Latest Updates
-
செப்டம்பரில் மிதுன ராசிக்கு செல்லும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரங்க தொழிலில் புதிய உச்சத்தை தொடுவாங்க.. -
சனி-சூரியன் உருவாக்கும் ஷடாஷ்டக யோகத்தால் துரதிர்ஷ்டத்தையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 2 ராசிகள் -
நார்த் இந்தியன் ஸ்டைல் ஆலூ சன்னா மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செய்யுங்க - மட்டன் குருமா மாதிரி இருக்கும் -
சப்பாத்திக்கு இந்த ப்ளைன் குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் கணக்கில்லாம சாப்பிடுவாங்க.. -
விபூதியை நெற்றியில் எப்படி வைக்க வேண்டும்? நெற்றியில் விபூதி வைப்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? -
Vastu Tips: வீட்டில் பணம் அதிகமா சேரணுமா? அப்ப வீட்டுல இந்த செடியை வாங்கி வையுங்க.. -
குப்பையை பணம் கொடுத்து இறக்குமதி செய்யும் வினோத நாடு - எந்த நாடு? ஏன் இப்படி செய்கிறது தெரியுமா? -
ஆகஸ்ட் இறுதியில் நடக்கும் ஆண்டின் கடைசி சந்திர கிரகணம்: இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! -
செப்டம்பரில் சுக்கிரன் துலாம் ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் யார் தெரியுமா? -
கொத்தவரங்காயை இந்த பக்குவத்தில் பொரியல் செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க..
சனி வக்ரமடைவதால் ஜூன் 30 முதல் அடுத்த 139 நாட்கள் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது...
Saturn Retrograde In Aquarius: வேத ஜோதிடத்தின் படி, நீதிமான் சனி பகவான் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இவர் மகரம் மற்றும் கும்ப ராசிகளின் அதிபதியாவார். தற்போது சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
சுமார் 30 ஆண்டுகளுக்கு பின் கும்ப ராசியில் 2023 ஆம் ஆண்டு முதலாக பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவாது ஜூன் 30 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இப்படி வக்ர நிலையில் சுமார் 139 நாட்கள் சனி பகவான் பயணிக்கவுள்ளார்.

சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதுவும் சில ராசிக்காரர்களுக்கு பொற்காலமாக இருக்கப் போகிறது. மேலும் நிதி நிலையில் நல்ல உயவும், தொழிலில் முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது சனி வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது என்பதைக் காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்வீர்கள். வணிகர்கள் புத்திசாலித்தனத்துடன் செயல்பட்டால் நல்ல லாபத்தைப் பெறலாம். பணிபுரிபவர்கள் நல்ல சம்பளத்துடன் புதிய வேலை வாய்ப்பைப் பெறுவார்கள். வெளிநாடு செல்ல வேண்டுமென்ற ஆசை இருந்தால், அதற்கான வாய்ப்பு இக்காலத்தில் கிடைக்கும். மாணவர்களுக்கு மிகவும் நன்றாக இருக்கும். அரசு வேலைக்காக போட்டி தேர்வுகளை எழுதினால் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறும் வாய்ப்புள்ளது.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு புதிதாக திருமணமாகியிருந்தால், குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது. அதோடு எதிர்பாராத நிதி நன்மைகளையும் பெறும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். வியாபாரிகள் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள். இந்த ஒப்பந்தங்கள் நல்ல நிதி நன்மைகளைத் தருவதாக இருக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக இருக்கும். பணிபுரிபவர்களுக்கு சனியின் அருளால் பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். பல வழிகளில் இருந்து பணம் தேடி வரும். பங்குச் சந்தை, லாட்டரி போன்றவற்றில் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடிக் கொண்டிருந்தால், ஜூன் 30-க்கு பின் நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், அதிலிருந்து நல்ல லாபம் கிடைக்கும். புதிதாக திருமணமானவர்கள் குழந்தை பாக்கியத்தைப் பெற வாய்ப்புள்ளது.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications