Latest Updates
-
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்.. -
இன்றைய ராசிபலன் 25 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ராஜயோகம் கூடிவரப்போகுதாம் -
செவ்வாய் மேஷ ராசிக்கு செல்வதால் கோடீஸ்வர யோகத்தை பெறப்போகும் 4 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது? அதற்கான காரணம் என்ன தெரியுமா? -
ஏப்ரல் இறுதியில் குரு-புதன் சேர்க்கையால் உருவாகும் அரிய ராஜயோகம்: இந்த 3 ராசிகளின் வருமானம் உயரும்! -
வெயில் காலத்தில் திருமணமா? இந்த 5 விஷயங்களைச் செய்யாவிட்டால் விசேஷமே வீணாகிவிடும்! -
மட்டன் சுவையை மிஞ்சும் சோயா உருளைக்கிழங்கு குருமா ரெசிபி - செஞ்சு பாருங்க, செமையா இருக்கும் -
பொருளாதாரச் சுரண்டல் இனி குடும்ப வன்முறை! மனைவியிடம் கையேந்த வைக்கும் கணவர்களுக்கு நீதிமன்றம் கொடுத்த செக்! -
செவ்வாயின் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 3 ராசிக்கு அதிர்ஷ்டகாத்து வீசும்! உங்க ராசியும் இதுல இருக்கா?
சனி பகவானின் அருளால் ஜூன் 17 முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு கைநிறைய சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கப்போகுது..
Saturn Retrograde In Aquarius 2023: நவகிரகங்களில் நீதிமான் என்று அழைக்கப்படும் சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் நுழைந்து பயணித்து வருகிறார். இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.
கிரகங்களிலேயே சனி பகவான் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார். இதனால் சனி பகவானின் தாக்கம் மனித வாழ்வில் சற்று அதிகமாக இருக்கும். அதுவும் சொந்த ராசியில் சனி வக்ர நிலையில் சுமார் 5 மாத காலம் பயணிக்கவுள்ளார். வக்ர நிலையில் கிரகங்கள் சற்று பலவீனமாக இருக்கும் மற்றும் அதனால் கிடைக்கவிருக்கும் நற்பலன்களில் தடைகள் ஏற்படும்.

ஆனால் சனி பகவான் கும்ப ராசியில் வக்ரமாகும் போது, சில ராசிக்காரர்களுக்கு செல்வ நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதோடு, நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இப்போது 2023 ஜூ ன் மாதம் வக்ரமாகும் சனியால் எந்த ராசிக்காரர்கள் புதிய வேலை வாய்ப்பைப் பெறப் போகிறார்கள் என்பதைக் காண்போம்.
ரிஷபம்
ரிஷப ராசின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். அதுவும் நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். வியாபாரத்தில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். வணிகர்கள் நல்ல பெரிய லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தத்தைப் பெறுவார்கள். பரம்பரை தொழில் செய்து வருபவர்களுக்கு, இக்காலம் மிகவும் பொன்னான காலமாக இருக்கும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் குழந்தைகளால் சில நற்செய்திகளைப் பெறுவீர்கள். அதே சமயம், திருமணமான தம்பதிகள் குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பினால், அவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்புள்ளது.
புத்திசாலித்தனத்தால் இக்காலத்தில் ஒவ்வொரு விஷயத்திலும் வெற்றி பெறுவார்கள். பணத்தை நன்கு சேமிக்க முடியும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். ஏற்கனவே பணிபுரிபவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை வாய்ப்பு தேடி வரும். வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புக்கள் அமையும். திருமணமான தம்பதிகளுக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் நீதிமன்ற வழக்குகளில் நல்ல வெற்றி கிடைக்கும். எதிரிகளை வீழ்த்தி நல்ல வெற்றியைக் காண்பீர்கள். உங்களின் தைரியம் இக்காலத்தில் அதிகரித்து இருக்கும். வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் வாய்ப்பள்ளது. புதிதாக ஏதாவது செய்ய விரும்பினால், அதைத் தொடங்க இது சிறந்த காலம். அதிஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வேலைக் கிடைக்காமல் இதுவரை அலைந்து கொண்டிருந்தால், சனியின் அருளால் இனி நல்ல வேலை கிடைக்கும். இக்காலத்தில் உங்கள் குழந்தைகள் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications