Latest Updates
-
முகம் எப்பவும் பளிச்சுன்னு இருக்கணுமா? அப்ப இந்த நேச்சுரல் ஃபேஸ் வாஷ் யூஸ் பண்ணுங்க.. -
அரிசி மாவும், தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
அமெரிக்க டாலரில் $ சின்னம் ஏன் உள்ளது தெரியுமா? அதன் அர்த்தமும், வரலாறும் என்ன தெரியுமா? -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டப்போகுது! -
Varalakshmi Vratam 2026: வரலட்சுமி விரதத்தின் போது டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் -
முட்டை குழம்பை இந்த பக்குவத்துல செய்யுங்க.. மட்டன் குழம்பு ருசியில செமயா இருக்கும்.. -
உங்க கல்லீரலில் பிரச்சனை வரக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 3 காற்கறிகளை வாரந்தோறும் சாப்பிடுங்க.. -
பரங்கிக்காய் வாங்குனா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - டேஸ்ட் அட்டகாசமா இருக்கும் -
பாபா வங்காவின் கணிப்புப்படி பெட்ரோல் விலையில் என்னென்ன மாற்றம் வரப்போகிறது தெரியுமா? -
சிம்ம ராசிக்கு செல்லும் புதன்: ஆகஸ்ட் 22 முதல் அதிர்ஷ்டத்தை அள்ளப்போகும் 6 ராசிக்காரர்கள் யார்யார் தெரியுமா?
சனி உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகம்: ஜூன் முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றியும், பணமும் குவியும்..
Kendra Trikona Rajyog: வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றுவதோடு, அவ்வப்போது பின்னோக்கி வக்ர நிலையிலும் பயணிக்கும். அப்படி கிரகங்கள் பயணிக்கும் போது, அதன் காரணமாக சுப மற்றும் அசுப யோகங்களை உருவாக்கும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும்.
தற்போது சனி பகவான் தனது மூலதிரிகோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். இவர் வருகிற ஜூன் மாதம் பின்னோக்கி வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார். இதனால் கேந்திர திரிகோண ராஜயோகம் உருவாகவுள்ளது.

இந்த ராஜயோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப் போகிறது. இதன் விளைவாக செல்வம் பெருகும், தொழிலில் வெற்றிகள் குவியும். இப்போது சனி உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.
கும்பம்
சனி உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் கும்ப ராசிக்காரர்களுக்கு அற்புதமாக இருக்கும். அதுவும் இந்த யோகம் முதல் வீட்டில் உருவாகியிருப்பதால், தன்னம்பிக்கை வழக்கத்தை விட அதிகமாக இருக்கும். ஒவ்வொரு துறையிலும் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். தினசரி வருமானத்தில் நல்ல உயர்வு ஏற்படும். கடின உழைப்பிற்கான பலன் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் ஆதரவால் அனைத்து வேலைகளிலும் வெற்றி பெறுவீர்கள். பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புள்ளது. வாழ்க்கைத் துணையுடனான உறவு மேம்படும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு கேந்திர திரிகோண ராஜயோகமானது தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தைத் தரும். வேலை மற்றும் வணிகத்தில் நல்ல வெற்றி கிடைக்கும். திட்டங்கள் அனைத்தும் வெற்றிகரமாக முடிவடையும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும் வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக வேலை இல்லாமல் வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். அதே சமயம் பணிபுரிபவர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கவும் வாய்ப்புள்ளது. வியாபாரிகள் எதிர்பாராத லாபத்தைப் பெறுவார்கள்.
மிதுனம்
சனி உருவாக்கும் கேந்திர திரிகோண ராஜயோகத்தால் மிதுன ராசிக்காரர்களுக்கு இனிமையாக இருக்கும். முக்கியமாக அதிர்ஷ்டத்தின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். இதன் விளைவாக அனைத்து வேலைகளிலும் வெற்றி கிடைக்கும். வேலை மற்றும் வியாபாரம் தொடர்பாக நிறைய பயணங்களை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இந்த பயணங்கள் நல்ல நிதி நன்மைகளை வழங்குவதாக இருக்கும். போட்டியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் நல்ல மதிப்பெண்களைப் பெற்று வெற்றி பெறுவார்கள். இதுவரை தடைபட்டு வந்த வேலைகள் சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் முடிக்கப்படும்.
(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)



Click it and Unblock the Notifications