Latest Updates
-
ஜூன் 17-ல் உருவாகும் அரிய கிரக சேர்க்கையால் அற்புதமான நன்மைகளை அடையப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
கோவை அன்னபூர்ணா ஹோட்டல் வெஜ் குருமா ரெசிபி - இப்படி செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு டக்கரா இருக்கும் -
இனிப்புகளின் ராஜா என்று அழைக்கப்படும் இனிப்பு எது தெரியுமா? உங்களுக்கு இந்த இனிப்பு பிடிக்குமா? -
எந்த கீரை வாங்கினாலும் இப்படி ஒருவாட்டி செய்யுங்க.. பிடிக்காதவங்களும் கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஜூலை 27-ல் நடக்கும் சனி வக்ர பெயர்ச்சி: இந்த 4 ராசிக்காரர்களின் கனவு நனவாகப்போகுது..! -
இந்த 4 மாதங்களில் பிறந்த பெண்கள் மிகச்சிறந்த அம்மாக்களாக இருப்பார்களாம் - நீங்க பிறந்த மாதம் என்ன? -
முதலைகள் ஏன் கற்களை விரும்பி சாப்பிடுகின்றன தெரியுமா? இதுக்குப் பின்னாடி இப்படி ஒரு காரணம் இருக்கா? -
International Yoga day 2026: வாய்வு தொல்லையால் அவதிப்படுகிறீர்களா? அப்ப தினமும் இந்த யோசனங்களை செய்யுங்க.. -
சௌ சௌ வாங்குனா இந்த செட்டிநாடு பொரிச்ச குழம்பு செய்யுங்க - சாதம், டிபன் எல்லாத்துக்கும் சூப்பரா இருக்கும் -
ஜூன் 29-ல் நடக்கப்போகும் புதனின் வக்ர பெயர்ச்சியால் செல்வத்தையும், புகழையும் அடையப்போகும் 4 ராசிகள் இவங்கதான்
சனி வக்ரமாவதால் ஜூன் 17 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதா இருக்கப் போகுது..
Saturn Retrograde In Aquarius 2023: நவகிரகங்களில் சனி மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு மாற 2 1/2 ஆண்டுகள் ஆகும். இதனால் சனியின் ராசி மாற்றம் அல்லது சனியின் இயக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள் அனைத்து ராசிகளிலுமே நன்கு காணப்படும்.
அந்த வகையில் நீதிமான் சனி பகவான் 2023 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் கும்ப ராசிக்குள் நுழைந்தார். கும்ப ராசியில் நுழைந்த சில நாட்களிலேயே சனி அஸ்தமனமானார். அதன் பின் மார்ச் மாதம் சனி உதயமானார்.

தற்போது கும்ப ராசியில் பயணித்து வரும் சனி பகவான் ஜூன் மாதம் வக்ரமாகவுள்ளார். அதாவது பின்னோக்கி பயணிக்கவுள்ளார். கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும். அதில் சில ராசிக்காரர்களுக்கு நன்றாகவும், சிலருக்கு மோசமாகவும் இருக்கலாம்.
சனி பகவான் 2023 ஜூன் 17 ஆம் தேதி இரவு 10.48 மணிக்கு கும்ப ராசியில் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் நவம்பர் மாதம் வரை இருந்து, பின் வக்ர நிவர்த்தி அடையவுள்ளார். சனி வக்ரமாவதால் எந்த ராசிக்காரர்கள் நல்ல பண பலன்களையும், அதிர்ஷ்டத்தையும் பெறவுள்ளார்கள் என்பதை இப்போது காண்போம்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 வீட்டில் புதன் வக்ரமாகிறார். இதனால் இதுவரை சனி வழங்கவிருந்த நற்பலன்கள் இனிமேல் கிடைக்கப் போகிறது. வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புக்களும் கிடைக்கும். நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் ஆரோக்கியம் சற்று மோசமடையும். பரம்பரை சொத்துக்கள் கிடைக்கும் வாய்ப்புக்கள் உள்ளன. நீண்ட நாட்களாக சிக்கிய பணம் திரும்ப கிடைக்கும். பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் நிறைய நன்மைகள் கிடைக்கும் வாய்ப்புள்ளன. நிலுவையில் இருந்த வேலைகள், வெற்றிகரமாக முடிக்கப்படும். வாழ்க்கைத் துணையுடன் சந்தோஷமாக நேரத்தைக் கழிப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்கான முழு பலனும் ஜூன் மாதத்திற்கு பின் கிடைக்கும். எக்காரணம் கொண்டும் யாருக்கும் கடன் கொடுத்துவிடாதீர்கள்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் ஜூன் மாதத்திற்கு பின் தனுசு ராசிக்காரர்கள் பலவிதமான நன்மைகளை மற்றும் சந்தோஷங்களைப் பெறவுள்ளார்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறப் போகிறது. பணிபுரிபவர்களுக்கு அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் முழு ஆதரவு கிடைக்கும்.
பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வுக்கான வாய்ப்புக்களும் உள்ளன. நிலுவையில் உள்ள வேலைகள் மீண்டும் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக முடிக்கப்படும். மாணவர்கள் தேர்வில் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். கடின உழைப்பால் உயரங்களைத் தொடுவீர்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications