Latest Updates
-
இந்த 4 ராசி ஆண்கள் பெரிய ப்ளேபாயாக இருப்பார்களாம் - இவங்ககிட்ட ஜாக்கிரதையா இருங்க -
பஞ்சாபி சன்னா மசாலா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - ஹோட்டலில் சாப்பிடுற மாதிரி இருக்கும் -
உலகின் முதல் பொறியியல் கல்லூரி எது? இந்தியாவில் தொடங்கப்பட்ட முதல் பொறியியல் கல்லூரி எது தெரியுமா? -
கர்நாடகா தர்காரி புலாவ் ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு பாருங்க - பிரியாணியை விட சூப்பரா இருக்கும் -
செஃப் தீனாவின் 2-இன்-1 ரெசிபி.. ரெஸ்டாரண்ட் ஸ்டைல் சோயா நெய் ரோஸ்ட் - எப்படி-ன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 05 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு மனஅழுத்தமான அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
செப்டம்பர் 07-ல் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 3 ராசிக்கு பிரச்சனை மேல் பிரச்சனை வந்து பாடாய்படுத்தும்! -
உலகிலேயே அதிக மதிப்புள்ள கரன்சி எந்த நாட்டுடையது தெரியுமா? டாலரை விட இந்த கரன்சியின் மதிப்புதான் அதிகம் -
பன்னீரும், காளானும் வெச்சு ஒருடைம் இப்படி சைடு டிஷ் பண்ணுங்க.. சப்பாத்தி, பூரிக்கு அள்ளும்.. -
Snake Wine என்றால் என்ன? சீன மக்கள் இதை ஏன் விரும்பி குடிக்கிறார்கள் தெரியுமா?இதுல இவ்வளவு விஷயம் இருக்கா?
கும்ப ராசியில் சனி வக்ரமாவதால் ஜூன் மாதத்தில் இருந்து இந்த 3 ராசிக்காரர்களின் நிதி நிலை உயரப் போகுது..
Saturn Retrograde In Aquarius 2024: வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ராசியை மாற்றுவதைத் தவிர, அவ்வப்போது வக்ர நிலையிலும் பயணிக்கின்றன. அப்படி கிரகங்கள் வக்ர நிலையில் பயணிக்கும் போது அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். கிரகங்கள் வக்ரமாக இருக்கும் போது அதனால் கிடைக்கவிருக்கும் பலன்களில் தாமதம் ஏற்படும்.
அந்த வகையில் நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்நிலையில் சனி பகவான் ஜூன் மாத இறுதியில், அதாவது ஜூன் 29 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் நவம்பர் வரை இருப்பார்.

சனி பகவான் வக்ரமாவதால் அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்பட்டாலும், 3 ராசிக்காரர்கள் சனி பகவானின் சிறப்பான அருளைப் பெறவுள்ளனர். குறிப்பாக இந்த ராசிக்காரர்களின் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது. அதோடு தொழிலில் மற்றும் பணியிடத்தில் நல்ல முன்னேற்றமும் ஏற்படவுள்ளது. இப்போது சனி வக்ரமாவதால் நிதி ரீதியாக நல்ல பலனைப் பெறப் போகும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகவுள்ளார். இதனால் ஜூன் மாதம் முதலாக இந்த ராசிக்காரர்கள் எதிர்பாராத நிதி நன்மைகளைப் பெறுவார்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. உங்கள் பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் படி இருக்கும். இதனால் பேச்சால் பல முக்கியமான வேலைகளை செய்து முடிப்பீர்கள். ஆளுமையில் முன்னேற்றத்தைக் காணலாம். வணிக பயணங்களை மேற்கொள்ளவும் வாய்ப்புள்ளது. வணிகர்கள் சிக்கிய பணத்தைப் பெறுவார்கள். அரசியலில் இருப்பவர்கள் வெற்றி காண்பார்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் நல்ல உயர்வை காணலாம். அதோடு புதிய வருமான ஆதாரங்களையும் உருவாக்கலாம். முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பணிபுரிபவர்கள் பதவி உயர்வைப் பெற வாய்ப்புள்ளது. வணிகர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். அதோடு எதிர்காலத்தில் நல்ல நிதி நன்மைகளைத் தரும் புதிய ஒப்பந்தங்களையும் பெறலாம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு ஜூன் முதல் அதிர்ஷ்டமாக இருக்கப் போகிறது. நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். திருமண வாழ்க்கை இனிமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். சுப நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்பீர்கள். மாணவராக இருந்தால், தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications