Latest Updates
-
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா? -
வாஸ்துப்படி கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த பொருட்களை வாங்கி கடை/ஆபீஸில் வையுங்க.. தொழில் களைகட்டும்.. -
நீலகிரி வெஜ் குருமா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - தோசை. சப்பாத்திக்கு செமையா இருக்கும -
இந்த 4 ராசிக்காரங்க தலையே போனாலும் அவங்க செஞ்ச தப்பை ஒத்துக்க மாட்டாங்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
மதியம் இந்த மாதிரி ரசம் வையுங்க.. குழம்பே கேக்கமாட்டாங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செவ்வாய்-சந்திர சேர்க்கை உருவாக்கும் மகாலட்சுமி ராஜயோகம்: நாளை முதல் இந்த 5 ராசிக்கு பண மழை கொட்டும்!
கும்பத்தில் சனி வக்ரமாவதால் ஜூன் முதல் நவம்பர் வரை இந்த 4 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகுது...
Saturn Retrograde In Aquarius: நவகிரகங்களில் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர் சனி பகவான். இந்த சனி பகவானின் இயக்கத்தில் ஏற்படும் சிறு மாற்றமும் 12 ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்களில் சனி மெதுவாக நகரக்கூடியது. சனி ராசியை மாற்ற 2 1/2 ஆண்டுகள் ஆகும்.
2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சனி பகவான் கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசியில் சனி பகவான் நுழைந்ததால், மகரம், கும்பம் மற்றும் மீன ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. இந்நிலையில் 2023 ஜூன் 17 ஆம் தேதி சனி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்க தொடங்குகிறார். அதாவது பின்னோக்கி நகரத் தொடங்குகிறார்.

இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் 04 ஆம் தேதி வரை இருந்து பின் வக்ர நிவர்த்தி அடைகிறார். சனி பகவான் வக்ரமாவதால், சிலருக்கு மோசமாகவும், சிலருக்கு அதிர்ஷ்டமானதாகவும் இருக்கும். இப்போது ஜூன் 17 ஆம் தேதி சனி வக்ரமாவதால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம் உங்கள் ராசியும் அதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கும். நல்ல பண ஆதாயம் கிடைக்கும். சனி பகவானின் அருளால், அனைத்து துறைகளிலும் வெற்றி கிடைக்கும். சனி வக்ர நிலையில் இருப்பதால், வணிகர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வியாபாரம் செய்பவர்கள் இனிமேல் அற்புதமாக இருக்கும். நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். புதிதாக ஏதாவது செய்ய எண்ணம் இருந்தால், அதில் நல்ல வெற்றி கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் உங்கள் எதிரிகளை நீங்கள் வெற்றி காண்பீர்கள். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் வாய்ப்பு உள்ளது. வெளிநாடு செல்ல இக்காலத்தில் விசாவிற்கு விண்ணப்பித்தால், விரைவில் கிடைக்கும். நீங்கள் கடன் பிரச்சனையால் இதுவரை அவதிப்பட்டுக் கொண்டிருந்தால், இக்காலத்தில் முழுமையாக திருப்பி செலுத்தி, கடனில் இருந்து விடுபடுவீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இனிமேல் நல்ல பண ஆதாயம் கிடைக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். பரம்பரை சொத்துக்களால் நல்ல பலன்கள் கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் இலக்குகளில் கவனம் செலுத்தி நல்ல வெற்றியைக் காண்பீர்கள். வியாபாரிகள் தங்களின் முயற்சிக்கு ஏற்பட லாபத்தைக் காண்பார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நீடிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் பணிபுரிபவர்கள் அலுலகத்தில் முழு ஆதரவைப் பெறுவார்கள். இதன் காரணமாக வேலை செய்பவர்கள் அலுவலகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். இனிமேல் உங்களின் கடின உழைப்பிற்கான முழு பலனும் கிடைக்கும். நீதிமன்றத்தில் வழக்குகள் ஏதேனும் நடந்தால், அதில் தீர்ப்புகள் உங்களுக்கு சாதகமாக வரும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications