிறிய அல்லது பெரிய அளவிலான பணத்தை சேமிக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications