Latest Updates
-
குரு-புதன் உருவாக்கும் சக்தி வாய்ந்த ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது... -
தமிழ்நாட்டில் உள்ள சர்க்கரை நோயை குணப்படுத்தும் 1,300 ஆண்டுகள் பழமையான இந்த கோயில் பற்றி தெரியுமா? -
1 கப் ரவை இருந்தா.. ஈவ்னிங் கண்டிப்பா இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. செமயா இருக்கும்.. -
1 வருடம் கழித்து மீனம் செல்லும் சூரியன்: மார்ச் 15 முதல் இந்த 4 ராசிக்காரங்க எச்சரிக்கையா இருக்கணும்.. -
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்...
சனி வக்ரமாவதால் இன்று முதல் அடுத்த 5 மாசம் இந்த ராசிக்காரங்க கொஞ்சம் உஷாரா இருக்கணும்...
Saturn Retrograde In Aquarius 2023: ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனிச்சிறப்பு உண்டு. சனி பகவான் ஒருவரது செயல்களுக்கு ஏற்ப பலன்களை அளிப்பவர். நவகிரகங்களிலேயே சனி பகவான் மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் 2 1/2 ஆண்டுகளுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார் என்பதால், இவரது ராசி மாற்றத்தின் தாக்கம் அனைவத்து ராசிகளிலுமே நன்கு தெரியும்.
தற்போது சனி பகவான் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இந்த கும்ப ராசியில் 2025 ஆம் ஆண்டு வரை இருப்பார். இந்நிலையில் சனி பகவான் 2023 ஜூன் 17 ஆம் தேதி, கும்ப ராசியில் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இந்த வக்ர நிலையில் நவம்பர் வரை இருப்பார்.

கிரகங்கள் வக்ர நிலையில் சற்று பலவீனமாகவே இருக்கும். இருப்பினும் சனி வக்ரமாவதால் அதன் தாக்கம் 12 ராசிகளிலுமே காணப்படலாம். அந்த தாக்கம் நல்லதாகவோ, கெட்டதாகவோ இருக்கலாம். இப்போது கும்ப ராசியில் வக்ரமாகும் சனி பகவானால் அடுத்த 5 மாதம் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் என்பதைக் காண்போம்.
மேஷம்
மேஷ ராசியில் 11 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களின் வருமானத்தில் உயர்வு ஏற்படுவதோடு, வேலையிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய நபர்களுடனான தொடர்பு அதிகரிக்கும். பணியிடத்தில் உயர் அதிகாரிகளுடனான உறவு வலுபெறும். ஆனால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகள் ஏறுபடலாம். குழந்தைகள் தொடர்பான கவலைகள் அதிகரிக்கும். காதல் விஷயங்களில் அலட்சியம் அதிகரிக்கும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசியின் 10 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் அதிக வேலைப்பளு காரணமாக மிகுதியாக சோர்வடையக்கூடும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். உங்களின் திட்டங்களை ரகசியமாக வைத்து செயல்பட்டால், வெற்றி கிடைக்கும். நிலம், சொத்து தொடர்பான பிரச்னைகள் தீரும். வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும்.
மிதுனம்
மிதுன ராசியின் 9 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் மதம் மற்றும் ஆன்மீகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உங்களின் முடிவுகளும், வேலைகளும் நல்ல பாராட்டைப் பெறும். உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளர விடாதீர்கள். தொண்டுகளில் நாட்டம் அதிகரிக்கும். பெற்றோருடனான உறவை சீர்குலைய விடாதீர்கள். வெளியூர் பயணங்களால் நல்ல ஆதாயம் கிடைக்கும். வெளிநாடு செல்ல முயற்சித்தால், அந்த விஷயத்தில் வெற்றி கிடைக்கும்.
கடகம்
கடக ராசியின் 8 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு அவ்வளவு நன்றாக இருக்காது. ஆரோக்கியத்தில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். பணியிடத்தில் சதியால் பலியாவதைத் தவிர்த்திடுங்கள். பரம்பரை சொத்து பிரச்சனை தீவிரமாகலாம். இக்காலத்தில் எந்த பிரச்சனையையும் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லாதீர்கள். இல்லாவிட்டால் இழப்பு உங்களுக்கு தான். உங்களைச் சுற்றியுள்ளவர்களே உங்களை ஏமாற்றுவார்கள் என்பதால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசியின் 7 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் இன்னும் சற்று தாமதமாகும். மாமியாருடனான உறவை பாழாகவிடாதீர்கள். கூட்டு வியாபாரம் செய்வதில் இருந்து விலகி இருங்கள். அரசு தொடர்பான வேலைகள் சற்ற தாமதமாகலாம். இக்காலத்தில் பொறுமையும், நிதானமும் மிகவும் முக்கியம். பிரச்சனைகளில் இருந்து விலகி இருக்க முயற்சி செய்யுங்கள். நீதிமன்றம் வரை எந்த பிரச்சனையையும் கொண்டு செல்லாதீர்கள். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, மூட்டு வலியில் கவனமாக இருக்க வேண்டும்.
கன்னி
கன்னி ராசியின் 6 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலம் உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இக்காலத்தில் புதிய வேலையை தொடங்கினால், தொழில் தொடங்க நினைத்தால், அல்லது புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட நினைத்தால், அதற்கு இது சாதகமான காலமாக இருக்கும். தாய்வழியில் இருந்து விருப்பத்தகாத செய்திகளைப் பெறக்கூடும். கடினமான பயணத்தையும் மேற்கொள்ள வேண்டியிருக்கும். அதிக கடன் வாங்குவதைத் தவிர்க்க வேண்டும்.
துலாம்
துலாம் ராசியின் 5 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலம் சற்று கலவையாக இருக்கும். தொழில் ரீதியாக இக்காலம் நன்றாக இருக்கும். ஆனால் காதல் விஷயங்களில் அலட்சியம் அதிகம் இருக்கும். காதல் திருமணம் செய்ய நினைத்தால், அதில் தடைகளை சந்திக்க நேரிடும். மாணவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற அதிக முயற்சி எடுக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கருத்து வேறுபாடுகளை வளரவிடாதீர்கள். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 4 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து விரும்பத்தகாத செய்திகளை பெறக்கூடும். வேலைகளை வெற்றிகரமாக முடிக்க கொஞ்சம் போராட வேண்டியிருக்கும். பயணத்தின் போது கவனமாக இருக்க அறிவுறுத்தப்படுகிறது. நிலம் தொடர்பான பிரச்சனைகள் தீரும். பெற்றோரின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
தனுசு
தனுசு ராசியின் 3 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி கிடைக்கும். துணிச்சல் அதிகரிக்கும். எடுக்கும் முடிவுகளும், செய்யும் பணிகளும் நல்ல பாராட்டைப் பெறும். கடினமான சூழ்நிலைகளையும் எளிதில் சமாளிப்பீர்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். வெளியூர் செல்லும் வாய்ப்புகள் உருவாகும். வெளிநாடு செல்ல எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
மகரம்
மகர ராசியின் 2 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் சனி பகவான் எதிர்பாராத நிதி நன்மைகளைத் தருவார். கடனாக கொடுத்த அல்ல சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். குடும்பத்தில் பிரச்சனைகள் மற்றும் மனக் குழப்பங்களை எங்காவது எதிர்கொள்ள வேண்டியிருக்கும். ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை, வலது கண் தொடர்பான பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். தேவையில்லாத சண்டைகளில் இருந்து விலகி இருங்கள். சொத்த தொடர்பான பிரச்சனைகளை பேசி தீர்த்துக் கொள்வது நல்லது.
கும்பம்
கும்ப ராசியின் முதல் வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் அதிக செலவு காரணமாக நிதி நெருக்கடியை சந்திக்க நேரிடும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் இன்னும் தள்ளிப்போகும். ஆனால் வேலை மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். இக்காலத்தில் உங்கள் ஆர்வத்தைக் கட்டுக்குள் வைத்து செயல்பட்டால், நல்ல வெற்றியைக் காணலாம். இந்த நேரத்தில் உங்கள் நண்பர்கள் யாரையும் நம்ப வேண்டாம் என்றும், அனுபவமுள்ள ஒருவரின் ஆலோசனையைப் பெற்ற பின்னரே எந்த வேலையையும் தொடங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறது. இந்த நேரத்தில் துணையுடன் கருத்து வேறுபாடு ஏற்படலாம், எனவே கோபத்தை கட்டுப்படுத்தவும்.
மீனம்
மீன ராசியின் 12 ஆவது வீட்டில் சனி வக்ரமாகிறார். இதனால் இக்காலத்தில் செலவுகள் அதிகரிக்கும். ஆனால் வேலைக்காக மேற்கொள்ளும் பயணங்கள் வெற்றியடையும். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்த அறிவுறுத்தப்படுகிறது. இக்காலகட்டத்தில் தைரியம் மற்றும் வீரம் அதிகரிக்கும். உடன்பிறந்தவர்களின் முழு ஒத்துழைப்பு கிடைக்கும். இந்த காலத்தில் எந்தக் கடனிலும் சிக்கிக் கொள்ளாதீர்கள். யாருக்கும் கடன் கொடுக்கவோ, வாங்கவோ வேண்டாம்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications











