சனி பகவான் இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பை அள்ளி வழக்குவாராம்.. யூஸ் பண்ணிக்கோங்க..

Saturn Retrograde 2023: வேத ஜோதிடத்தில் சனி பகவானுக்கு தனி இடம் உண்டு. நவகிரகங்களிலேயே ஒருவரது பாவ, புண்ணிய செயல்களுக்கு ஏற்ப பாரபட்சம் பாராமல் பலன்களை வழங்கக்கூடியவர் சனி பகவான். நீதிமான் என்று அழைக்கப்படும் சனிபகவான் கிரகங்களிலேயே மிகவும் மெதுவாக நகரக்கூடியவர். இவர் ராசியை மாற்ற இரண்டரை ஆண்டுகள் ஆகும்.

சனி பகவான் 30 ஆண்டுகளுக்கு பின் தனது அசல் முக்கோண ராசியான கும்ப ராசியில் பயணித்து வருகிறார். அதுவும் வக்ர நிலையில் பயணித்து வருகிறது. இந்த வக்ர நிலையானது நவம்பர் வரை நீடித்திருக்கும். ஒருவரது ஜாதகத்தில் சனி பகவான் அசுப நிலையில் இருந்தால், அதன் விளைவாக பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கக்கூடும். அதுவே சுப நிலையில் இருந்தால், ஆண்டியும் அரசனாகக்கூடும்.

Saturn Retrograde 2023: Shani Dev Gives More Opportunity To These Zodiacs To Become Rich In Tamil

கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் போது சற்று பலவீனமாக இருக்கும். அந்த வகையில் சனி வக்ரமாக இருப்பதால், அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே தெரியும். குறிப்பாக சனி வக்ர நிலையில் இருப்பதால், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமான பலன்கள் கிடைக்கும். முக்கியமாக 3 ராசிக்காரர்கள் சனி பகவானால் பணக்காரராகும் வாய்ப்புக்களைப் பெறுவார்கள். இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

ரிஷபம்

சனி வக்ர நிலையில் இருப்பதால், ரிஷப ராசிக்காரர்கள் அபரிமிதமான நற்பலன்களைப் பெறுவார்கள். எந்த ஒரு வேலையிலும் நல்ல வெற்றியைக் காண்பார்கள். முன்னேற்றத்திற்கான பல வாய்ப்புக்கள் வந்து கொண்டே இருக்கும். இதனால் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு, பணக்காரராகும் வாய்ப்புள்ளது. பணிபுரிபவர்களின் நம்பிக்கை அதிகரிக்கும். இக்காலத்தில் எந்த முடிவுகளை எடுத்தாலும், அது நன்மையைத் தரும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். மனநிலை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.

துலாம்

சனி வக்ரமாக இருப்பதால், துலாம் ராசிக்காரர்கள் தங்கள் வாழ்க்கையில் பலவிதமான மகிழ்ச்சியை பெறுவார்கள். பணிபுரிபவர்கள் நல்ல சம்பளத்துடனான வேலை வாய்ப்புக்களைப் பெறக்கூடும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல லாபத்தைக் காணக்கூடும். இக்காலத்தில் சனி பகவானின் பரிபூர்ண அருள் கிடைக்கும். இதனால் நல்ல ஆடம்பரமான வாழ்க்கையை வாழக்கூடும். வீடு, நிலம், வாகனம் போன்றவற்றை வாங்கும் வாய்ப்புக்கள் கிடைக்கலாம். சிக்கிய பணம் உங்களைத் தேடி வரும். இக்காலத்தில் குடும்ப உறுப்பினர்களின் முழு ஆதரவும் கிடைக்கும்.

மகரம்

மகர ராசியின் அதிபதி சனி. இந்த ராசிக்காரர்களுக்கு ஏற்கனவே சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இந்த சனி வக்ர நிலையில் இருப்பதால், இக்காலத்தில் இந்த ராசிக்காரர்கள் நல்ல லாபத்தைக் காண்பார்கள். எந்த ஒரு வேலையை செய்தாலும், சிறு முயற்சியிலேயே நல்ல வெற்றியைக் காண்பார்கள். பணிபுரிபவர்களுக்கு இக்காலத்தில் நல்ல சம்பளத்துடனான வேலை வாய்ப்புக்கள் தேடி வரும். மொத்தத்தில் இக்காலத்தில் சனி பகவானின் அருளால் வாழ்க்கை சிறப்பாகவும், செழிப்பாகவும் இருக்கும்.

(பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளன மற்றும் நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. தமிழ் போல்ட்ஸ்கை கட்டுரை தொடர்பான தகவலை உறுதிப்படுத்தவில்லை. மேலும் எங்கள் ஒரே நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. அதை வெறும் தகவலாக மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும். எந்தவொரு தகவலையும் அனுமானத்தையும் பயிற்சி செய்வதற்கு அல்லது செயல்படுத்துவதற்கு முன், தயவுசெய்து சம்பந்தப்பட்ட நிபுணரை அணுகவும்.)

Story first published: Wednesday, July 19, 2023, 9:22 [IST]
Desktop Bottom Promotion