Latest Updates
-
உங்க கையில் M, Y, X எழுத்து தெரியுதா? அப்ப இதோட அர்த்தம் என்னன்னு தெரியுமா? -
July 2026 Lucky Zodiac Signs: ஜூலை மாதம் இந்த 6 ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது.. -
மிளகாய் கிள்ளிப் போட்ட சாம்பார் - எப்படி வெக்குறது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
உடலின் ஒவ்வொரு பகுதியில் கொழுப்புக்கள் தேங்க காரணமே இதாங்க.. விளக்கும் டாக்டர்! -
ஜூன் 29-ல் வக்ரமாகும் புதன்: இந்த 4 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
2 ஸ்பூன் ஓட்ஸ், 3 முட்டை இருந்தா.. காலையில் இந்த டிபனை செஞ்சு சாப்பிடுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
இன்றைய ராசிபலன் 23 ஜூன் 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க ரொம்ப கவனமா வாகனம் ஓட்டணும் -
புதன் பெயர்ச்சி இன்று முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பண மழை கொட்டப்போகுது.. -
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும்
சனி வக்ரமாவதால் அடுத்த 5 மாதம் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்தில் ரொம்பவும் கவனமா இருக்கணும்..
Saturn retrograde 2023: வேத ஜோதிடத்தில், சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவரது இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒருவரது வாழ்வில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த சனி பகவான் தற்போது தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.
இந்நிலையில் சனி பகவான் 2023 ஜூன் 17 ஆம் தேதி கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் சனி பகவான் நவம்பர் வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடைந்து நேர்பாதையில் பயணிப்பார்.

கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, நற்பலன்களை விட கெடுபலன்கள் அதிகம் கிடைக்கும். அதுவும் மனித வாழ்வில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் சனி பகவான் வக்ரமாவதால், அடுத்த 5 மாத காலம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மோசமாக, பண இழப்புக்களை சந்திக்க வைக்கும் காலமாக இருக்கும்.
இப்போது சனி வக்ர காலத்தில் எந்த ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும், அதுவும் எந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்பதைக் காண்போம். உங்கள் ராசியும் இதில் உள்ளதா என்பதை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் மேஷ ராசிக்காரர்களுக்கு நிதி இழப்புகள் ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன. மேலும் திருமண வாழ்க்கை மோசமாக பாதிக்கப்படும். தம்பதியர்களிடையே சண்டைகள் அதிகரிக்கும். இக்காலம் சற்று சவாலானதாக மற்றும் பதற்றம் நிறைந்ததாக இருக்கும். முக்கியமாக நிதி நிலை மோசமாக பாதிக்கப்படும். முதலீடுகளை செய்வதைத் தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால் பண இழப்புகளை சந்திக்க நேரிடும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலமானது மிதுன ராசிக்காரர்களுக்கு சிரமமானதாக இருக்கும். பல சவால்களை எதிர்கொள்ள நேரிடும். நிதி விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. பணம் தொடர்பான எந்த முடிவுகளையும் விவேகத்துடனும் எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இழப்புகளை சந்திக்க நேரிடும். அவசரப்பட்டு எந்த முடிவுகளையும் இக்காலத்தில் எடுக்காதீர்கள். பொறுமையைக் கையாண்டால், சமாளிக்கலாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலம் சற்று சவாலானதாக இருக்கும். தாயுடனான உறவு சற்று மோசமாக வாய்ப்புள்ளது. இக்காலத்தில் சொத்து விஷயம் மற்றும் பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் விஷயத்தில் சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில் அவசரப்பட்டு சிந்திக்காமல் பணத்தை முதலீடு செய்தால், இழப்பையே சந்திக்க நேரிடும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் நிதி தொடர்பான சவால்களை சந்திக்க நேரிடும். குடும்ப சூழல் சற்று பதற்றம் நிறைந்ததாக இருக்கும். நிதி விஷத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். தேவையில்லாத செலவுகளைத் தவிர்க்க அறிவுறுத்தப்படுகிறது. இல்லாவிட்டால் நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும்.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்கள் பலவிதமான சவால்களை சந்திக்கக்கூடும். நிதி நிலை, மன நிலை மற்றும் உடல் நிலையில் பிரச்சனைகளை சந்திக்க வைக்கும் வாய்ப்புள்ளது. மொத்தத்தில், கஷ்டங்களை சந்திக்க தயாராகிக் கொள்ளுங்கள். ஏனெனில் இக்காலத்தில் சனி பகவான் பல சோதனைகளை அளிப்பார். மன உறுதியுடன் எதிர்கொண்டால் சமாளிக்கலாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications