Latest Updates
-
செவ்வாய் சுக்கிரனால் உருவாகும் நவபஞ்சம ராஜயோகம்: இந்த 4 ராசிக்கு செல்வம் பெருகும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanti 2026: இந்த 4 ராசிக்காரங்க பகவான் கிருஷ்ணரால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
1 கப் அவலும், 1/4 கப் எள்ளும் இருந்தா.. கிருஷ்ண ஜெயந்திக்கு இந்த ஸ்வீட் செய்யுங்க.. -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் உன்னியப்பம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - நெய் மணக்க சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசி பெண்கள் அவங்க முன்னாள் காதலை மறக்கவே மாட்டார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
Krishna Jayanthi 2026: கிருஷ்ண ஜெயந்திக்கு என்னலாம் செய்வாங்க-ன்னு தெரியுமா? -
2026-ன் சூப்பர் எல் நினோ இந்தியாவிலும், உலகிலும் ஏற்படுத்தப்போகும் பாதிப்புகள் - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் -
கிருஷ்ண ஜெயந்தி ஸ்பெஷல் அவல் பாயாசம் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செய்யுங்க.. -
முகலாய அரசர்கள் விரும்பி சாப்பிட்ட ஷாஹி புலாவ் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வேற லெவலில் இருக்கும் -
கால்களில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்கிறீங்களா? அப்ப உடம்புல இந்த பிரச்சனை இருக்க வாய்ப்பிருக்கு.. உஷார்
சனி வக்ரமாவதால் ஜூன் 17 முதல் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட காலம் தொடங்குது...
Saturn Retrograde In Aquarius 2023: வேத ஜோதிடத்தின் படி, சனி மிகவும் மெதுவாக நகரும் கிரகம். சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை வழங்குவார். சனி பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு செல்ல 2 1/2 ஆண்டுகள் ஆகும்.
இதனால் சனியின் தாக்கமானது ஒருவரது வாழ்வில் சற்று அதிகமாக இருக்கும். அதுவும் சனியின் இயக்கத்தில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும், அது அனைவரது வாழ்விலும் நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்தும். தற்போது சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார்.

இந்நிலையில் ஜூன் 17 ஆம் தேதி சனி பகவான் கும்ப ராசியில் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். சனியின் வக்ர நிலையின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே கட்டாயம் தெரியும். அதுவும் சனி வக்ர நிலையில் நவம்பர் வரை இருப்பார். சனி வக்ரமாவதால் கெடுபலன்களை அளித்தாலும், சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமானதாக இருக்கும். இப்போது அந்த ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியின் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இனிமேல் இந்த ராசிக்காரர்களை சனி பகவான் கடினமாக உழைக்க வைப்பார் மற்றும் அதற்கான பலன்களையும் பெற வைப்பார். பணிபுரிபவர்களுக்கு இக்காலம் மிகவும் சாதகமாக இருக்கும். வியாபாரிகளின் தொழில் விரிவடையும் வாய்ப்புக்கள் உள்ளன. நிதி நிலை வலுவாகும் வாய்ப்புள்ளது. நிறைய பணத்தை சம்பாதிக்கும் வாய்ப்புக்கள் உள்ளன.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இனிமேல் உங்களின் அதிர்ஷ்டம் சற்று குறைந்தாலும், மோசமான பலன்களைப் பெறமாட்டீர்கள். சில வேலைகளில் தோல்விகளை சந்திக்க வாய்ப்புள்ளது. ஆனால் அந்த தோல்வி நீடிக்காது, ஒரு கட்டத்தில் வெற்றி காண்பீர்கள். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பணிபுரிபவர்கள் தங்கள் வேலையில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதானால் வியாபாரிகள் தங்கள் தொழிலில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பார்கள். முடிக்கப்படாத சில வேலைகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். பணிபுரிபவர்களுக்கு இனிமேல் பொன்னான காலமாக இருக்கும். பணியிடத்தில் சிறப்பான செயல்பாட்டினால், நல்ல பாராட்டையும், மதிப்பையும் பெறுவிர்கள். ஆனால் திருமண வாழ்க்கையில் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இனிமேல் பல நற்செய்திகளைப் பெறுவீர்கள். தொழிலை மாற்ற நினைத்தால், இனிமேல் அதற்கு சாதகமான காலமாக இருக்கும். உங்களின் அனைத்து முயற்சிகளுக்கும் நல்ல வெற்றி கிடைக்கும். பணிபுரிபவர்கள் சம்பள உயர்வைப் பெறலாம். வேலை தேடுபவர்களுக்கு நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்கும். மொத்தத்தில் இக்காலம் அதிர்ஷ்டமானதாக இருக்கும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications