Latest Updates
-
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க..
கும்ப ராசியில் வக்ரமாகும் சனி: ஜூன் 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
Saturn Retrograde 2023: ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் மெதுவாக நகரக்கூடிய கிரகம் தான் சனி. இந்த சனி மிகவும் முக்கியமான கிரகமும் கூட. சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும்.
சனி பகவான் ராசியை மாற்றும் போது, அதனால் சில ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியும், இன்னும் சிலருக்கு அஷ்டம மற்றும் அர்த்தாஷ்டம சனியும் தொடங்கும். இந்த வகையான சனியின் தாக்கம் வாழ்வில் பலவிதமான சோதனைகளையும், கஷ்டங்களையும் தரும்.

தற்போது சனி பகவான் தனது சொந்த ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் 2023 ஜூன் 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் நவம்பர் 4 ஆம் தேதி வரை இருந்து பின் வக்ர நிவர்த்தி அடைவார்.
சனி வக்ர நிலையில் இருக்கும் போது, பல ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். இப்போது கும்ப ராசியில் வக்ரமாகும் சனியால் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் பணியிடத்தில் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆரோக்கிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். அதிக வேலைப்பளு காரணமாக மன அழுத்தத்திற்கு உள்ளாகக்கூடும். வணிகர்கள் இக்காலத்தில் அதிக லாபத்தை பெற முடியாது, சுமாராகவே இருக்கும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு அற்புதமாக இருக்காது. ஆரோக்கிய விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பணிபுரிபவர்கள் அலுவலகத்தில் மிகவும் கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். ஆனாலும் கடின உழைப்பிற்கான பலன் கிடைக்காது. விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால், வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டும். நவம்பர் வரை இந்த ராசிக்காரர்களுக்கு வாழ்க்கை சவால்கள் நிறைந்ததாக இருக்கும். ஆனால் வியாபாரிகளுக்கு ஓரளவு நன்றாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு மங்களகரமானதாக இருக்காது. வேலையை மாற்ற நினைத்தால், அதை சற்று தள்ளிப் போடுங்கள். ஏனெனில் ஏற்கனவே பணிபுரியும் இடத்தில் எதிர்காலத்தில் நல்ல நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளன. மேலும் தாயின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியிருக்கும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் அதிக மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். எந்த ஒரு முக்கியமான மற்றும் வாழ்வை மாற்றக்கூடிய முடிவை எடுப்பதாக இருந்தாலும், அதை இக்காலத்தில் எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் இந்த முடிவால் அதிகமாக வருத்தப்பட வேண்டியிருக்கும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும். திருமண வாழ்க்கை சற்று டென்சன் நிறைந்ததாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications